எக்ஸிட் போல் முடிவுகளை தவிடு பொடியாக்கிய தேர்தல் முடிவுகள்!

மே 21, 2019 838

க்ஸிட் போல் முடிவுகளை தவிடு பொடியாக்கிய தேர்தல் முடிவுகளை மறக்க முடியாது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலை ஏழு கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதை நேற்றைய வாக்குப் பதிவோடு நடத்தி முடித்துள்ளது. நேற்றுவரைத் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருந்ததை அடுத்து கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதித்திருந்தது. நேற்று வாக்குப்பதிவுக்குப் பின்னர் தேசிய ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது எக்சிட்போல் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

இதற்கிடையே கடந்த 2004 ஆம் ஆண்டு இதே நிலைதான் ஏற்பட்டது. அதனை ஒருபோதும் மறந்துவிட முடியாது என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.

2004ல் வாஜ்பாய் ஆட்சிக்கு பின் அத்வானியை முன்னிறுத்தி பாஜக தேர்தலை மீண்டும் சந்தித்தது. தேர்தலில் பாஜகதான் மீண்டும் வெற்றிபெறும் என்று கணிப்புகள் வெளியானது. பாஜகவும் ஒளிரும் இந்தியா என்று நிறைய விளம்பரங்களை செய்து பெரிய அளவில் ஹிட் அடித்தது. எக்ஸிட் போல் முடிவுகளும் பாஜகவுக்கு ஆதரவாகவே இருந்தன.

ஆனால் வெளியான முடிவுகளின் படி பாஜக கூட்டணி 187 இடங்களை மட்டுமே வென்றது. காங்கிரஸ் கூட்டணி 219 இடங்களை வென்றது. மாறாக மற்ற கட்சிகள் 105 இடங்களை வென்றது. இதன் மூலம் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அதன்பின் காங்கிரஸ் 10 வருடம் ஆட்சி புரிந்தது வரலாறு.

அதுமட்டுமல்லாமல் தற்போது ஊடகங்களின் முடிவுகளுக்கு எதிராக அமைந்துள்ளது காங்கிரஸ் தனியாக நடத்தியுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகள். காங்கிரஸ் தனியார் ஏஜென்ஸி ஒன்றின் மூலம் நாடு முழுவதும் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளனர். அதில் காங்கிரஸுக்கு கண்டிப்பாக தனிப்பெரும்பாண்மை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2004 மீண்டும் திரும்பும் என்றும் ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள் தவிடு பொடியாகும் என்றும், மீண்டும் ஒரு மாயம் நடக்கும் என்றும் காங்கிரஸ் கட்சி தற்போது காத்துக் கொண்டு இருக்கிறது.

-அன்பழகன்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...