இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
NEW(S):
You are here: கலைகள் கவிதைகள் சசிகலா நீக்கம்: ஓர் அதிமுக தொண்டனின் மனநிலை!

சசிகலா நீக்கம்: ஓர் அதிமுக தொண்டனின் மனநிலை!

சசிகலா நீக்கம்: ஓர் அதிமுக தொண்டனின் மனநிலை!சேத்துவெச்ச காசுபணம் செலவழிஞ்சு போகயிலே
பாத்திரத்தில் புதையல்போல் பெருஞ்சேதி இதுதானே
நேத்துவந்த சதிக்கூட்டம் நெசமாவே வெலகிவிட்டா
கூத்துகளும் இனியில்ல கொள்ளைகளும் கொறஞ்சிடுமே!

ஆத்திரத்தில்  எடுத்தாயோ அறிவாலே எடுத்தாயோ
சாத்திரத்து  சோதிடனும் சொன்னதாலே எடுத்தாயோ
காத்திரமாய் செய்திக்கே காத்திருந்தாற்  போலத்தான்
ஆத்திகரும் நாத்திகரும் அகமகிழ்ச்சி  அம்மம்மே!

வழக்கெல்லாம் துரத்துவதால் வசமான நாடகமா?
பழக்கத்தை உதறுகிற பக்குவந்தான் கெடச்சிடுச்சோ?
இழப்பில்ல என்றெண்ணி இத்தனையும் ஆயிடுச்சோ?
எழவென்ன பேறென்ன எங்கூரு அரசியல்ல?

'சின்னம்மை' நோய்தாக்கி சீர்கொலஞ்ச அரசியலும்
தன்னத்தான் சரிசெய்து தக்கபடி மாறிடணும்
கண்ணத்தான் தொறந்தபடி கடசிவரை  இருக்கோணும்
எண்ணங்கள் தமிழரிடம் இப்படித்தான் இருக்கிறதே!

- இப்னு ஹம்துன்.

Comments  

 
+2 # அமுமீ 2011-12-20 22:08
கவிதை அருமை.
தத்ரூபம்
பதில் | Reply with quote | Quote
 
 
0 # rafeek 2012-01-02 14:41
Adum kabada nadakam ithu thanai nambi yemarathy
Athanaiyum thanai kathukolum nadakam ithu
viduveduvalo kamatholi avalai allathu mariveduvalo kanni eval
பதில் | Reply with quote | Quote
 
 
0 # mohamedhanifa 2012-05-11 21:34
mana kda nadu
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: