மோடியும் சீனாவுடனான உறவும்!

2020, ஜூன் 15 அன்று இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் சீன இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இந்தியாவின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் தன்னுடைய இராணுவ முகாம்களை சீனா ஏற்படுத்தியுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு தனக்கு சொந்தமானது என்று சீனா அடம்பிடித்து வருகிறது. அடுத்தவர்களின் இடத்தை ஆக்கிரமிப்பதில், மும்முரமாக இருக்கும் சீனா இவ்வாறு செய்வதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. ஆனால், இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய பிரதமர் மோடி மிகவும் கடுமையான முடிவுகளை எடுப்பார். சீனா-வுக்கு எதிராக சர்ஜிகல் ஸ்ட்ரைக்-ஐ ஆரம்பிப்பார்….

மேலும்...

அமெரிக்க சுதந்திர வரலாறு – ஒரு பார்வை

ஜூலை 4 உலகின் மாபெரும் வல்லரசு என்று மார் தட்டிக் கொள்ளும் அமெரிக்காவின் 245வது சுதந்திர தினம் இன்று! அமெரிக்க சுதந்திர போராட்டத்தைப் பற்றி அறிந்துகொள்வோமா..? சிறு குழந்தைகளிடம் கேட்டாலும் பதில் வரக்கூடிய ஒரு கேள்வி, அமெரிக்காவை கண்டுபிடித்தது யார்? கொலம்பஸ்! கி.பி. 1492-இல் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். ஆனால் அமெரிக்கா எனும் ஒரு நாடு கொலம்பஸ் மூலமாக உலகத்துக்கு அறிமுகமாகவில்லை. கொலம்பஸ் அமெரிக்காவிற்கு வந்து சென்றதற்குப் பிறகு, அந்த இடம் மக்கள் வாழ்க்கைக்கு ஏற்றதொரு இடமா…

மேலும்...

பாலஸ்தீன நாயகனை வரவேற்ற நாள் இன்று…..!

இன்று ஜூலை1. 1994ம் ஆண்டு,மறைந்த பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாசர் அரஃபாத் எகிப்திலிருந்து ரஸா வழியே காஸாவை வந்தடைந்து பாலஸ்தீனத்தில் காலடியெடுத்து வைத்த தினம். யாசர் அரஃபாத்தை பாலஸ்தீன புரட்சியின் தலைவராகவும், ஒரு நாயகனாகவும் கருதி ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் வரவேற்ற நாள் இன்று… யாசர் அரஃபாத்:ஒரு அறிமுகம் ஹிட்லரால் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட யூதர்கள் மீது உலகளவில் அனுதாபம் ஏற்பட்டது. எத்துணை பாவப்பட்ட மக்கள் யூதர்கள்! எவ்வளவு கொடுமைகளை அனுபவிக்கிறார்கள்! இவர்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கையே அமையாதா, என்ன..?என்றெல்லாம்…

மேலும்...

தூத்துக்குடி தந்தை – மகன் கொலையும் காவல்துறையின் தகிடுதத்தங்களும்!

தூத்துக்குடி தந்தை – மகன் கொலையில் காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. “காவலர்களை திட்டிவிட்டு தந்தை, மகன் (பென்னீஸும், ஜெபராஜூம்) தரையில் உருண்டு புரண்டு ஆர்பாட்டம் செய்தனர். அதில் அவர்களுக்கு ஊமைக்காயங்கள் ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லெட் போராட்டக்காரர்கள் மீது அரசு அதிகாரத்தின் மூலம் பெரும் இனப்படுகொலை நடந்தது யாரும் எளிதில் மறந்துயிருக்க மாட்டோம், அப்போது காவல்துறை அறிக்கைக்கு முன்பே தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் சமூக விரோதி ஊடுருவியதால்…

மேலும்...

தாமதிக்கப்பட்ட நீதி மிகப்பெரிய அநீதிதான்!!

தாமதமான நீதி கண்டிப்பாக நீதி மறுக்கப்பட்டதாக தான் எடுத்துக் கொள்ளமுடியும். CAA, NRC கருப்பு சட்டங்களுக்கு எதிராக போராடியதற்கு கைது செய்யப்பட்ட ஜாமியா பல்கலைக்கழக மாணவி (கர்ப்பிணி பெண்) சபூராவிற்கு ஜாமீன் கிடைத்துள்ளது. பொதுசமூகத்திற்கு இது ஆறுதலான செய்தி என்று சமூக செயல்பாட்டாளர்கள் பெருமூச்சுடன் இணையங்களில் எழுதுவதை கவனிக்கமுடிகிறது. இந்த விசயங்களில் முழு நீதி கிடைக்காவிட்டாலும், தாமதமாக ஆறுதலாக கிடைக்கப்பெற்ற ஜாமீனை நீதி கிடைக்கப்பெற்றது என்ற முறையில் இன்று பொதுசமூகத்தின் மத்தியில் பரப்புரை செய்யப்படுகிறது. என்ன செய்தார்…

மேலும்...

வரலாற்று மனிதர் – வள்ளல் சி. அப்துல் ஹக்கீம் சாஹிப்

நூறு ஆண்டுகளுக்கு முன், சித்தீக் ஹுசைன் என்ற வியாபாரி பம்பையிலிருந்து தனது துணி வியாபாரத்தை முடித்துக்கொண்டு, சொந்த ஊரான மேல்விஷாரம்(வேலூர்) திரும்பிக்கொண்டு இருந்தார். நள்ளிரவில் ரயில் சென்னை சென்ட்ரலை வந்தடைந்தது. மறுநாள் மாலை தான் மேல்விஷாரம் செல்லும் அடுத்த ரயில் என்பதால், எதாவது விடுதியில் தங்கலாம் என முடிவெடுத்தார். அந்த காலத்தில் சென்னை சென்ட்ரல் அருகே “இராமசாமி முதலியார் தங்கும் விடுதி” என்ற ஒரே ஒரு லாட்ஜ் மட்டுமே இருந்தது. ஆனால் அங்குச் சென்ற சித்தீக் ஹுசைன்’க்கு…

மேலும்...

ஃபேஸ்புக்கில் தீ

அமெரிக்காவில் பரவியுள்ள நெருப்பு ஃபேஸ்புக் நிறுவனத்தையும் சுட ஆரம்பித்துள்ளது. ஜார்ஜ் ஃப்ளாயிட் என்ற கருப்பரை வெள்ளை இனக் காவலர் டெரெக் கைது செய்கிறேன் பேர்வழி என்று கழுத்தில் ஏறி அமர்ந்து கொன்றுவிட, உருவான தீப்பொறியால் போராட்டம், கலவரம், மறியல், சூரையாடல் என்று நாடு அதகளப்பட்டுக் கிடக்கிறது. நாளுக்கு நாள் உக்கிரம் குறையாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது கருப்பர்களின் நீதிக்கான ஆர்ப்பாட்டம். ஆண்டாண்டு காலமாய்த் தாங்கள் நசுக்கப்படுவது பொறுக்காமல் மீண்டும் வெகுண்டெழுந்துள்ளார்கள் அம்மக்கள். மிக மிக முக்கியமானப் பிரச்சனையான இதை…

மேலும்...

நீக்கப்படுவாரா தயாநிதி மாறன் – புயலை கிளப்பும் விவகாரம்!

திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தலைமைச் செயலகத்தில் கிளப்பிய சலசலப்பு அலை இப்போதைக்கு ஓயாது போல! தயாநிதியைவிடவும் இதில் அதிகமாக சிக்கிக் கொண்டு, பழி சுமப்பவர் திருமாவளவன். திமுக.வுக்காக திருமாவளவன் பாரம் சுமப்பது இது முதல் முறையல்ல. 2009 ஈழ இறுதிப் போர் காலத்தில், அவர் திமுக கூட்டணியில் அங்கம் வகித்தது, கலைஞர் வற்புறுத்தலால் ராஜபக்‌ஷேவை சந்திக்கச் சென்ற குழுவில் இடம் பெற்றது, அதன் மூலமாக திமுக மீதான விமர்சனங்களுக்கு கேடயமாக தன்னை ஒப்படைத்தது,…

மேலும்...

கோவிட் -19 இல் மோடி செய்த தவறை எவ்வாறு சரிசெய்ய முடியும்?: ராமச்சந்திர குஹா

கொரோனா விசயத்தில் மத்திய அரசும், பிரதமர் மோடியும் எவ்வாறு நடந்து கொண்டுள்ளனர்.? அவர்கள் கொரோனாவை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா வெளியிட்டுள்ள முழு கட்டுரையின் தமிழாக்கம். COVID-19 ஐ அடுத்து, உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஜூம் வழியாக வகுப்புகள் எடுத்து வருகின்றனர். இருப்பினும், இத்தகைய தொலைதூரக் கல்வி என்பது இளைஞர்களுக்கு மட்டுமல்ல. வயதானவர்களுக்கும் இது பெரிதும் உதவியாக இருக்கும். எனவே, இந்த…

மேலும்...

சர்வதேச அவமானங்களிலிருந்து மீளுமா இந்திய அரசு?

உலக அரங்கில் இந்தியாவுக்கென தனி ஒரு மதிப்பும் மரியாதையும் சுதந்திரம் பெற்ற காலம் முதல் தொடர்ந்து இருந்து வந்துள்ளது மறுக்க முடியாத உண்மை. இந்தியாவுக்கான முக்கியத்துவத்தினை இதுவரை ஆட்சி செய்த அனைத்து தலைவர்கள் ஏற்படுத்தி தந்துள்ளனர். அந்த வரிசையில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடமுண்டு. வலதுசாரி சங்பரிவார சிந்தனை இஸ்லாமிய வெறுப்பு போன்ற அடிப்படையில் அரசியல் செய்து வந்தாலும் மோடி அவர்கள் வெளியுறவு கொள்கை விஷயத்தில் வெளிப்படையாக அந்த வெறுப்புக்கு மாற்றமாகவே நடந்துள்ளார். இதன் விளைவாக மேற்காசிய…

மேலும்...