மறக்க முடியுமா கார்கில் ஹீரோ கேப்டன் ஹனீஃபுத்தீனை!

ஜூலை 26, 2018 2108

கார்கில் வெற்றியை கொண்டாடும் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று. கார்கில் போரின் வெற்றியை ஓவ்வொரு வருடம் ஜூலை 26 ஆம் தேதி 'விஜய் தீவாஸ்' என்ற பெயரில் கொண்டாடப் படுகிறது. அன்று கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதோடு, கார்கில் வெற்றியையும் இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

1999 ஆம் ஆண்டு கார்கில் பகுதியை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தபோது, அதனை எதிர்த்து மே 03 ஆம் தேதி இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக போர் அறிவித்தது. இந்த போரில் இந்திய வீரர்கள் 527 பேர் வீரமரணம் அடைந்தனர். 1500-க்கம் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். பாகிஸ்தான் தரப்பில் 4,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். போர் முடிவுக்கு வந்த ஜூலை 26 ஆம் தேதி கார்கில் நினைவு தினமாக கொண்டாடப் பட்டு வருகிறது..

இந்த போரின் வெற்றிக்கு வித்திட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் கேப்டன் ஹனீஃபுத்தீன். கேப்டன் ஹனீஃபுத்தீன் 1974 ஆகஸ்ட் 23 அன்று பிறந்தார். அவர் எட்டு வயதிருக்கும் போது அவரது தந்தையை இழந்தார் மற்றும் இரண்டு சகோதரர்கள் நஃபீஸும் சமீரும் இருந்தனர். அவரது தாயார் ஹேமா அஸிஸ் , சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவர். .

கேப்டன் ஹனீப் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு டெல்லி சிவாஜி கல்லூரியில் அறிவியல் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றார். அது மட்டுமல்லாமல் ஹனீஃப் ஒரு கணினி நிபுணர் என்பதும் குறிப்பிடத் தக்கது. தவிர, அவர் ஒரு திறமையான பாடகராகவும் கல்லூரியில் மிக பிரபலமான நபராகவும் இருந்தார்.  

கேப்டன் ஹனிப் மிகவும் ஒழுக்கமான, மாணவர். அவரது இலக்கு இந்திய ராணுவத்தில் இடம் பிடிப்பதே.. இதனை அடுத்து 1996 ஆம் ஆண்டில் அறிவியல் பிரிவில் பட்டதாரியான பிறகு இந்திய இராணுவ அகாடமியில் சேரவும் செய்தார்.

கேப்டன் ஹனீப்பை இராணுவத்தில் சேர்ப்பது எளிதான காரியமாக இல்லை, அவர் குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடமிருந்து எந்தவொரு வழிகாட்டலும் இல்லை, எனினும். முழுமையான தீர்மானத்துடன் மற்றும் அர்ப்பணிப்புடன், அவர் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஹனீஃபை ஒரு சிறந்த மனிதனாக வளர்க்கவே அவரது தாயார் ஆசைப் பட்டார். அவரின் விருப்பப்படியே ராணுவத்தில் இடம் பிடித்தார் ஹனீஃப்.

ஜூன் 7, 1997 அன்று ராஜ்புதன ரைஃபிள்ஸின் 11 வது படைப்பிரிவில் நியமிக்கப்பட்டார் ஹனீஃப். கார்கில் முன் சியாச்சென் பகுதியில் அவர் பணியில் இருந்தார், பின்னர் அவரது படைப்பிரிவு கார்கில் போரில் லடாக் நகரத்தில் உள்ள டர்டுக் பகுதியில் பயன்படுத்தப்பட்டது.

 கேப்டன் ஹனீஃப் இயற்கையாகவே பாடும் திறன் கொண்டவர். அவரது படைப்பிரிவில் உள்ளவர்களை அவர் அவ்வப்போது தன் குரலால் கட்டிப் போட்டு வைப்பார். மகிழ்வான, சோகமான நேரங்களில் தனது பாடும் திறனால் பிற படையினரை ஊக்கமாக வைத்திருப்பார். இதனாலேயே ஹனீஃப் சக படையினருக்கு அதிகம் பிரியமானவராக இருந்தார்.

அது கார்கில் யுத்தத்தின் ஆரம்ப நாட்கள். எதிரிப் படைகள் குறித்து அதிக தகவல் கிடைக்காத நேரம். எனினும் 1999 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி ஆப்டேஷன் தண்டர்பால்ட்டில் 11 ராஜ் ரிப்பேயின் இவர்களின் படை துர்டுக் பிராந்தியத்தில் 18,000 அடி உயரத்தில் நிறுத்தப்பட்டது. எதிரியின் துருப்புக்களின் இயக்கத்தை சிறப்பாக கண்காணிப்பதற்காக இராணுவத்தை எளிதாக்கும் வகையில் இவர்கள் அங்கு நிறுத்தப் பட்டனர்.

கேப்டன் ஹனீஃப் தலைமையில் எதிரிகள் மீதான தாக்குதல் நடவடிக்கையில், முன்னோக்கிச் சென்றார். அவருடைய பாதுகாப்பை விட அவரது கீழ் இயங்கும் படையினரின் பாதுகாப்பில் ஹனீஃப் மிகவும் கவனமாக இருந்தார். ஹனீஃபின் படை பாக்கிஸ்தான் படையினர் ஆக்கிரமித்த பகுதியை நோக்கி முன்னேறியது. ஜூன் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் கிட்டத்தட்ட அருகில் உள்ள நிலைகள் முழுவதையும் ஹனீஃப் தலைமையிலான படையினர் கைபற்றிவிட்டனர்.

ஜூன் 6 ஆம் தேதி அடுத்த முன்னேற்றத்திற்கு தயாரானார்கள் ஹனீஃப் தலைமையிலான படையினர். அப்போது வெப்பம் அதிகம் காணப் பட்டது. எனினும் இலக்கு முக்கியம் என்பதை இந்திய ராணுவம் உணர்ந்திருந்தது. அப்போது ஹனீஃப் தலைமையிலான படையினர் எதிரிகள் மீதான தாக்குதலை அதிகப் படுத்தினர். கனரக பீரங்கிகள் கொண்டு தக்குதல் நடத்தப் பட்டன.

எதிரிகள் மீதான தக்குதலை ஹனீஃப் அதிகப் படுத்தினாலும் எதிரிகளிடமிருந்தும் தாக்குதல் அதிகமானது. இதில் ஹனீஃப் தலைமையிலான படையினர் காயம் அடைந்தனர். தன்னை விட தன் படையினர் முக்கியம் என்பதை உணர்ந்த ஹனீஃப் அவர்களை பின் தள்ளி முன்னேறிச் சென்றார். ஆனால் எதிர் பாராத விதமாக தனது 25 வது வயதில் இந்திய ராணுவத்தில் சேர்ந்த இரண்டாவது ஆண்டில் ஹனிஃபுத்தீன் கார்கில் யுத்தத்தில் ஜூன் 6 1999 ல் பாக்கிஸ்தான் படையினரால் கொல்லப் பட்டார். போர் முடியும் வரை ஹனீஃபின் உடல் கிடைக்கவில்லை. இதனால் ஹனீஃபின் மரணம் உறுதி செய்யப் படாமல் இருந்தது. அவரது இறப்பை உறுதி செய்த இந்திய ராணுவம் மத்திய அரசு மூலமாக ஹனீஃபின் தாய் ஹேமா அஸீஸுக்கு தகவல் கொடுத்தது.

தன் தாய் மண்ணிற்காக உயிர் நீத்த தன் மகனின் மரணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார் ஹனீஃபின் தாய் ஹேமா அஸீஸ்.

கார்கில் யுத்தத்தின் முக்கிய வீரனை நாமும் நினைவு கூறுவோம்

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...