காலில் விழுவது பெரியார் கொள்கை கிடையாதே!

செப்டம்பர் 17, 2018 791

பகுத்தறிவுப் பகலவன் என்று போற்றப்படும் தந்தை பெரியார் அவர்களின் 140-வது பிறந்த நாள் விழா இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது.

பெரியார் என்று அனைவராலும் அறியப்படும் ஈ.வெ.இராமசாமி அவர்கள் செப்டம்பர் 17,1879-ஆம் நாள் வெங்கட்ட நாயக்கர் நாயுடு, முத்தம்மாள் என்ற இயற்பெயர் கொண்ட சின்னத்தாயம்மாள் தம்பதியருக்கு மகனாய் தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார்.

சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடிய இவர் தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தார்.

தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் இவரது பெயரை உச்சரிக்காமல் கட்சி நடத்துவது என்பது இயலாத ஒரு காரியம். நாட்டு மக்களை தமிழகத்தில் பக்கம் திரும்பவைத்த தலைவர்களின் பெயர்களில் இவருக்கு முன்னுறிமை உண்டு.

தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்ட குடும்பத்தில் பிறந்த இவர் பிறப்பிலேயே செல்வந்தர். எனினும் ஏழை எளிய மக்களின் நலனை தன் நலன் என கருதி வாழ்க்கையினை கழித்தவர். எதிரியாக இருந்தாலும் தன்னைத் தேடி வருபரை வரவேற்று உபசரிப்பதில் வல்லவர்.

சிக்கனத்தின் அடையாளமான பெரியாரை பொருத்தமட்டில் 'விரலில் சிறிய காயம் ஏற்பட்டால், காயத்திற்கு மட்டும் வைத்தியம் பார்க்க வேண்டுமே தவிர, முழுக் கையையும் வெட்டியெடுப்பது முட்டாள்தனம்'. அதாவது அழுகிய பழத்தில் அழுகிய பகுதியை மட்டும் வெட்டி நீக்க வேண்டுமே தவிர முழு பழத்தையும் அல்ல.

தன்னை நோக்கி வரும் கேலி கிண்டல்களை வந்த இடத்திற்கே பதில் கருத்தால் திருப்பி அனுப்பும் வல்லமைப் படைத்த பெரியார் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காகவும், பெண்களுக்காகவும் குரல் கொடுத்து வந்தார். தன் காலில் விழுந்து வணங்கும் கலாச்சாரத்தை ஏற்காத பெரியார், தன் காலில் விழுபவர்கள் தன்னைக் கேவலப்படுத்திவிட்டதாக நினைப்பவர். ஆனால் அவரது கருத்துகளை பின்பற்றி வருவதாக கூறி அரசியல் நடத்திவரும் தலைவர்கள் சிலர் தற்போது காலில் விழுந்தால் தான் பதவி என்ற விதியை உருவாக்கி வருகின்றனர் என்பது வேதனை!

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...