'ஜி' மெயில் மெயிண்ட்டெனன்ஸ்

August 26, 2015

ஜிமெயில் account வைத்துள்ள நண்பர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி தான். நாமும் அடிக்கடி சொல்லும் பதில் தான். அது,

-  நிரம்பி மூச்சுத் திணறும் ஜிமெயில் இன்பாக்ஸை எப்படி குறைப்பது?
-  ஆயிரக்கணக்கான மெயில்களில் தேவையற்றது எது? தேவையானது எது? என எளிதில் எப்படி கண்டுபிடிப்பது?
-  அவுட்லுக் போன்று attachmentsகளின்படி மெயில்களை Sorting செய்யும் வசதி இல்லையே?

15 ஜிபி கொள்ளளவை இலவசமாகத் தரும் ஜிமெயிலில், sorting வசதி இல்லை என்பது ஒரு குறைபாடுதான். கீழ்க்கண்ட shortcut உங்களுக்கு உதவும்.

ஜிமெயில் லாகின் செய்தவுடன் தெரியும் Search box இல் ...

5MB + அளவு கொண்ட மெயிலைக் காண்பிக்க size:5000000 என்று டைப் செய்து தேடுங்கள்.
25MB + அளவு கொண்ட மெயிலைக் காண்பிக்க size:25000000 என்று டைப் செய்து தேடுங்கள்.

காண்பிக்கும் துல்லியமான resultsகளில் எது அநாவசியம் என்று தோன்றுகிறதோ அதை டெலிட் செய்து விட்டால், இன்பாக்ஸ் உங்களை வாழ்த்தி நிதானமாக மூச்சு விட ஆரம்பிக்கும்.

ஆன்லைனில் findbigmail.com போன்ற தளங்களில் சென்று இதைச் செய்யலாம். என்றாலும், இவற்றில் நமது Username / Password கொடுப்பது ஆபத்தானது என்பதால் மேற்கண்ட வழிகளில் எளிதானதை. முயற்சி செய்து பார்த்து கருத்திடுங்கள்.

கீழே வைத்திருப்பது, வாழைப்பழ சோம்பேறி :-) நண்பர்களுக்கான ஷார்ட் கட்:  (ஜிமெயிலில் லாகின் செய்த பின்பு கீழேயுள்ள லிங்க்கை க்ளிக் செய்தால் போதுமானது)

https://mail.google.com/mail/u/0/#search/size%3A5000000
https://mail.google.com/mail/u/0/#search/size%3A25000000
https://mail.google.com/mail/u/0/#search/size%3A100000000

- முகம்மது சர்தார்

தற்போது வாசிக்கப்படுபவை!