வாட்ஸ் அப் தகவல்களை ஃபார்வேர்ட் செய்பவர்களுக்கு ஆப்பு!

ஜனவரி 22, 2019 805

நியூயார்க் (22 ஜன 2019): வாட்ஸ் அப் ஃபார்வேர்ட் செய்பவர்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

வாட்ஸ் அப் உலகளாவிய ரீதியில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் உடனடி செய்தி சேவை ஆகும். வாட்ஸ் அப் தற்போது தொடர்ந்து அப்டேட்களை செய்து வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் இந்திய அரசின் உத்தரவை அடுத்து, வாட்ஸ் அப் நிறுவனம் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே 'ஃபார்வர்ட்' முடியுமான வகையில் கட்டுப்பாடு விதித்தது.

இந்நிலையில் தற்போது இந்தக் கட்டுப்பாடு உலக அளவில் அனைத்து நாட்டிலும் உள்ள வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்களிடம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...