இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
NEW(S):
You are here: கட்டுரைகள் நுட்பம் ஜிமெயிலின் மிகப்பெரிய மெயில்களைக் கண்டு அழிப்பது எப்படி?

ஜிமெயிலின் மிகப்பெரிய மெயில்களைக் கண்டு அழிப்பது எப்படி?

ஒவ்வொரு முறையும் ஜிமெயில் சென்று லாகின் செய்யும் போது பயன்பாட்டாளர்களுக்கு மனதில் உள்ள கவலை இதுவே. "என் இன்பாக்ஸில் அநாவசியமாக சேர்ந்து விட்ட, தேவையில்லாமல் இடத்தை அடைக்கின்ற மிகப் பெரிய அட்டாச்மெண்ட்களைக் கொண்ட மடல்களைக் கண்டுபிடித்து அழிப்பது எப்படி?"

மின் அஞ்சல்களை அதன் அளவை (Size based) அடிப்படையில் பிரித்தறிவதற்கான வசதியை ஜிமெயில் இன்னும் தரவில்லை என்பது ஒரு பெரிய குறைபாடு தான்.

இதுநாள் வரை இதனை OUTLOOK அல்லது IMAP SIZE போன்ற மென்பொருட்களுடன் இணைத்த பின்னரே பிரிக்க முடிந்தது. ஆனாலும், சாமான்ய பயனீட்டாளர்களுக்கு இது ஒரு தலைவலியாகவே இருந்து வந்தது. இப்பிரச்னையை தீர்க்க findbigmail.com தளம் உதவுகிறது.



 

 

 

 

 

 

 

 

 

இந்த தளம் செல்லும் முன் செய்ய வேண்டிய வேலைகளாக இந்நேரம்.காம் பரிந்துரைப்பது:

1) உங்கள் ஜிமெயில் சென்று முதலில் பாஸ்வேர்டை மாற்றிக் கொள்ளுங்கள்.

2) உங்கள் யூஸர்நேமையும், புதிய பாஸ்வேர்டையும் தளத்தில் அளியுங்கள்.

இந்த தளத்தில் தகவல்களை அளித்தவுடன், ஒரு சில நிமிடங்களில் உங்கள் மின் அஞ்சல் பெட்டி ஸ்கேன் செய்யப்பட்டு மெயில்களை தரம் பிரித்து விடுகிறது. இதன் விபரங்கள் உங்கள் இன்பாக்ஸிற்கும் அனுப்பி விடுகிறது.

4) இடப்புறம் புதிதாக தோன்றியிருக்கும் லிங்க்குகளை க்ளிக் செய்து மிகப்பெரிய மடல்களை அடையாளம் காணலாம்.

5) தேவையற்றவற்றை அழித்து விடுங்கள்.

6) Trash ஃபோல்டர் சென்று க்ளீன் செய்து விடுங்கள். அதன் பின்னர், இன்பாக்ஸை ஒரு முறை ரெஃப்ரஷ் செய்தால், கொள்ளளவு குறைந்திருப்பதைக் காணலாம்.

7) மறந்து விடாமல், பாஸ்வேர்டை முன்பு போல் மாற்றி விட்டு வெளியேறுங்கள்.

இந்த தளம் IMAP முறைப்படி, ஜிமெயில் கணக்கினை தமது சர்வருடன் இணைத்து பெரிய மெயில்களை தரம் பிரிக்கிறது. இதில், அளவுகளை மட்டுமே எடுத்துக் கொள்வதாகவும், மெயில்களில் உள்ள தகவல்களை எடுத்துக் கொள்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

- நுட்பக்குழு, இந்நேரம்.காம் (பரணிலிருந்து, 13-10-2010)

Comments  

 
0 # Geetha Sriram 2011-12-29 22:03
மிகவும் useful தகவல்.
thank a lot
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Vinodh 2012-01-14 10:49
I was searching for this Answer all over the web

I find it now & yes it is excellent
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Cuddalore Jn. Ghouse 2012-04-13 15:19
இவ்வரிய தகவலைப் ப்கிர்ந்து பெரும்பான்மையானவர்களை நெருக்கடியிலிருந்து மீட்டதற்கு, வாசகரனைவரின் சார்பாக நன்றி.

-கடலூர் ஜங்ஷன் முஹம்மது கவுஸ் .
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: