டாக்டர் கஃபீல்கான் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும், யோகி அரசின் தலைகுனிவும்!

Sunday, 20 August 2017 16:51 Published in சிறப்பு

உத்திர பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 70 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் டாக்டர் கஃபீல்கானை குற்றவாளியாக உ.பி. அரசு சித்தரித்திருந்த நிலையில் கஃபீல்கான் குற்றமற்றவர் என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

உத்திர பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசின் நிர்வாக சீர்கேட்டின் காரணமாக 70 மேற்பட்ட குழந்தைகள் போதிய ஆக்சிஜன் இல்லாமல் BRD மருத்துவமனையில் உயிரிழந்தது. இந்த உயிரிழப்பு எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்காமல் இருந்ததற்கு காரணமாக போற்றப்படும் நபர் BRD மருத்துவமனையின் டாக்டர் கஃபீல் கான் ஆவார். இவர் இந்த சம்பவம் நடைபெற்ற அன்று நிலைமையின் தீவிரத்தன்மையை உணர்ந்து தனது சொந்த பணத்தை செலவிட்டு அவரது முயற்ச்சியில் பல இடங்களுக்குச் சென்று ஆக்சிஜன் சிலிண்டர்களை பெற்று வந்து குழந்தைகளின் உயிரை காத்துள்ளார்.

காப்பாற்றப்பட்ட குழந்தைகளின் பெற்றோரல் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவும் டாக்டர் கஃபீல்கானை கொண்டாடியது. ஒரு முஸ்லிம் கொண்டாடப்படுவதை பாஜக அரசு எப்படி விரும்பும்? விளைவு, டாக்டர் கஃபீல்கானின் கவனக்குறைவால்தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக ஆதாரமற்றா குற்றச்சாட்டுகளை வைத்த யோகி ஆதித்யநாத் அரசு டாக்டர் கஃபீல்கானை பணிநீக்கம் செய்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதற்கு முன்பு குழந்தைகளின் மரணங்கள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஏற்ப்பட்டது அல்ல என்றும் சுகாதாரக் கேட்டினாலும் தூய்மையின்மையாலும் ஏற்பட்டது என்று உத்திர பிரதேச யோகி அரசு தங்களின் குறைபாட்டை மறைக்கவும் முற்பட்டது. அப்படியானாலும் கூட இந்த அசம்பாவிதம் நடைபெற்ற கோரக்பூர் தொகுதி கடந்த 20 வருடங்களாக அதித்யநாத் வெற்றி பெற்ற தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. தூய்மை இந்தியா திட்டத்தை நடிகர்களை வைத்து பிரபலப் படுத்திய பாஜக ஆட்சியில் கடந்த 20 வருடங்களாக பாஜக ஆண்டு வந்த பகுதியில் சுகாதாரக் கேட்டினால் இத்துனை குழந்தைகள் மரணித்துள்ளனர் என்பது பாஜக அரசிற்கு தான் தலைகுனிவு.

இந்த அவமானங்களை மறைப்பதற்காகத் தான் அவர்கள் தங்களின் போலிச் செய்தி எந்திரங்களில் அவர்களின் கற்பனைக் குதிரைகளை ஓட விட்டு டாக்டர் கஃபீல் கானிற்கு எதிராக பல கற்பனை கதைகளை புனைந்தனர்.

கஃபீல் கான் மீதான இவர்களின் இந்த குற்றச்சாட்டு இத்துடன் நின்றுவிடவில்லை. இவர் கற்பழிப்பு வழக்கில் சிக்கியவர் என்றும் அகிலேஷ் யாதவ் கட்சியுடன் கூட்டு வைத்துக்கொண்டு அதித்யநாத் அரசிற்கு களங்கம் விளைவிக்கவே இந்த குழந்தைகளை அவர் கொலை செய்துள்ளார் என்றும் இவர் மீதான குற்றச்சாட்டு பட்டியலை அடுக்கிக் கொண்டே போயினர்.

இவர்கள் கூறுவது போல கான் திரவ ஆக்சிஜன் திருடினார் என்றால் அதற்கான ஆதாரம் எங்கே? அதனை அவர் எங்கே எடுத்துச் சென்றார் எவ்வாறு அவர் எடுத்துச் சென்றார்? இது தொடர்பாக இத்துனை வருடங்களில் அவர் மீது ஒரு புகார் கூட பதிவு செய்யப்படவில்லயே ஏன்? என்ற கேள்விகளும் எழுந்தன.

எந்த ஒரு நாட்டிலும் இது போன்ற கவனக்குறைவால் ஏற்பட்ட இந்த மரணங்கள் கொலையாகவே கருதப்படும். ஆனால் இந்த மரணங்களை சாதாரானமாக்கும் முயற்ச்சிகளில் பாஜக ஈடுபட்டது.

அதேவேளை எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவதுபோல உத்திர பிரதேச மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சித்தார்த்நாத் இது போன்ற மரணங்கள் ஆகஸ்ட் மாதம் நிகழ்வது இயல்பு தான் என்று கூறினார். பாஜக தலைவர் அமித்ஷா வோ இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் இது போன்ற மரணங்கள் நடப்பது சாதாரணம் என்று கூறினார். உலகில் எந்த மூலையில் ஏதனும் ஆம்பாவிதங்கள் நடைபெற்றால் அதற்கு தனது வருத்தத்தை ட்விட்டரில் தெரிவிக்கும் மோடி, இந்த நிகழ்வு குறித்து ட்விட்டரில் மெளனம் சாதித்தார்.

இந்நிலையில்தான் இது தொடர்பாக விசாரனை நடத்திய காவல்துறை டாகடர் கஃபீல் கான் குற்றமற்றவர் என்று கூறியுள்ளது. மேலும் அவர் மீது சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றது என்றும் இந்த குற்றச்சாட்டுகள் அவருக்கெதிரான சதி என்றும் கூறி உத்திர பிரதேச அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

தன்னலம் பாராத டாக்டர் கானின் இந்த சேவை அரசியல் காரணங்களுக்காக திரித்துக் கூறப்படுவது மிக அருவருப்பானது. தங்களால் செய்ய இயலாததை ஒரு முஸ்லிம் மருத்துவர் செய்துவிட்டார் என்கிற ஆதங்கத்தின் வெளிப்பாடாகத்தான் டாக்டர் கஃபீல்கான் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நினைவூட்டுகின்றன.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.