மருத்துவர் ஆக வேண்டும் என்பதே என் கனவு - அப்சல் குருவின் மகன் காலிப்!

மார்ச் 07, 2019 972

நான் இந்தியன் என்பதற்கு அடையாளமாக ஆதார் கார்டு கிடைத்து விட்டது. டாக்டர் ஆக வேண்டும் என்பதே என் கனவு என்கிறார் காலிப்.

நாடாளுமன்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தூக்குத் தண்டனை விதிக்கப் பட்ட அப்சல் குருவின் மகன் காலிப் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அப்சல் குரு கைதானபோது, காலிப்புக்கு 2 வயது. காலிப், காஷ்மீர் மாநில கல்வித்திட்டத்தின் கீழ் பயின்றுவந்தார். கடந்த ஆண்டு 12-ம் வகுப்புத் தேர்வு எழுதிய அவர் 500-க்கும் 441 மதிப்பெண்கள் பெற்று தேர்வாகியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், மருத்துவர் ஆக வேண்டும் என்பதற்காக பயிற்சி எடுத்து வருகிறேன். ஒருவேளை நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் துருக்கியில் உள்ள கல்லூரியில் ஸ்காலர்ஷிப்புடன் படிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. அதற்காகவே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளேன். பழைய தவறுகளில் இருந்து நாங்கள் நிறையவே பாடம் கற்றுள்ளோம். என் தந்தையால் மருத்துவ கனவை நிறைவேற்ற முடியவில்லை. அதனால்தான் நான் மருத்துவம் படிக்க உள்ளேன்" எனக் கூறியவர், தந்தையின் தூக்குக்குப் பின் மக்களின் பேச்சுகளை எப்படித் தவிர்த்தீர்கள் என்ற கேள்விக்கு, ``என் தற்போதைய நிலைக்குக் காரணம் என் அம்மாதான். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதில் இருந்தே எனக்கென தனிமையான இடத்தை உருவாக்கி என்னைக் கவனித்து வந்தார்.

அதனால்தான் இந்த அளவுக்கு என்னால் படிக்க முடிந்தது. எனது அம்மா எப்போது சொல்வார், ``யார் என்ன சொன்னாலும் எந்த ஒரு எதிர்வினையும் ஆற்றக்கூடாது" என்று. அதன்படி, என்னுடைய முன்னுரிமை எப்போதும் அம்மாவுக்கே. மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி கவலையில்லை. என்னுடைய வீட்டுக்குச் சிறிது மீட்டர் தூரத்தில்தான் ராணுவ வீரர்களின் கேம்ப் இருக்கிறது. சில சமயம் அவர்களை நான் சந்திக்க வேண்டிய சூழ்நிலை வரும். ஆனால், அவர்களிடத்தில் இருந்து எந்த ஒரு எதிர்ப்பும் இதுவரை வந்ததில்லை. என்னைப் பார்க்கும்போதெல்லாம் நான் டாக்டராக வேண்டும் என உற்சாகப்படுத்துவார்கள். என்னையோ எங்கள் குடும்பத்தையோ அவர்கள் துன்புறுத்துவதில்லை" எனக் கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...