ஆளுமையை மறந்த ஸ்டாலின்!

அக்டோபர் 24, 2019 418

இடைத்தேர்தல்களில் தி.மு.க. தோல்வி அடைந்திருப்பது அக்கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் பெரும் பின்னடைவையே காட்டுகின்றது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த அரசியல் பேரங்கள், ஓ.பி.எஸ். பிறகு ஈ.பி.எஸ். முதல்வரானது, அமைச்சர்கள் செயல்பாடுகள்.. இவை எல்லாமே அ.தி.மு.க.வுக்கு மைனஸ் ஆக இருந்தன. இதுவே தி.மு.க.வுக்கு ப்ளஸ் ஆனது. குறிப்பாக கருணாநிதி மறைவினால் மு.க. ஸ்டாலினுக்கு ப்ளஸ் ஆனது.

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி இதைத்தான் உணர்த்தியது. ஆனால் தனக்கான வாய்ப்பை ஸ்டாலின் சரியாக பயன்படுத்தவில்லை என்பதைவிட.. பயன்படுத்தவே இல்லை்.

“கட்சியை நிர்வகிக்கத் தெரியாதவர், தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்கள் பலர் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.கவை அண்டிவாழ்கிறார்கள்” என்கிற பேச்சு பொதுமக்களிடையே பரவலாக இருக்கிறது. இதை சரிசெய்ய தவறிவிட்டார் ஸ்டாலின்.

தவிர தலைவர் என்றால் தனிப்பட்ட ஆளுமை வேண்டும். தப்பும் தவறுமாக பேசுவதில் இருந்து அதற்கான எதிர்பார்ப்பையும் அவர் பூர்த்தி செய்யவில்லை. இதனால் மக்கள் நம்பிக்கையை இழந்து இன்று இடைத்தேர்தலில் தோல்வி ஏற்பட்டிருக்கிறது.

“ஆளுங்கட்சியினர் பணத்தை வாரி இறைத்தனர்.. அதிகார துஷ்பிரயோகம் செய்தனர்” என்றெல்லாம் தி.மு.க.வினர் மனதைத் தேற்றிக்கொள்ளலாம். இவை கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதும் அதையொட்டி நடந்த சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் இருக்கவே செய்தன.

இன்றைய சூழலில் ஸ்டாலினை விட எடப்பாடி பழனிச்சாமியை பெரிய தலைவராக பலர் கருதுகின்றனர்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தன்னை தலைவருக்கான தகுதிக்கு உரியவராக ஆக்கிக்கொள்வதைத் தவிர அக்கட்சியைக் காப்பாற்ற வேறு வழி இல்லை.

இதற்குக் காரணம் தி.மு.க. ஆட்சிக்கு வராவிட்டாலும் பலமிக்க எதிர்க்கட்சியாகவாவது எதிர்காலத்தில் தொடர்ந்தால் ஓரளவேனும் ஜனநயாகம் (என்கிற மாயை) தொடரும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...