இந்நேரம்

கத்தாரில் நடைபெறும் ராட்சதப் பலூன் திருவிழா!

தோஹா (03 டிசம்பர் 2023): கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் ராட்சதப் பலூன் திருவிழா நடைபெறுகிறது. ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படும் இந்த திருவிழா சமயத்தில், நகரங்கள் முழுக்க பல்வேறு வடிவங்களினால் ஆன பலூன்கள் வானில் பறப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். எதிர்வரும் டிசம்பர் 7-ஆம் தேதி துவங்கும் இந்த பலூன் திருவிழா, கத்தார் நாட்டின் தேசிய நாளான டிசம்பர் 18, 2023 வரை நடைபெறும். தோஹாவில் உள்ள கட்டாரா (Katara) பகுதியில் இந்தத் திருவிழா நடைபெறும். திருவிழாவின் சிறப்பு…

மேலும்...

வாடிக்கையாளர்கள் புறக்கணிப்பால் விலைகளைக் குறைக்கிறது மெக் டொனால்டு உணவகம்!

ரியாத், சவூதி (29 நவம்பர் 2023): மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மெக் டொனால்ட் உணவங்களில் விலைகள் வரலாறு காணாத அளவுக்கு குறைக்கப் படுகின்றன. வாடிக்கையாளர்கள் மெக் டொனால்ட் உணவை புறக்கணித்ததால் இந்த சூழல் ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீனின் காஸா பகுதியில் பொதுமக்கள் மீது இஸ்ரேல் கடந்த 50 நாட்களாகத் தொடர்ந்து குண்டு வீசி இனப்படுகொலை செய்து வருகிறது. போர்க் குற்றமாக கருதப்படும் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் போன்ற இடங்களைக் குறி வைத்து தாக்கி வருகிறது. இஸ்ரேலிய ஆதரவு (Support):…

மேலும்...

என் மகள் காஸா-வில் ஒரு ராணியாக உணர்ந்தாள் – இஸ்ரேலிய தாய் எழுதிய கடிதம்!

பாலஸ்தீன் (29 நவம்பர் 2023): ஹமாஸ் போராளிகள் சமீபத்தில் விடுவித்த பெண் பிணைக் கைதி, டேனியல் அலோனி (Danielle Aloni).  இவர், ஹமாஸ் போராளிகளுக்கு நன்றி கூறி ஹீப்ரு மொழியில் எழுதியுள்ள கடிதம் உலகை அதிர வைத்துள்ளது.  இக் கடிதத்தில், ஹமாஸ் படையினரின் நன்னடத்தைக்கும் பிணைக் கைதிகளைப் பொறுப்புடன் கவனித்துக் கொண்டமைக்கும் நன்றி கூறியுள்ளார். இஸ்ரேலின் மொஸாத், ஒரு சக்தி வாய்ந்த உளவுப்படை என உலகம் நம்பிக் கொண்டிருக்கும் அமைப்பு ஆகும். கடந்த அக்டோபர் 07 ஆம்…

மேலும்...

தொற்றுநோயின் பிடியில் சிக்கித் தவிக்கும் பாலஸ்தீன மக்கள்!

பாலஸ்தீன் (27 நவம்பர் 2023): கடந்த 50 நாட்களாக நிலவும் போர்ச் சூழலில், இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல்களால் அடியோடு நிலைகுலைந்து போயுள்ளது காஸா நகரம்.  இந்த போர்ச்சூழல், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நான்கு நாட்கள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. போர் பதட்டத்தின் காரணமாக காஸாவில் வசிக்கும் 17 லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீன பொதுமக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும், லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். ஏராளமான உயிர் இழப்புகளால், பிணங்களை ஒரே புதைகுழியில் அடக்கம் செய்து வருகின்றனர். இச்சூழலில், காஸா…

மேலும்...

பாலஸ்தீன்-இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

பாலஸ்தீன் (22 நவம்பர் 2023): பாலஸ்தீனப் போராளிகளான ஹமாஸ் இயக்கத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே தற்காலிக போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. கடந்த 50 நாட்களாக காஸா- பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் இஸ்ரேலின் குண்டு மழையை நிறுத்தி பாலஸ்தீனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை தடுக்க தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வரும் கத்தார், இந்த ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, அடுத்த ஐந்து நாட்களுக்கு காஸா பகுதியில் முழுமையாக போர் நிறுத்தப் படுகிறது. தரை வழியாகவோ, வான்…

மேலும்...

கத்தார்-பஹ்ரைன் இணைக்கும் பாலம் கட்டும் பணி துவக்கம்!

மனாமா, பஹ்ரைன் (18 நவம்பர் 2023):  பஹ்ரைன் நாட்டின் இளவரசரும், பிரதமருமான எச் ஆர் எச் இளவரசர் சல்மான் பின் ஹமத் அல் கலீஃபாவும், கத்தார் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரான ஷேக் முஹம்மது பின் அப்துர் ரஹ்மானும் இன்று பஹ்ரைனில் சந்தித்துக் கொண்டனர். அதிகாரப் பூர்வமாக நடந்த இச் சந்திப்பில், கத்தார் மற்றும் பஹ்ரைனுக்கு இடையிலான ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றி கலந்துரையாடப் பட்டது. இந்த சந்திப்பில் கத்தார்-பஹ்ரைன் பாலம் திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. சந்திப்பின் முடிவில்…

மேலும்...

நேபாளில் தடையாகிறது டிக்டாக் செயலி!

காத்மண்டு (14 நவம்பர் 2023) : நாட்டின் சமூக நல்லிணக்கம், குடும்ப கட்டமைப்புகள் மற்றும் சமூக உறவுகளைச் சீர்குலைக்கிறது போன்ற காரணங்களைச் சொல்லி, டிக்டாக் செயலியைத் தடை செய்துள்ளது நேபாள அரசு.  சுமார் ஒரு பில்லியன் மாதாந்திர பயனர்களைக் கொண்ட பிரபலமான வீடியோ-பகிர்வு தளம் டிக்டாக் (TikTok). டிக்டாக் செயலியால் இளம் வயதினர் மனதளவில் பாதிக்கப் படுவதாகவும், தீங்கு விளைவிக்கும் வீடியோ பதிவுகள் பற்றிய அரசு விதிகளை டிக்டாக் செயலி மீறுவதாகவும் காரணம் கூறப்பட்டு பல்வேறு நாடுகளில்…

மேலும்...

இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களித்தது இந்தியா!

பாலஸ்தீன் (13 நவம்பர் 2023): காஸா-வை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ளும் எண்ணத்துடன் தொடர்ச்சியான தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருந்தைக் கண்டித்து உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. இஸ்ரேலின் குடியேற்ற நடவடிக்கைகளைக் கண்டித்து ஐ.நா சபையில் சமீபத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இஸ்ரேலுக்கு எதிரான அந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து தன் நிலைபாட்டை தெரிவித்துள்ளது. காஸா-வில் உள்ள மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், ஐநா அகதிகள் முகாம்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் காஸாவை விட்டு குடும்பத்துடன் வெளியேறும் அப்பாவிப் பொதுமக்களைக் குறிவைத்து இஸ்ரேல் குண்டுகள்…

மேலும்...

இஸ்ரேலிடம் பேசிப் பயனில்லை; இனி அதிரடி நடவடிக்கை! – கத்தார் மன்னர் அறிவிப்பு

ரியாத் – சவூதி அரேபியா (12 நவம்பர் 2023): ரியாத்தில் உள்ள தேசிய மாநாட்டு மையத்தில் கூட்டு அரபு-இஸ்லாமிய அசாதாரண உச்சி மாநாடு (Joint Arab-Islamic Extraordinary Summit) நேற்று நடைபெற்றது. இந்த அவசர கால உச்சிமாநாட்டில் அனைத்து அரபு நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட கத்தார் நாட்டின் மன்னரான ஷேக் தமீம் பின் ஹாமத் அல்-தானி ஆற்றிய உரை, போர்க்காலச் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கத்தாரின்…

மேலும்...

மூடப்படுகின்றன ஜிமெயில் கணக்குகள்! என்ன செய்தால் காப்பாற்றலாம்?

வாஷிங்டன் (10 நவம்பர் 2023): மில்லியன் கணக்கான ஜிமெயில் கணக்குகளை அடுத்துவரும் நாட்களில் டெலிட் செய்து நீக்கப் போவதாக கூகுள் அறிவித்துள்ளது. கூகுள் இயங்குதளத்திற்கான முக்கிய அப்டேட்டின் ஒரு பகுதியாக, இந்த நீக்கம் செய்யப்பட உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக லாகின் செய்யப்படாத ஜிமெயில் முகவரிகளின் பயனர்களின் பாஸ்வேர்டுகள் ஹாக்கர்களுக்கு கசிந்து இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், இத்தகைய கணக்குகள் தற்போது ஆபத்தில் இருப்பதாகவும் ஜிமெயில் தெரிவித்துள்ளது. இன்று (10 நவம்பர் 2023) வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ஹாக்கர்களின்…

மேலும்...