லிங்க முத்திரை யோகா செய்ங்க, கொரோனாவ கொல்லுங்க – ஐ ஐ ட்டி சென்னை!

கொரோனாவுக்கு மூச்சை இழுத்து விட்டால் போதும். ஆக்ஸிஜன் கிடைக்கும். – மோடிஜி
கொரோனா பாதிக்கப்பட்டவங்களோட குடும்பம் அரச மரத்தடில போய் கிடந்தால் போதும். ஆக்ஸிஜன் கிடைக்கும் – யோகிஜி
கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்குக் கோமூத்திரம் கொடுத்தால் போதும். ஓடிவிடும்- சங்கி ஜி
கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரண்டு வேளை 20 நிமிடங்கள் லிங்க முத்திரை யோகா செய்தால் போதும். ஆக்ஸிஜன் கிடைக்கும். மூன்று நாட்களில் குணமாகிவிடலாம் – சென்னை ஐ ஐ டி புரஃபசர் மணிவண்ணன்ஜி
ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களையெல்லாம் மூடலாம். வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் ஆக்ஸிஜனையெல்லாம் திருப்பியனுப்பலாம். தினசரி கொரோனா பாதிப்பு நாலு லட்சத்தையும் தாண்டிவிட்டது. அத்தனை பேரையும் இதையெல்லாம் செய்யச் சொல்லுங்க. மருத்துவத்துக்காக செய்யப்படும் பொருளாதார இழப்பிலிருந்தும் இந்தியாவைப் பாதுகாக்கலாம்.
இரு இரு. அட மூதேவிப்பயலே, எவன் என்ன அடிச்சு வுட்டாலும் உடனே தூக்கிட்டு கிளம்புவத எப்பலே நிறுத்தப்போறே?
ராவுத்தரே சத்தம் போடாதீய. இந்தியாவிலேயே அதிகப் பிரபலமான ஐ ஐ டி புரஃபசரே ஆராய்ச்சி செய்து சொல்லியிருக்காரு. அது தப்பாயிருக்குமா?
அப்படியா, சரி. அதென்னலே லிங்க முத்திர யோகா.
அப்படி வாங்க வழிக்கு. நைசா தெரிஞ்சுக்கிட்டு பேரனுக்கும் பேத்திக்கும் முன்னால மருத்துவரா காட்டிக்கிறதுக்குத்தானே. சரி இதோ தெரிஞ்சுக்குங்க. அது ரொம்ப சிம்பிள்தான். இரண்டு கை உள்ளங்கைகளையும் ஒன்றோடு ஒன்று பொருத்தி விரல்களை இறுக்கமாக கோர்த்து பிடிக்கணும். அப்போது இடது கை பெருவிரலை மட்டும் மேல் நோக்கி உயர்த்தி பிடிக்கணும். அவ்வளவுதான். ரொம்ப ரொம்ப ஈசி.
இப்படி செய்தா கொரோனா போயிடுமாலே?
ஆமாம் ராவுத்தரே. ப்ரொஃபசர் அப்படித்தான் சொல்லியிருக்காப்டி. அப்படி லிங்க முத்திரை 20 நிமிடங்கள் தொடர்ச்சியா செய்தால் உடலில் வெப்பம் அதிகரிக்குமாம். அதனால் நுரையீரல் விரிவடைந்து, அதிக ஆக்ஸிஜன் உள்ளே வருமாம். இதனால் நுரையீரல் தொற்று சரியாகி கொரோனா குணமாகிடுமாம்.
அடக் கூறுகெட்ட கோமாளிப் பயலுகளா… இரண்டு கையையும் சும்மாவே இறுக்கமா ஒரு நாலைந்து நிமிடம் பிடித்திருந்தாலே உடலில் வெப்பம் வரும்லே. அதுக்கு மட்டும் இல்லலே, நீ என்ன ஒரு செயல் உடல் உறுப்புகளைக் கொண்டு செய்தாலும் அதற்கு உடலிலிருந்து சக்தி செலவழியும்லே. அந்தச் சக்தி வெப்ப சக்தியாகத்தாம்லே உடலில் வெளிப்படும். அப்படி உடல் இயங்கும்போது, உடலுக்கு அதிக ஆக்சிஜன் தேவைப்படத்தான் செய்யும்லே. அதனால் சாதாரண மூச்சைவிட கூடுதல் மூச்சு விடுவோம்ல. அப்போது நுரையீரல் விரிவாகத்தாம்லே செய்யும். ஆனால், நுரையீரலில் முழுவதும் சளியால் நிரம்பி தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவனால் தானாகவே அதிக சுவாசத்தை உள்ளிளுக்க முடியாதுலே. அதனால்தாம்லே ஆக்சிஜன் சிலிண்டர் வைக்கிறாக.
இந்த சிம்பிள் விசயத்தையால அம்மாம்பெரிய அறிவியல் ஆராய்ச்சி படிப்பெல்லாம் படிக்கிற காலேஜுல ஆராய்ச்சி செய்றானுக? ஆக்ஸிஜன் தட்டுப்பாடால ஆயிரக்கணக்குல மக்கள் செத்துட்டு இருப்பதைப் பார்த்து பரிதாபப்பட்டு வெளிநாட்டுகாரனுகல்லாம் வண்டி வண்டியா ஆக்சிஜன் அனுப்பி தரானுக. அத வச்சி கொஞ்சபேராவது பிழைத்து வாழட்டும்ல. இப்படியான குருட்டு பிதற்றல்களையெல்லாம் எடுத்துட்டு நடந்து, மக்களோட உயிர்களோட விளையாடுவத நிறுத்துங்கலே.
ஆஹா, இப்பத்தான் நீங்க சொன்னதும் யோசிச்சுபார்த்தேன் ராவுத்தரே. இந்தக் குருட்டு கம்னாட்டி பயலுங்க ஐ ஐ ட்டியையும் விட்டுவைக்காம இப்படி மக்களைச் சாவடிக்கிறானுங்களே. நல்லவேளை நான் தப்பித்தேன். லிங்கமா முத்திரையா, ஆளைவிடுங்க!

ஹாட் நியூஸ்:

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

புதுடெல்லி (06 டிஸா 2022): குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. தலைமை நீதிபதி யு.யு. லலித் மற்றும் நீதிபதி ரவீந்திர பட்...

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!

சென்னை (03 டிச 2022): சென்னை நந்தனம் உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நந்தனத்தில் செயல்படும் உடற்கல்வியியல் கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவிகள்...

தலித் மாணவர்களை வைத்து கழிவறையை சுத்தம் செய்த தலைமை ஆசிரியை மீது வழக்கு!

ஈரோடு (03 டிச 2022): ஈரோட்டில் தலித் மாணவர்களை வைத்து பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்த தலைமை ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் உள்ள அரசுப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கும்...