13 நவம்பர் 2015 ல் என்ன நடக்கும்?

October 28, 2015

ம் பூமியின் காற்றுவெளி மண்டலத்திற்கு மேலே பல விண்வெளிக் குப்பைகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அதாவது விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகளினால் சிதறவிடப்பட்ட எஞ்சிய பாகங்களும், ஏற்கனவே இயற்கையாக உருவாகிய விண்கற்களும் பூமியின் ஈர்ப்பு வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருக்கின்றன.

அப்படிச் சுற்றிக் கொண்டிருப்பவைகளில் ஒன்று (WT1190F) பூமியை நோக்கி நவம்பர் 13ம் தேதி 6:15 மணி நேரமளவில் வருகிறது. "விண்கற்கள் விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி வருவது வழமைதானே! இதிலென்ன பெரிய செய்தி இருக்கிறது?" என்று கேட்டால், "விண்வெளியிலிருந்து வருவது இலங்கையின் தெற்குப் பகுதி இந்துசமுத்திரத்தின் 65 கிலோமீட்டரை நோக்கி" என்பதுதான் இதில் முக்கியமானது.

இப்படி வரும் விண்குப்பைகள் பூமியின் காற்றுவெளிமண்டலத்தினுள் நுழையும்போதே எரிந்து சாம்பலாகிவிடுவதால் ஆபத்துக் குறைவு என்றுதான் சொல்வார்கள். ஆனால் இப்போது நுழைய இருக்கும் விண்குப்பை, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் கைவிடப்பட்ட அப்போலோ ராக்கெட்டுகளின் துண்டுகளில் ஒன்றாகவும் இருக்கலாம். எனவே இலங்கையில் இருக்கும் நண்பர்கள் பாதுகாப்பாக இருக்கவும்.

இந்த விண்குப்பை (WT1190F) ஏழு அடி நீளமானதாகும். ஏற்கனவே 2012ம் ஆண்டு இது அவதானிக்கப்பட்டு வந்த ஒன்றுதான். இதனால் ஆபத்து இல்லாவிட்டாலும்கூட, வானத்தில் ஒரு வானவேடிக்கையைப் பார்த்து மகிழலாம்.

- நன்றி: ராஜ்சிவா

தற்போது வாசிக்கப்படுபவை!