இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் ஹுவாய் ஹானர்!

ஜனவரி 06, 2019 242

புதுடெல்லி (06 ஜன 2019): ஹுவாய் ஹானர் ஸ்மார்ட் போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.

புதிய ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனில் 24 எம்.பி. செல்ஃபி கேமரா, ஹூவாய் கிரின் 710 பிராசஸர் மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் வழங்கப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல் உண்மையாகும் பட்சத்தில் வாட்டர் டிராப் வடிவம் கொண்ட ஹானர் பிராண்டின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என கூறப்படுகிறது. புதிய வடிவமைப்பு காரணமாக ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனில் 91 சதவிகித ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கும் என தெரிகிறது.

இத்துடன் புதிய ஹானர் ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் மற்றும் EMUI 9.0 சார்ந்த இயங்குதளம் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மற்றும் முன்பக்க கேமராக்களில் ஏ.ஐ. சார்ந்து இயங்கும் சீன் டிடெக்‌ஷன் வசதி வழங்கப்படலாம்.

இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகமான ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலாக புதிய ஹானர் 10 லைட் வெளியாக இருக்கிறது. முன்னதாக ஹூவாய் நிறுவனத்தின் புதிய சாதனத்திற்கான காப்புரிமை விவரங்கள் வெளியானதைத் தொடர்ந்து ஹானர் 10 லைட் சார்ந்த விவரங்கள் வெளியாகியிருக்கிறது.

முன்னதாக வெளியான தகவல்களில் ஹூவாய் வை9 (2019) ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஹானர் 10 லைட் போன்றே ஹூவாய் வை9 சீரிஸ் ஸ்மார்ட்போனும் பட்ஜெட் விலையில் அறிமுகமாக இருக்கிறது.

ஹூவாய் வை9 சிறப்பம்சங்களை பொருத்த வரை 6.5 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, 2340x1080 பிக்சல் ஸ்கிரீன், கிரின் 710 சிப்செட், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் புகைப்படங்களை எடுக்க முன்பக்கம் மற்றும் பின்புறம் டூயல் பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...