வளைகுடாவில் வாழ்வை தொலைக்கும் இந்தியர்கள்!

November 01, 2017

துபை உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இந்திய பணியாளர்கள் பெருமளவில் நசுக்கப் படுகின்றனர். பலர் தங்களது கனவுகளை இழந்து வாழ்வை தொலைத்துள்ளனர்.

போதிய கல்வியறிவு இல்லாமல் அதேவேளை அதிக அளவில் பொருளாதார தேவைகள் உள்ளவர்கள், பலரைப் போல் நாமும் பொருளீட்டலாம் என்ற கனவுகளுடன் சில ஏஜெண்டுகளிடம் பணம் கொடுத்து வெளிநாடு செல்பவர்களுக்கு மிஞ்சுவது ஏமாற்றமே.

டெக்கான் க்ரோனிக்கல் இதழில் கூறியுள்ளபடி வளைகுடா நாடுகளில் சிறு வயதிலேயே இறப்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியர்களே அதிகம். கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2015 வரையிலான காலங்களில் சுமார் 30,000 இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்கள் தவிர, இரத்த அழுத்தம், மாரடைப்பு, ஸ்ட்ரோக் உள்ளிட்ட காரணங்களால் மரணிப்பவர்களே அங்கு அதிகம். இவற்றிற்கு மிக முக்கிய காரணம் மன அழுத்தங்களே என்கிறது புள்ளி விவரங்கள்.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 45 வயது சிட்டாங் ஸ்ட்ரோக் காரணமாக துபாயில் உயிரிழந்த நிலையில் அவரது உடல் தெலுங்கானா மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டது. சுமார் 13 வருடங்களாக துபையில் பணிபுரிந்த இவரால் ஒரு ரூபாய் கூட சேமிப்பில் இல்லை. ஏஜெண்டு ஒருவரிடம் அதிக பணம் கொடுத்து துபாய் சென்ற அவருக்கு சொன்ன வேலையும் கிடைக்கவில்லை. சம்பளமும் கொடுக்கவில்லை. இறுதியில் அவரது இறந்த உடல்தான் ஊருக்கு வந்தது.

பெரும்பாலான பணியாளர்கள் ஏஜெண்டுகளால் ஏமாற்றப் பட்டாலும் தொடர்ந்து வளைகுடா ஆசை யாரையும் விட்டதாக இல்லை.

 

Government figures show there are some 6 million Indian migrants in the six Gulf states. According to official data, more than 30,000 Indian nationals died in the Gulf states between 2005 and 2015.

தற்போது வாசிக்கப்படுபவை!