காஷ்மீர் ஃபைல்ஸ் மோசமான திரைப்படம்தான் – நடுவர்கள் குழு திட்டவட்டம்!

கோவா (03 டிச 2022): இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) சர்வதேச போட்டி நடுவர் குழுவில் பணியாற்றிய BAFTA வெற்றியாளரான ஜின்கோ கோடோ, தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்த நடவ் லாபிட்டின் கூற்றுடன் நாங்களும் ஒத்துப்போகிறோம் என தெரிவித்துள்ளார். அவருடன் மற்ற இரண்டு உறுப்பினர்களும் லாபிட்டின் கருத்தில் உடன்படுகிறார்கள் என்பதை வெள்ளிக்கிழமை வெளிப்படுத்தினார். ஜூரிகள் Pascale Chavance, Javier Angulo Barturen மற்றும் Gotoh ஆகியோர் கையொப்பமிட்ட ஒரு அறிக்கை அவரது ட்விட்டர் பக்கத்தில்…

மேலும்...

பணமோசடி வழக்கில் பிரபல நடிகையிடம் அமலாக்கத்துறை விசாரணை!

புதுடெல்லி (03 டிச 2022): பணமோசடி வழக்கில் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹியிடம் ED விசாரணை நடத்தியது. இதனிடையே சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து பரிசு பெற்றதாக வெளியான தகவலை நடிகை மறுத்துள்ளார். சுகேஷ் சந்திரசேகர் மீதான ரூ.200 கோடி கறுப்புப் பண வழக்கில் நடிகை நோரா ஃபதேஹி மீதான மூன்றாவது வழக்கு இதுவாகும். நோரா ஃபதே மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் ஆடம்பர கார்கள் மற்றும் பிற விலையுயர்ந்த பரிசுகளை சந்திரசேகரிடமிருந்து பெற்றனர் இருவர் மீதும் குற்றச்சாட்டு…

மேலும்...

புனித மக்காவில் உம்ரா செய்யும் நடிகர் ஷாரூக்கான்!

ஜித்தா (02 டிச 2022): பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் உம்ரா செய்வதற்காக புனித மக்காவிற்க்கு சென்றுள்ளார். மக்கா வந்துள்ள ஷாரூக்கானுடன் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் செல்ஃபிக்கள் எடுத்துள்ளனர். அல்லாஹ் அவருடைய பிரார்த்தனைகளைக் கேட்பானாக. அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் சிறந்தவை வரட்டும்’ -என்று அவரது ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிந்துள்ளார். ஷாருக் கான் முன்பு ஒரு பேட்டியில் ஹஜ் செய்ய வேண்டும் என்பது தனது மிகப்பெரிய ஆசை என்றும், தனது மகன் ஆப்ராம் மற்றும் மகள் சுஹானாவுடன்…

மேலும்...

காஷ்மீர் ஃபைல்ஸ் விவகாரம் – இஸ்ரேல் தூதரின் எதிர்வினைக்காக வெட்கப்படுகிறேன் – நடவ் லாபிட்,!

புதுடெல்லி (02 டிச 2022): இஸ்ரேலிய திரைப்பட தயாரிப்பாளரும் IFFI ஜூரி தலைவருமான நடவ் லாபிட், தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்த தனது கருத்துக்கு இந்தியாவுக்கான தனது நாட்டு தூதரின் எதிர்வினை குறித்து வெட்கப்படுகிறேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து திவயர் ஊடக நேர்காணலில் அவர் தெரிவித்ததாவது: “ஒரு இஸ்ரேலிய தூதரகத்தின் இந்த எதிர்வினைக்காக நான் வெட்கப்படுகிறேன். ஏற்கனவே அனுபவமிக்க தூதராக இருக்கும் இவர், ஜனநாயகம் மற்றும் பேச்சு சுதந்திரத்திற்காக இவர் என்ன செய்தார்? என்று என்னை…

மேலும்...

சர்வதேச திரைப்பட விழாவில் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை கழுவி ஊற்றிய நடுவர்!

கோவா (29 நவ 2022): கோவா-வில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அதில் திரையிடப்பட்ட தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் நாகரீகமற்றது என்று திரைப்பட விழா நடுவர் கூறியிருக்கிறார். 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவா தலைநகர் பனாஜி-யில் நடைபெற்றது. 9 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில், 79 நாடுகளைச் சேர்ந்த 280 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா நேற்றிரவு நடைபெற்றது. இதில் சிறந்த திரைப்படமாக ஸ்பெயின் மொழி…

மேலும்...

பிரபல நடிகை தற்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது!

இந்தூர் (20 அக் 2022): இந்தி சீரியல் நடிகை வைஷாலி டக்கரின் மரணத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். பக்கத்து வீட்டுக்காரரும், முன்னாள் காதலருமான ராகுல் நவ்லானி கைது செய்யப்பட்டார். தற்போது அவரது மனைவி திஷா கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவர் மீதும் ஐபிசி 306 பிரிவின் கீழ் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பெயரில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்தூரில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு…

மேலும்...

முஸ்லிம் முறைப்படி திருமணம் நடந்தது – செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா பரபரப்பு பேட்டி!

சென்னை (07 அக் 2022): பிரபல சீரியல் நடிகை திவ்யா அவரது கணவர் அர்னவ் மீது பரபரப்பு குற்ரச்சாட்டுகளை வைத்துள்ளார். செவ்வந்தி சீரியலின் மூலம் பிரபலமானவர் திவ்யா. இவருக்கும் அர்னவ் என்ற சீரியல் நடிகருக்கும் காதலாகி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அர்னவ் நெய்னா முஹம்மது என்ற பெயர் கொண்ட முஸ்லிம், எனினும் சீரியலுக்காக அர்னவ் என பெயரை மாற்றிக் கொண்டார். இந்நிலையில் திவ்யாவுக்கும், அர்னவுக்கும் முஸ்லிம் முறைப்படி திருமணம் நடந்துள்ளது. இதற்காக திவ்யா முஸ்லிமாக மதம்…

மேலும்...

பொன்னியின் செல்வன் – சினிமா விமர்சனம்!

70 ஆண்டுகால தமிழ் சினிமாவின் கனவு. எம்.ஜி.ஆர் முதல் கமல் வரை முயன்று தயாரிக்க முடியாமல் போன கல்கியின் எழுத்தில் உருவான பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணி ரத்னம் பிரமாண்ட திரைப்படமாக உருவாக்கியுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என இந்தியஅளவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார். சோழ மண்ணை ஆண்டு வரும் சுந்தர சோழருக்கு மூன்று பிள்ளைகள். மூத்த…

மேலும்...

சிம்புவுக்கு ஜனாதிபதி விருது!

சென்னை (18 செப் 2022): வெந்து தனிந்தது காடு திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் சிம்புவுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட வேண்டும் என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார். சிம்பு நடித்து கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள வெந்து தனிந்தது காடு திரைப்படம் இந்த வாரம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. இந்நிலையில் படக்குழு செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தியது. அதில் படக்குழுவினர் படத்திற்கு வந்துள்ள வரவேற்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்….

மேலும்...

வெந்து தணிந்தது காடு – சினிமா விமர்சனம்!

கவுதம் மேனன் – சிலம்பரசன் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியுடன், எழுத்தாளர் ஜெயமோகன் கதையில் வெளியாகியுள்ளது, வெந்து தணிந்தது காடு. தந்தையில்லாமல் தாய் ராதிகா மற்றும் தங்கையுடன் கிராமத்தில் வாழ்த்து வருகிறார் முத்துவீரன் (சிலம்பரசன்). காட்டு வேலை செய்து வரும் சிம்பு, ஒரு நாள் காட்டுக்குள் பரவிய தீயில் சிக்கிக் கொண்டு, போராடி காயங்களுடன் அதிலிருந்து தப்பிக்கிறார். காட்டை சிம்பு தான் கொளுத்தி விட்டதாக நினைத்துக் கொண்டு காட்டின் முதலாளி, சிம்புவிடம் நஷ்டத்திற்குப் பணம் கேட்டு வந்து நிற்கிறார். அதெல்லாம்…

மேலும்...