யார் இந்த சித்தார்த்? மோடி அரசை எதிர்க்க காரணம் என்ன? – பரபரப்பு பின்னணி!

கொரோனா பரவலின் இரண்டாவது அலை இந்திய நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்க மத்திய அரசின் கையாலாகதத் தனத்தை உலக நாடுகள் கண்டித்தப்படி உள்ளன.

இந்நிலையில் மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர் கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. அதேவேளை திரையுலக பிரபலங்கள் அனைவரும் மவுனம் சாதிக்கின்றனர். ஆனால் நடிகர் சித்தார்த் மட்டும் சமூக வலைதலங்களில் மோடி அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இதனால் அவருக்கு பாஜகவினரால் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்., ஆனால் தனது மத்திய அரசிற்கு எதிரான கேள்விகள் தொடரும் என்பதாக அவர் கூறி வருகிறார். கடந்த சில நாட்களாகவே நடிகர் சித்தார்த் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த்தின் இன்னொரு முகம் குறித்து திமுக பிரமுகர் M.m. Abdulla வெளியிட்டுள்ள பதிவு பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.

அதில் பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர மிக முக்கிய காரணமான அண்ணா ஹசாரேவின் நடிகர் சித்தார்த் என்பதாகவும் அதற்கான சித்தார்த்தின் சில ட்விட்டர் பதிவுகளையும் வெளியிட்டுள்ளார். மேலும் தற்போதைய நாட்டின் நிலையை திசை திருப்ப ஆட்சியாளர்களாலேயே நியமிக்கப்பட்டுள்ளவர்தான் நடிகர் சித்தார்த் என்பதாகவும் M.m. Abdulla சந்தேகம் எழுப்பியுள்ளார்.

அவரின் பதிவு:

அரசின் உளவுத்துறை எப்படி இயங்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்..

ஒரு விசயத்தில் அரசின் மீது மக்களுக்கு மிகப் பெரிய கோவம் எழுகிறது என்று தெரிந்தால் தங்கள் தரப்பில் இருந்தே ஒரு ஆளை தயார் செய்து “அவரும் கோவப்படுவது போன்ற தோற்றத்தை உருவாக்கி” மக்களை அவர் பின் உளவுத்துறை அணி திரளச் செய்யும்!
ஏன் அப்படி செய்ய வேண்டும்?
யாரோ ஒருவரின் பின் மக்கள் திரண்டால் அதை சமாளிப்பது அரசுக்கு மிகுந்த பிரச்சனையாகிவிடும். அதற்கு பதிலாக தன்னுடைய ஆள் பின்னால் மக்கள் வந்தால் தன்னுடைய ஆளே சிறிது நாட்களில் அந்த மக்களைச் சமாளித்து விடுவார்.
உதாரணத்திற்கு உங்கள் ஊரில் ஒரு ஆபத்தான திட்டம் வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை எதிர்த்து மக்கள் உங்கள் பின்னால் வந்தால் அதைச் சமாளிப்பது அரசிற்கு மிகக் கடினமாகி விடும். நீங்கள் பயப்படாமல் அரசை எதிர்ப்பீர்கள்..விட்டே குடுக்க மாட்டீர்கள்.
இது போன்ற சமயத்தில் அரசே ஒரு குட்டி பிரபலத்தையோ அல்லது என்.ஜி.ஓ ஒருவரையோ தேர்ந்தெடுத்து அவருக்கு தேவைக்கும் அதிகமான புகழ் வெளிச்சத்தை உருவாக்கும். மக்களும் அவரை நம்பி மொத்தமாக பின்னால் செல்வார்கள். அந்த ஆளும் போராடுவது போல காலத்தைக் கடத்தி இறுதியில் “நம்ம முயற்சி பண்ணுனோம்..முடியலை” என்று கண்ணீர் சிந்தி பேசிவிட்டு அரசிடம் காசை பெற்றுக் கொண்டு கிளம்பி விடுவார்! மக்களும் “பாவம் அவர் என்ன செய்வார்? நமக்காகப் போராடிப் பார்த்தார்..முடியலை” என்று கலைந்து விடுவார்கள்.
சில நாட்களாக நடிகர் சித்தார்த்திற்கு நம் மக்களிடம் ஒருந்து ஒரே சில்லறை சிதறல்கள்!!!!!!!
யார்டா அவன்னு பார்த்தா “அன்னா ஹசாரேவை” ஆதரிச்சிருக்கான்! 2ஜி வழக்கை உண்மைன்னு பிரச்சாரம் பண்ணிருக்கான்!! இது மாதிரி பிரச்சாரங்களில் பலனடைந்துதான் மோடி ஆட்சிக்கு வந்தார்!!
சித்தார்த்துகளுக்குச் சில்லறையை சிதற விடும் முன் சிறிது சிந்தியுங்கள்.