தரம் குறைந்த ஆபரணங்களால், நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவதை தடுக்கும் நோக்கத்தில், மத்திய அரசு அனைத்து தங்க விற்பனையகங்களும், "ஹால்மார்க்" முத்திரை கொண்ட நகைகளையே விற்க வேண்டும் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவை குழு, இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்திய தர நிர்ணய சட்டத்தில், திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இத்திட்டம் நடைமுறைக்கு வரும்.
நுகர்வோர் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் என்ற அமைப்பு (பீ.ஐ.எஸ்), விலை உயர்ந்த உலோகங்களுக்கு ஹால் மார்க் தரக்குறியீட்டினை வழங்கி வருகிறது. சிமென்ட், மினரல் வாட்டர் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட 77 வகையான பொருட்களுக்கு, இந்த அமைப்பு தரக்குறியீட்டை வழங்கியுள்ளது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|