தேவையான பொருட்கள் :
மட்டன் : கால்கிலோ
இஞ்சிபூண்டு விழுது : 2 ஸ்பூன்
பச்சைமிளகாய் : 2
மிளகாய்த்தூள் : 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் : அரை ஸ்பூன்
மல்லி இலை : சிறிதளவு
எண்ணெய் : தேவையான அளவு
தக்காளி : பெரியது ஒன்று
கரம் மஸாலாத்தூள் : அரை டீஸ்பூன்
சின்ன வெங்காய விழுது : அரை கப்
உப்பு : தேவையான அளவு
செய்முறை :
* முதலில் கறியை அம்மியில் வைத்து தட்டிக் கொள்ளவும்.
* தட்டிய கறியில் தக்காளி, மல்லி இலை, எண்ணெய் தவிர்த்து அனைத்து பொருட்களையும் போட்டு பிரட்டி அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
* வாணலியில் எண்ணெயைக் காயவைத்து பிரட்டி வைத்த கறிகலவையைப் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து அடிபிடிக்காமல் கிளறவும்.
* கறி வெந்து எண்ணெய் பிரிந்து வரும்போது தக்காளியைச் சேர்த்து கிளறவும். தக்காளி கறியுடன் சேர்ந்து வரும்போது மல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான மட்டன் வறுவல் தயார்.
- இன்றைய ரெசிப்பி ஆலோசனை வழங்கியவர் : இனியவள்
| < முந்தைய செய்தியை வாசிக்க... |
|---|
Comments
Ok
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed