வங்கிகளின் ரொக்க கையிருப்புக்கான வட்டி விகிதத்தில்(சி.ஆர்.ஆர்) 0.5 சதவீதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.
சி.ஆர்.ஆர் எனப்படும் வங்கிகளின் ரொக்க கையிருப்புக்கான வட்டி விகிதம் தற்போது 6 சதவீதமாக உள்ளது. இதனை 0.5 சதவீதம் ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இனிமேல் சி.ஆர்.ஆர் வட்டி விகிதம் 5.5 சதவீதமாக ஆக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அறிவித்துள்ளது.
அதே சமயம் ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் பெறும் கடன் வட்டி விகிதமான 8.5 சதவீதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி வாங்கும் கடனுக்கான ரெபோ வட்டி விகிதமான 7.5 சதவீதத்திலும் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|