இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
NEW(S):
You are here: கலைகள் கவிதைகள் காலத்தின் கரங்களில்....

காலத்தின் கரங்களில்....

காலத்தின் கரங்களில்..பிரியத்தின் மென்விரல் மீது
படர்ந்திருக்கிறது
கோபமாய் பழுத்த
கொப்பளமொன்று!

செய்திக் கிருமியொன்று
செவியில் நுழைந்து
உறுத்தல் கொண்டு
உள்ளே குடைந்து..
செல்களை அரித்து
சிதைத்துச்  சீழுற்று...

கோபமாய் பழுத்த
கொப்பளம் உனது!

வெயில் போல காய்கிறது
மெளனம்.

நேரடி சிகிச்சைக்கு
நீ தயாரில்லை எனினும்
காலத்தின் பச்சிலையிலோ
ஒரு களிம்புப் பேச்சிலோ
குணமாகக் கூடும்.
இன்றோ நாளையோ..

அறிந்தே வைத்திருக்கிறோம்
காலப் பெருவெளியில்
அணுவினணுவினணுவின்
அற்பத் துளிகள் நாமென்று!

- இப்னு ஹம்துன்

Comments  

 
+1 # Mohamed Ali Jinnah 2012-01-26 12:29
சுகம் கிடைப்பது பல வகையில். அதில் ஒரு வகை பழுத்த கொப்பளத்த்தினை சுற்றி த்டவுவதிலும் கிடைக்கும்,அனைத்தும் மனதில் இருக்கும் பெருமிதத்தின் வெளிப்பாடு . 'காலத்தின் கரங்களில்' கவிதை மனதை நெருடி இனிய இன்பத்தினை தந்து அறிவை வளர வைக்கின்றது. இப்னு ஹம்துன் ஒரு சிறந்த கவிஞர்.அவரது அறிவின் ஜானத்தில் விளைந்த இந்த கவிதை அதற்கு ஒரு சான்று . அன்புடன் வாழ்த்துகள் தெரிவிப்பதில் பெரு மகிழ்வெய்துகின்றேன்.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # Anvar 2012-01-26 12:31
Mikka arumaiyana kavithai , neenda idaivelikku pin paditthu purinthathu
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # shajahaan riyadh 2012-01-26 15:48
அருமையான கவிதை.. அவரவர் சூழலுக்கேற்றார் போல் படிப்பவர் கோணத்தில் பொருள் கொள்ளும் எளிய வகை நவீன கவிதை கவிஞருக்கு கைவந்த கலையாக இருக்கிறது..

பாராட்டுகளும் வாழ்த்துகளும் கவிஞருக்கு...
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # பிரசாத் வேணுகோபால் 2012-01-26 17:38
அருமை...

அணுவிணணுவிணணுவின்

கொஞ்சம் இதை எளிமையாகச் சொல்லி இருக்கலாம்... புரிஞ்சுக்குறதுக்குள்ள நம்ம அறிவு காது வழியா வழிய ஆரம்பிச்சுடுச்சு... :)))
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # ஜாபர் அலி 2012-01-28 11:15
உங்கள் கவிதை மிகவும் அருமை,
என் உள்ளம் கனிந்த வாழ்த்துகள்.
ஜாபர் அலி, ரியாத்.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # Anis 2012-01-28 18:07
நல்ல அர்த்தமுள்ள, சிறந்த நடையுடன் கூடிய கவிதை. வாழ்த்துக்கள். சகோ: இப்னு ஹம்தன்
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # ஸ்டார்ஜன் 2012-01-28 23:30
நல்ல கருத்துள்ள கவிதை. ரொம்ப நல்லாருக்கு.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # masila 2012-02-14 19:24
VERY FINE IMAGERY AND BEAUTIFUL FLOW

PL PUBLISH ASA BOOK - E N PR BOOK
பதில் | Reply with quote | Quote
 
 
0 # சந்தானம் 2012-02-14 19:26
சுத்தமா புரியலைங்கோ
பதில் | Reply with quote | Quote
 
 
0 # ஆஹா 2012-02-17 23:29
Quoting சந்தானம்:
சுத்தமா புரியலைங்கோ


ஆஹா, அப்ப இது நவீன கவிதைதான். :-)
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: