டீசல் வாகனங்களுக்குக் கூடுதல் வரி விதிக்க நிதியமைச்சகம் ஆலோசித்து வரும் நிலையில், மிக விரைவில் டீசல் வாகங்களின் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டீசல் வாகனங்களுக்குத் தற்போது விதிக்கப்படும் வரியினைவிட ரூ. 80 ஆயிரம் வரை அதிகமாக வரி விதிக்க பெட்ரோலியம் துறை அமைச்சகம் நிதியமைச்சருக்குப் பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை பெட்ரோலியம் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி சந்தித்து பேசினார்.
இவர்களின் சந்திப்பின்போது, எரிவாயுவை கப்பல்களிலிருந்து நிறுவனங்கள் இறக்குவதற்கு விதிக்கப்படும் 5 சதவீத வரியினை நீக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
பெட்ரோலியம் துறையின் பரிந்துரையினை நிதியமைச்சகம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், எரிவாயுவின் விலையில் சிறிது மாற்றம் ஏற்படலாம். அதே சமயம் டீசல் வாகனங்களின் விலை கடுமையாக உயரும் என அஞ்சப்படுகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|