ஜிமெயில், யாஹு, ஹாட்மெயில் போன்ற இலவச இமெயில் சேவையைத் தரும் ஜாம்பவான்கள் தராத பல்வேறு வசதிகளை அவுட்லுக் தரும் காரணத்தால் இன்றளவில் சர்வதேச அளவில் அலுவலகங்களில் அவுட்லுக் (Outlook) தான் முன்னணி வகிக்கிறது.
அவுட்லுக் 2007 பயன்படுத்துபவர்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்த ஒரு சிரமம் தற்போது நீங்கியுள்ளது. அவுட்லுக் பயனர்கள், மெயில்களில் குறிப்பிட்ட பக்கங்களைத் தேர்வு செய்து பிரிண்ட் செய்ய முடியாத சிரமம் இதுவரை இருந்து வந்தது.
அவுட்லுக் பயனர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். ஒரு மெயிலைப் பிரிண்ட் செய்ய முயற்சி செய்தால் அதிலுள்ள அத்தனை பக்கங்களும் பிரிண்ட் ஆகும். இதனால், பிரிண்ட் செலவு, பேப்பர் செலவு, நேரவிரயம் என்று பல தொந்தரவுகள். இந்நேரம்.காம் வாசகர்களும் இதற்குரிய தீர்வைத் தெரிவிக்குமாறு கேட்டிருந்தனர்.
பயனர்களுக்கு மிக எரிச்சலுட்டிய இப்பிரச்னை தீர அவுட்லுக் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அவுட்லுக் பயன்படுத்துபவர்கள் கீழேயுள்ள இந்த லிங்க்கைப் பயன்படுத்தி சர்வீஸ் பேக் 2 ஐ டவுன்லோடு (தோராயமாக 290MB) செய்த கையோடு, இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

இதன் பிறகு அவுட்லுக்கில் நீங்கள் விரும்பிய பக்கங்களைப் பிரிண்ட் செய்து கொள்ளலாம்.
- இந்நேரம்.காம் நுட்பக் குழு (இந்நேரம்.காம் பரணிலிருந்து)
| அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
Comments
உங்கள் கருத்திற்கு நன்றி. உங்களது அவுட்லுக் 2007 இல் நீங்கள் பக்கங்களைத் தேர்வு செய்து பிரிண்ட் செய்ய முடிகிறது எனில், உங்கள் அலுவலகத்தில் ஏற்கனவே சர்வீஸ் பேக் 2 இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
இதனை நீங்கள் அவுட்லுக்கில் உள்ள Help > About Microsoft Office Outlook என்ற மெனுவில் சென்று உறுதி செய்து கொள்ளலாம்.
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed