கைகளாலேயே எழுதி மெஸேஜ் அனுப்பும் வசதி - ஆண்ட்ராய்டின் அறிமுகம்! Featured

Thursday, 16 April 2015 17:20 Written by  ஜாஃபர் Published in தொழில்நுட்பம் Read 3632 times

கைகளாலேயே எழுதி மெஸேஜ் அனுப்பும் புதிய வசதியை ஆண்ட்ராய்டு மூலம் கூகுள் அறிமுகம் செய்துள்ளது.

இதற்கென கூகுள் அறிமுகப் படுத்தியுள்ள கூகுள், ஹேன்ட்ரைட்டிங் இன்புட் (Google Handwriting Input ) எனும் புதிய செயலி ( application) மூலம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ் உள்ளிட்ட 82 உலக மொழிகளில் இந்த வசதியை பயன்படுத்தலாம்.

இந்த செயலி மூலம், டச் ஸ்கிரீனில் கைவிரலால் பக்குவமாக எழுதலாம். அல்லது ஸ்டைலீசாகும் எழுதலாம். எழுத்துக்கள் மட்டும் அல்ல, இமோஜிகள் என சொல்லப்படும் ஐகான்களையும் இதில் வரைந்து காட்டலாம்.

ஒரு முறை தரவிறக்கம் செய்துவிட்டால் இணைய இணைய்ப்பு இல்லாவிட்டாலும் பயன்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற மெசேஜிங் சேவைகளிலும் இதை பயன்படுத்தலாம். ஏற்கனவே கூகுள் மொழிபெயர்ப்பு வசதியில் இது போன்ற அம்சம் இருக்கிறது. அதை ஆய்வு மூலம் விரிவாக்கு இந்த வசதியை ஆண்ட்ராய்டு சாதனங்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.’

இதில் பக்கம் பக்கமாக எழுத முடியாது, ஆனல் நச்சென்று நாலு வரிகள் எழுதி அனுப்பலாம்.

தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.handwriting.ime

இதை பயன்படுத்துவது தொடர்பான விரிவான விளக்கங்களுக்கு: https://support.google.com/faqs/faq/6188721

Last modified on Thursday, 16 April 2015 17:24
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.