ஆப் உதவியின்றி அறையில் மறைந்துள்ள கேமராவை கண்டுபிடிப்பது எப்படி?

டிசம்பர் 12, 2018 1650
Find Hidden Camera  without App Find Hidden Camera without App

ம் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சில காரணங்களால் புதிய இடங்களுக்கு பயணிக்க நேர்கிறது. பரிச்சயமில்லாத கழிவறைகள், உடை மாற்றும் அறை, ஹோட்டல் ரூம் அல்லது அறிமுகமல்லாதவரின் படுக்கை அறை இப்படி பல இடங்களில் இருக்க நேரிடுகிறது.

ஒருவரின் அந்தரங்கத்தை அவருக்குத் தெரியாமல் படம் பிடிக்கும் கீழ்த்தர கலாச்சாரம் பரவி விட்ட காலத்தில், பிரத்தியேக ஆப்(app) கள் உதவியின்றி, எவ்வாறு ஒரு அறையில் மறைத்து வைக்கப் பட்டிருக்கும் கேமராவை கண்டு பிடிப்பது? www.inneram.com

1) உங்கள் கையில் உள்ள ஃபோனை கையில் எடுக்கும் முன், அறையில் உள்ள பொருட்களின் அருகே சென்று நோட்டமிடுங்கள். முக்கியமாக கறும்புள்ளி அல்லது சிறிய வட்ட வடிவம் உள்ள பொருட்களை கவனத்தில் எடுங்கள்.

2) அறையில் உள்ள லைட்களை அணைத்து விடவும். திரைச்சீலைகள் இருப்பின் இழுத்து மூடி அறைக்குள் முழு இருட்டை ஏற்படுத்துங்கள்.

3) உங்களின் ஸ்மார்ட் ஃபோனை கையில் பிடித்து கேமராவை ஆன் செய்யவும். உங்களுக்கு சந்தேகம் எழும் பொருட்களின் அருகே கொண்டு செல்லவும். கேமரா ஒளித்து வைக்கப்பட்டிருந்தால், உங்கள் போனில் காண்பிக்கும் படத்தினுள் சிவப்பு நிற ஒளி அந்த கும்மிருட்டிலும் தெரியும்.

4) அதிலும் திருப்தி இல்லை எனில், அறையின் இருட்டான சூழலிலேயே உங்கள் ஃபோனின் ஃப்ளாஷ் லைட்டை ஆன் செய்து சந்தேகம் உள்ள பொருட்களின் அருகே கொண்டு செல்லவும். மறைத்து வைக்கப்பட்ட கேமரா ஏதும் இருந்தால் இது காட்டிக் கொடுக்கும்.

5) இறுதி பரிசோதனையாக, உங்கள் மொபைல் ஃபோன் மூலம், உங்களுக்கு நெருக்கமானவரை அழையுங்கள். பேசும் போதே, அறைக்குள் சந்தேகம் உள்ள பொருட்களில் அருகே நடந்தால், ரேடியோ ஃபிரிக்வன்ஸி மூலம் உங்களது போன் தொடர்பில் வித்தியாசமான சத்தங்கள் ஏற்படும்.

ஒருவேளை மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கேமரா-வை நீங்கள் கண்டெடுத்து விட்டால், அறையின் உரிமையாளரை அழைக்காதீர்கள். அது பேராபத்தை ஏற்படுத்தலாம். அங்கிருந்தபடியே காவல்துறைக்கு அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்களை அழைத்து விபரத்தைத் தெரிவியுங்கள்.

மேற்கண்ட பரிசோதனைக்குப் பிறகும் ஏதும் கண்டெடுக்க முடியவில்லை எனில்,  கேமரா எதுவும் ஒளித்து வைக்கப்படவில்லை என்று பொருள். நிம்மதியாக ஓய்வெடுங்கள்.

- Mohamed Sardhar

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...