ஆடம்பர பொருட்களால் ஏற்படும் விபரீதங்கள் - சிறுவன் படுகொலை: உணர்வார்களா பெற்றோர்?

Wednesday, 20 September 2017 01:25 Published in சிறப்பு

அளவுக்கு அதிகமாக பிள்ளைகளின் மீதான செல்லம், சிறுவன் மாஜித் முஹம்மது போன்ற சிறுவர்களை கொலை செய்யும் அளவுக்கு தூண்டப்பட்டுவிடுகிறது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நாச்சிகுளத்தைச் சேர்ந்த அப்துல் ஜலில் மகன் மாஜித் முகமது, அதே பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். இதே போல், அக்பர் அலி என்பவரின் மகன் அபுதுல்கலாம் ஆசாதும் அதே பள்ளியில் படித்து வந்தார். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.

இவர்களில் அபுதுல்கலாம் ஆசாத், வசதி படைத்தவர் என்பதால் அவர் விலைஉயர்ந்த செல்போன்களை அவருடைய பெற்றோர் வாங்கி கொடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அபுல்கலாம் ஆசாத்தின் செல்போனை மாஜித் முஹம்மது உபயோகப்படுத்திக் கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து உடைத்துவிட்டது. இதனால் மாஜித் மீது அபுல்கலாம் ஆசாத்துக்கு கோபம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 14ம் தேதி இரவு நாச்சிகுளம் ரயில்வேகேட் அருகே மாஜித் முகமதுவும் அபுதுல்கலாம் ஆசாத் இருவருக்கும் இடையே தகராறு எற்பட்டுள்ளது. பின்னர், தகராறு முற்றி மாஜித் முகமதுவை அப்துல்கலாம் ஆசாத் தாக்கி உள்ளார். மயங்கிய நிலையில் இருந்த மாஜித்தை அப்படியே விட்டுவிட்டு அபுலகலாம் ஆசாத் தப்பியோடிவிட்டார்.

அப்போது அப்பகுதியில் சென்ற சிலர் படுகாயத்துடன் உணர்வில்லாமல் இருந்தது கண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை காவல்துறையினர் மாணவர் மாஜித் முகமதுவை முத்துப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாஜித் முகமது ஏற்கெனவே இறந்ததை உறுதி செய்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அபுல்கலாம் ஆசாத் மீது சந்தேகம் இருந்தது. அதன் அடிப்படையில் அபுல்கலாம் ஆசாத்திடம் விசாரனை மேற்கொண்டதில் மாஜித் முஹம்மதுவை கொலை செய்ததை அபுலகலாம் ஆசாத் ஒப்புக் கொண்டார். பின்னர் அப்துல்கலாம் ஆசத்தை கைது செய்த காவல்துறையினர் அவரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர.

சிறுவர்களுக்கு அவர்களின் தகுதிக்கு மீறிய வகையில் செல்லம் கொடுப்பதும் அதனால் ஏற்படும் விபரீதங்களை எத்துனை சம்பவங்கள் நடந்தாலும் பெற்றோர் உணர்வதில்லை என்பதையே சிறுவன் மாஜித் முஹம்மதுவின் படுகொலை உணர்த்துகிறது. என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Last modified on Wednesday, 20 September 2017 01:29
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.