இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: வணிகம் வணிக செய்திகள் ஃபோர்டு நிறுவனம் தமிழகத்தில் மேலும் ரூ.750 கோடி முதலீடு

ஃபோர்டு நிறுவனம் தமிழகத்தில் மேலும் ரூ.750 கோடி முதலீடு

தமிழகத்தில் மேலும் 750 கோடி ரூபாய்கள் முதலீடு செய்ய பிரபல வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு முன்வந்துள்ளது. இதன்மூலம் மேலும் 400 வேலைவாய்ப்புகளும் உருவாகும். இத்தகவலை  ஃபோர்டு நிறுவனத்தலைவர் மைக்கேல் போனிகம் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளியன்று) தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மைக்கேல் சந்தித்துப் பேசினார்.



சென்னை அருகே மறைமலை நகரில் நவீன கார் தயாரிப்புத் தொழிற்சாலையை சுமார் 4,500 கோடி செல்வில் அமைத்துள்ள ஃபோர்டு இந்தியா நிறுவனம் அமைத்துள்ள கடந்த மே மாதம் மேலும் 380 கோடி ரூபாய்களை முதலீட்டிலிட்டது. அதன் மூலம் சுமார் 350 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது மேலும் சுமார் 750 கோடி ரூபாய்கள் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. ஆறுமாத கால அளவில் சுமார் 1130 கோடி ரூபாய்கள் முதலீட்டை அதிகரித்துள்ளது ஃபோர்டு  நிறுவனம்.

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: