உங்கள் ஸ்மார்ட் போன்களில் இந்த செயலிகள் உள்ளனவா? - உடனே நீக்கிவிடுங்கள்!

பிப்ரவரி 07, 2019 1066

நியூயார்க் (07 பிப் 2019): தகவல் திருட்டை தடுக்க கூகுள் தனது பிளே ஸ்டோரில் இருந்து 29 செல்போன் ஆப்களை கூகுள் நீக்கியுள்ளது.

இந்த செல்போன் ஆப்களை செல்போனில் வைத்திருந்தால், இந்த ஆப்கள் மூலம் பயனாளர்களின் தகவல்கள் மற்றும் அவர்கள் எடுக்கும் புகைப்படங்கள் திருடப்படுவது தெரிய வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் புகைப்படத்தை அழகாக்கும் மற்றும் கேமரா தொடர்பான ஆப்கள் என்று, இந்த விஷயத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த டிரெண்ட் மைக்ரோ என்ற பாதுகாப்பு நிறுவனம் கண்டறிந்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்த ஆப்களை ஆசிய நாடுகளில்தான் அதுவும் இந்தியாவில் தான் அதிகம் டவுன்லோடு செய்திருப்பதாகவும் அது தெரிவிக்கிறது.

அந்த 29 ஆப்களுக்கான லிஸ்ட்:

1. ப்ரோ காமெரா பியூடி (Pro Camera Beaut)
2. கார்ட்டூன் ஆர்ட் ஃபோட்டோ (Cartoon Art Photo)
3. எமோஜி கேமரா (Emoji Camera)
4. ஆர்ட்டிஸ்ட் எஃபெக்ட் ஃபில்டர் (Artistic effect Filter)
5. ஆர்ட் எடிட்டர் (Art Editor)
6. பியூட்டி கேமரா (Beauty Camera)
7. செல்ஃபி கேமரா ப்ரோ (Selfie Camera Pro)
8. ஹரிசான் ப்யூட்டி கேமரா (Horizon Beauty Camera)
9. சூப்பர் கேமரா (Super Camera)
10. ஆர்ட் எஃபெக்ட் ஃபார் போட்டோ (Art Effects for Photo)
11. ஆவ்சம் கார்ட்டூன் ஆர்ட் (Awesome Cartoon Art)
12. ஆர்ட் ஃபில்டர் போட்டோ (Art Filter Photo)
13. ஆர்ட் ஃபில்டர் போட்டோ எஃபெக்ட் (Art Filter Photo Effcts)
14. கார்ட்டூன் எஃபெக்ட் (Cartoon Effect)
15. ஆர்ட் எஃபெக்ட் (Art Effect)
16. போட்டோ எடிட்டர் (Photo Editor)
17. வால்பேப்பர்ஸ் எச்டி (Wallpapers HD)
18. மேஜிக் ஆர்ட் ஃபில்டர் போட்டோ எடிட்டர் (Magic Art Filter Photo Editor)
19. ஃபில் ஆர்ட் போட்டோ எடிட்டர் (Fill Art Photo Editor)
20. ஆர்ட் ஃப்லிப் போட்டோ எடிட்டிங் (ArtFlipPhotoEditing)
21. ஆர்ட் ஃபில்டர் (Art Filter)
22. கார்ட்டூன் ஆர்ட் போட்டோ (Cartoon Art Photo)
23. ப்ரிஸ்மா போட்டோ எஃபெக்ட் (Prizma Photo Effect)
24. கார்ட்டூன் ஆர்ட் போட்டோ ஃபில்டர் (Cartoon Art Photo Filter)
25. ஆர்ட் ஃபில்டர் போட்டோ எடிட்டர் (Art Filter Photo Editor)
26. பிக்ஸ்சர் (Pixture)
27. ஆர்ட் எஃபெக்ட் (Art Effect)
28. போட்டோ ஆர்ட் எஃபெக்ட் (Photo Art Effect)
29. கார்ட்டூன் போட்டோ ஃபில்டர் (Cartoon Photo Filter)

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...