மதுரை (19 ஏப் 2019): மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. மீனாட்சி அம்மன் கோவில் விழாவையும், மதுரை அழகர்கோவில் கள்ளழகர் எழுந்தருளும் விழாவையும் இணைத்து, அதாவது சைவமும், வைணமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ளது கள்ளழகர் கோவில். இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஒன்று திருபவுத்திரவிழா. இந்தவிழா அங்குள்ள சுந்தரபாண்டியன் கொறடு மண்டபத்தில் நேற்று முழங்க தொடங்கியது. இங்கு உற்சவர் கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் அங்கு எழுந்தருளினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...