இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: வணிகம் வணிக செய்திகள் தங்கம் இறக்குமதிக்கு மேலும் 4 வங்கிகளுக்கு அனுமதி: ரிசர்வு வங்கி

தங்கம் இறக்குமதிக்கு மேலும் 4 வங்கிகளுக்கு அனுமதி: ரிசர்வு வங்கி

உலக அளவில் தங்கத்தை பயன்படுத்துவதிலும் இறக்குமதி செய்வதிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இதை கருத்தில் கொண்டு மொத்தம் மற்றும் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கு  இந்திய ரிசர்வு வங்கி  ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்து மொத்தம் மற்றும் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட 31 வங்கிகளுக்கு ஏற்கனவே இந்திய ரிசர்வு வங்கி அனுமதி அளித்திருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தின் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கி உட்பட மேலும் 4 வங்கிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்து மொத்தம் மற்றும் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட ரிசர்வு வங்கி அனுமதி அளித்துள்ளது.

தற்போது, தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு சிட்டி யூனியன் வங்கி, யெஸ் பாங்க், பாங்க் ஆப் மகாராஷ்டிரா, ஐஎன்ஜி வைசியா வங்கி ஆகியவற்றிற்கு ரிசர்வு வங்கி அனுமதி அளித்துள்ளதை தொடர்ந்து தங்கம் இறக்குமதிக்கு உரிமம் பெற்ற வங்கிகளின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

 

Comments  

 
+1 # Karthick 2012-02-01 17:17
Even if we have more money and Gold, we can eat them.

Food is the first need for all the people. If it is not there then no body can live. Then what is the use of money and gold.

Consider about our Agricultrual.

Howmuch is our population and how many people are there in India.

Hungry is think which makes a man to grow. But there should be way to reach all the people
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: