தமிழ் வளர்க்கும் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன்:தமிழ் அரிச்சுவடி!

October 12, 2015

மிழ் அரிச்சுவடி என்பது தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களின் வரிசை. தமிழில் 12 உயிரெழுத்துக்களும், 18 மெய்யெழுத்துக்களும், 216 உயிர்மெய் எழுத்துக்களும்,  ஓரு ஆய்த எழுத்துமாக மொத்தம் 247 எழுத்துக்கள் தமிழ் நெடுங்கணக்கில் உள்ளன. முன்பு தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொடுக்க தமிழ் அரிச்சுவடி புத்தகம் பயன்பட்டது.

ஆனால் இன்று அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்றவாறு குழந்தைகளை கவரும் விதத்தில் அப்ளிகேசனாக உருவாக்கி உள்ளோம்.

தமிழ் அரிச்சுவடியின் சிறப்பம்சங்கள்:

12 உயிரெழுத்துக்களும், 18 மெய்யெழுத்துக்களும், ஒரு ஆய்த எழுத்தும் உதாரணங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. எழுத்துக்கள் மற்றும் உதாரணங்களை பார்த்து, படிக்கும் விதத்தில் படங்களும், குழந்தைகளின் குரலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 216 உயிர் மெய் எழுத்துக்களை உச்சரித்து பழகும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆத்திச்சூடி, தமிழ் மாதங்கள் மற்றும் வாரங்களை படித்து பழகும் வண்ணம் குரல் பதிவுடன் வழங்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் எளிதில் தமிழ் மொழியை கற்க உதவும் தமிழ் அரிச்சுவடி ஆண்ட்ராய்டு செயலியை உங்கள் போனில் இன்றே இன்ஸ்டால் செய்யுங்கள்  https://play.google.com/store/apps/details?id=com.gtech.tamil.arichuvadi.alphabets

வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !!

- தர்ஷிணி பிரியா

தற்போது வாசிக்கப்படுபவை!