எதையும் ஒளித்துவைக்காதீர்கள்.....!!

செப்டம்பர் 27, 2019 814

"உலகின் விலைமதிப்பு மிக்க இடம் எது?"

என்றொரு கேள்வியைக் கேட்டால் என்ன சொல்வீர்கள்?

நியுயார்க்கின் மன்ஹாட்டன்?
மும்பையின் நரிமன் பாய்ண்ட்?
எண்ணெய் வளங் கொழிக்கும் அரபக நகரங்கள்?
வைர வைடூரியங்களை தன்னுள்ளே ஒளித்திருக்கும் ஆஃப்ரிக்கக் காடுகள்?

உண்மை என்ன தெரியுமா?

இவை எதுவுமே விலை மதிப்புக்கு அப்பாற்பட்டவை அல்ல.

உண்மையில், எல்லா ஊர்களிலும், மனிதர்களைப் புதைக்கும் இடுகாடு (மரித்தார்க்கொல்லை) தான் விலை மதிப்புக்கு அப்பாற்பட்ட இடம்.

எத்தனை கனவுகள்!
எத்தனை திட்டங்கள்!
எத்தனை சிந்தனைகள்!!

கோடானுக்கோடி மனிதர்கள் தங்களின் மிக மதிப்பு வாய்ந்த யோசனைகளை வடிவப்படுத்திப் பாராமலே பூமிக்குள் புதையுண்டு விட்டார்கள். அவை இனி பயன்பட வழியேயில்லை.

இந்தக் கேள்வி Todd Henryஐ ஒரு நூல் எழுதத் தூண்டியது. அந்த நூலின் பெயர் "Die Empty".

அந்த நூலில் அவர் சொல்வதெல்லாம் " உங்கள் புதைகுழிக்குச் செல்லுமுன் உங்கள் விலைமதிப்பான எண்ணங்களை உலகிற்குக் கொடுத்துவிடுங்கள்.

ஆக, "Die empty" "வெறுமையுடன் இற" என்பதன் பொருள், உங்களின் உன்னதமான உயர்வான உலகறியவும் துய்க்கவும் வேண்டுவற்றை உலகிற்கே கொடுத்துச் செல்லுங்கள் - என்பது தான்.

உங்களிடம் ஒரு யோசனை இருப்பின் அதை வடிவப்படுத்துங்கள்.
உங்களிடம் ஓர் ஆழ்ந்த அறிவு இருப்பின், அதைப் பகிர்ந்து/பகர்ந்து விடுங்கள்
உங்களிடம் ஓர் இலக்கு இருப்பின், எப்பாடுப் பட்டாவது அதை அடைந்துவிடுங்கள்.
உங்களிடம் செல்வம் மிகுந்திருப்பின், அதை யாருக்கும் பலனின்றிப் போக விட்டுவிடாதீர்கள். சுற்றங்களுக்குப் பகிர்ந்தளியுங்கள்.

எதையும் ஒளித்துவைக்காதீர்கள்.

உங்களின் ஒவ்வொரு நல்லெண்ணமும் பகிரப்படட்டும். வாழ்த்துகள்..!!

- இப்னு ஹம்துன்

(ஆங்கிலத்தில் 'Die empty' நூல் குறித்து வந்த செய்தியின் தமிழாக்கம்).

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...