ஜல்லிக்கட்டு போராட்டத்தை கொச்சை படுத்துகிறதா பிக்பாஸ்?

August 02, 2017

இன்று நாட்டில் நடக்கும் எல்லா அவலங்களையும் மறக்கடித்துவிட்டது விஜய் டி.வி.யில் காட்டப்பட்டு வரும் பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ.

ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்களை விட நிகழ்ச்சியை நடத்தும் கமல், ஜல்லிக்கட்டு வீரத்தமிழச்சி ஜுலியானா ஆகியோர் நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டினர்.

ஆனால் நிகழ்ச்சி போகும் போக்கில் நம் எதிர் பார்த்ததற்கு மாறாக சில நிகழ்வுகள் அரங்கேரி வருகின்றன.

நேற்றைய எபிசோடில் அனைவருக்கும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் டாஸ்க் கொடுத்தனர், இதை ஏதோ ஒரு கேலியாக அனைவரும் செய்தது பார்த்தவர்கள் எல்லோரையும் காயப்படுத்தியது.

அதைவிட யார் யாருக்கு என்ன செட் ஆகும் என்பதை நன்கு உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது, அப்படித்தான் ஓவியாவிற்கு காதல் தோல்வி, என அவரை ஆரவ் பின் சுற்றவிட்டு அவருடைய பெயரை டேமேஜ் செய்கின்றனர்.

ஏனெனில் ஒரு தொலைக்காட்சி TRP என்பது ஒருவரை நம்பி இருக்ககூடாது என்பதில் அந்த தொலைக்காட்சி கவனமாக உள்ளது.

இதோடு நிறுத்தியிருந்தாலும் பரவாயில்லை, ஆனால், தமிழகமே ஜல்லிக்கட்டிற்காக போராடிய நேரத்தில், அதில் ஜுலியும் ஒருவராக போராடியது நாம் அனைவரும் அறிந்ததே, அதன் மூலம் தான் அவர் இந்த நிகழ்ச்சிக்கும் வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால், அவருக்கு போராடும் பைத்தியம் என்று கதாபாத்திரம் கொடுத்து, அவர் பைத்தியம் போல் போராடி, மறைமுகமாக ஜல்லிக்கட்டு போராட்டத்தை அசிங்கப்படுத்துவது போல் உள்ளது.

இதை புரிந்துக்கொண்ட பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், காயத்ரி பரணி மீது புகார் கொடுத்தார், அதை தொடர்ந்து அவர் வீட்டை விட்டு வெளியேற சில உயிருக்கு ஆபாத்தான முயற்சிகளை எடுத்தார்.

இதுநாள் வரை கமல்ஹாசன் இதுக்குறித்து கேட்கவே இல்லை, ஆனால், மக்களின் பிரதிப்பலிப்பாக சமீபத்தில் உள்ளே சென்ற பிந்து மாதவி காயத்ரியிடம் கேட்டார்.

ஆனால், அதற்கு காயத்ரியோ மிகவும் சாதரணமாக அவர் சரியில்லாதவர், கால் தானே உடைந்தால் உடையட்டும் என்றார், அதே நேரத்தில் ஜுலி ரெட் கார்பேட்டில் இருக்கும் போது ஓவியா பிடித்து இழுத்தப்போது அதை காயத்ரி ஊதிப்பெரிதாக்கினார்.

எப்போதும் அமைதியாக இருக்கும் கணேஷ் கூட, பொறுமை இழந்து இது மனிதாபிமானம் அற்ற செயல், என கூறினார், ஆனால், அவர் கூட பரணி விஷயத்தில் அமைதியாக தான் இருந்தார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் லட்சக்கணகான இளைஞர்கள் போராடிய போதும் ஜுலி மட்டுமே ஊடகங்களில் ஹைலைட் ஆக்கப்பட்டார். அவரே பிக்பாசில் கலந்துகொண்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இப்போது அவரை வில்லிக்கு நிகராக காட்டப்படுவதன் மூலம் ஜல்லிக்கட்டு போராளிகளை கொச்சைப் படுத்துவது போன்றதாக உள்ளது என்றும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மத்திய மாநில அரசுகளை விமர்சனம் செய்ததால் இதன் பின்னணியில் மத்திய அரசு உள்ளது என்ற கருத்தும் நிலவுகிறது.

-தல தளபதி

 

 

தற்போது வாசிக்கப்படுபவை!