68 லட்சம் பேரின் அந்தரங்க புகைப்படங்களை லீக் ஆக்கி அதிர்ச்சி அளித்த ஃபேஸ்புக்!

டிசம்பர் 18, 2018 1099

நியூயார்க் (18 டிச 2018): 68 லட்சம் பேரின் அந்தரங்க புகைப்படங்களை லீக் ஆக்கி அதிர்ச்சி அளித்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.

ஃபேஸ்புக்கிற்கு இது கெட்ட காலம் போலும். கடந்த இரு நாட்களுக்கு முன் ஃபேஸ்புக் மென்பொருளில் ஏற்பட்ட சிறிய பிழை காரணமாக, 68 லட்சம் பேருடைய பிரத்யேக புகைப்படங்கள் (photos under private mode) வெளி உலகிற்கு கசிந்து உலகை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் விளக்கம் அளித்து மன்னிப்பு கோரியுள்ளார்.

ஃபேஸ்புக்கில் ஏற்பட்ட இந்த சிறிய பிழை மூலம் 1,500 ஆப்ஸ்களுக்கு பயனர்களின் புகைப்படங்களை பயன்படுத்துவதற்கான (open access) அனுமதியை தவறுதலாக ஃபேஸ்புக் வழங்கிவிட்டதாம்.

ஃபேஸ்புக்கின் இந்த தடுமாற்றத்தால், ஒரே நாளில் பேஸ்புக்கின் வர்த்தக சந்தை மதிப்பு பாதாளத்தை நோக்கி பாய்ந்திருக்கிறது.

ஏற்கனவே எட்டு கோடி பேஸ்புக் பயனர்களின் டேட்டா தகவலை பறிகொடுத்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரம் முடியாமல் இருக்கும் நிலையில் இன்னொரு அதிர்ச்சியை ஃபேஸ்புக் தந்திருக்கிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...