அது 2008ன் இறுதி. இந்திய சுற்றுப்பயணம் வந்திருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியிடம் மண்ணைக் கவ்வியபோது, ஆஸ்திரேலியாவைக் கலாய்த்து நண்பர் ஒருவர் ஒரு பாடல் எழுதியிருந்தார்.
மிக அருமையான பாடல் அது!
இப்போதோ, இந்திய அணியைக் கலாய்க்கும் நிலைமை.
ஊரத் தெரிஞ்சுகிட்டேன்...உலகம் புரிஞ்சுகிட்டேன் கண்மணி.. என்ற மெட்டில் நமது கவிஞர் இப்னு ஹம்துன் எழுதியிருக்கிறார்.
********
பேரு தொலஞ்சிடுச்சி...
பெரும கொலஞ்சிடுச்சி சச்சினு....என் சச்சினு....!
ரேங்க்கும் எறங்கிடுச்சி...
ரோஷம் கொறஞ்சிடுச்சி சச்சினு... என் சச்சினு..!
பேரு தொலஞ்சிடுச்சி...
பெரும கொலஞ்சிடுச்சி சச்சினு....என் சச்சினு....
ரேங்க்கும் எறங்கிடுச்சி...
ரோஷம் கொறஞ்சிடுச்சி சச்சினு... என் சச்சினு..!
சச்சின் உண்டுன்னுதானே தாட்பூட்டு செஞ்சேன்
பிச்சி எடுக்கறான்யா புதுபயலும் அடிக்கறான்யா!
பேரு தொலஞ்சிடுச்சி...
பெரும கொலஞ்சிடுச்சி சச்சினு....என் சச்சினு....!
ரேங்க்கும் எறங்கிடுச்சி...
ரோஷம் கொறஞ்சிடுச்சி சச்சினு... என் சச்சினு..!
போ...தும் இந்த ஆட்டம், போ...டு வேற ஆட்டம்
சூ.. து செஞ்ச தாரு? சோர்ந்து போச்சு.. கூட்டம்
நம்பினேன்.. ரொம்ப நம்பினேன்...
அது எல்லாம் வீண் தானோ?
பேசினேன் ரொம்ப பேசினேன் இப்ப நானும் வீண் தானோ?
என் பேச்சு 'கா'விட்டு என்னோடு கோவப்பட்டு
முன்போல ஆடலையே சேவாக்கு... என் சேவாக்கு
உன்போல கம்பீரும் உதவாமப் போய்ட்டானே சச்சினு...என் சச்சினு
பேரு தொலஞ்சிடுச்சி...
பெரும கொலஞ்சிடுச்சி சச்சினு....என் சச்சினு....!
ரேங்க்கும் எறங்கிடுச்சி...
ரோஷம் கொறஞ்சிடுச்சி சச்சினு... என் சச்சினு..!
சச்சின் உண்டுன்னுதானே தாட்பூட்டு செஞ்சேன்
பிச்சி எடுக்கறான்யா புதுபயலும் அடிக்கறான்யா!
ரா...குல் சரியில்லை... ரா...ஜ்யம் நமக்கில்ல...
'தானே' ஆடு..ம் தோனி! இனி புயலில் ஒரு ஆணி
பந்துகள் மட்டை பந்துகள் அது நானே இனி நானே
நொந்ததே மனம் நொந்ததே என் ஆட்டம் எல்லாம் வீணே
அவதூறு பேசுவாங்க அவமானம் தாங்கலையே
தவறாக போச்சுதடா லஷ்மணு என் லஷ்மணு
கடங்காரப் பசங்க இப்ப கால் வாரி விட்டாங்களே .. சச்சினு... என் சச்சினு..
பேரு தொலஞ்சிடுச்சி...
பெரும கொலஞ்சிடுச்சி சச்சினு....என் சச்சினு....!
ரேங்க்கும் எறங்கிடுச்சி...
ரோஷம் கொறஞ்சிடுச்சி சச்சினு... என் சச்சினு..!
பேரு தொலஞ்சிடுச்சி...
பெரும கொலஞ்சிடுச்சி சச்சினு....என் சச்சினு....
ரேங்க்கும் எறங்கிடுச்சி...
ரோஷம் கொறஞ்சிடுச்சி சச்சினு... என் சச்சினு..!
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
Comments
செய்யாதிர்கள் !
மடையர்கள் ஆடுவதும், மடையர்கள் பார்ப்பதும் தான் இந்த ஆட்டம் என்று பெர்னாட் ஷா சொன்னதற்காக 'மட்டைப் பந்தை' மடை பந்து என்று சொல்கிறீர்களா ஜெனித்?
If Inneram can pass it on to Srikanth........will it be useful ?!
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed