ஹலால் லவ் மிகவும் அழகானது – நடிகை சனாகான் திடீர் திருமணம்!

மும்பை (28 நவ 2020): பாலிவுட் நடிகையும், ‘பிக் பாஸ்’ மூலம் புகழ் பெற்றவருமான சனாகான் குஜராத்தை சேர்ந்த முப் ஃதி சயீத் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் திரையுலகிலிருந்து இருந்து விலகிய பின்னர், முழுமையாக தன்னை இஸ்லாமிய வழிபாடுகளில் ஈடுபடுத்திக் கொண்டார். புன்பு சனா கான் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு தனது பெயரை சயீத் சனா கான் என்று மாற்றிக் கொண்ட சனா கான், இஸ்டா கிராமில்…

மேலும்...

வளைகுடா நாடுகளுடனான உறவு மிக முக்கியமானது: மத்திய அமைச்சர்!

புதுடெல்லி (28 நவ 2020): பொருளாதார மந்த நிலை உள்ள நிலையில் வளைகுடா நாடுகளுடனான உறவு மிகவும் முக்கியமானது என்று மத்திய அரசு விரும்புகிறது. இதன் அடிப்படையில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வளைகுடா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். சவூதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அங்கு பல்வேறு துறைகளில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். இருதரப்பு பேச்சுவார்த்தைகள் வளைகுடாவுடனான உறவை மேலும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. . தற்போதைய பொருளாதார மந்தநிலை ஒரு பெரிய…

மேலும்...

கொரோனா சிகிச்சை மையத்தில் திடீர் தீ விபத்து – 5 நோயாளிகள் பலி!

ராஜ்கோட் (27 நவ 2020): குஜராத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5பேர் பரிதாபாமாக உயிரிழந்துள்ளனர். குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள உதய் சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்றிரவு இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம்…

மேலும்...

அர்ணாப் கோஸ்வாமியின் ஜாமீன் மேலும் நீட்டிப்பு – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (27 நவ 2020): ரிபப்ளிக் டிவி தலைமை செய்தியாளர் அர்ணாப் கோஸ்வாமியின் ஜாமீனை மேலும் நான்கு வாரங்கள் நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்வாய் நாயக் என்னும் ஆர்கிடெக்ட் மற்றும் அவரது தாயார் 2018ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டனர். அன்வாய் தனது தற்கொலைக் கடிதத்தில் தனது மரணத்துக்குக் காரணமாக ரிபப்ளிக் டிவியின் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி பெயரைக் குறிப்பிட்டு இருந்தார். இதன் அடிப்படையில் அர்ணாப் மீதான மறு விசாரணையில் அர்ணாப் கோஸ்வாமியை மும்பை…

மேலும்...

வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்!

புதுடெல்லி (27 நவ 2020): வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லி-யில் விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். எனினும் மத்திய அரசு சட்டத்தை வாபஸ் பெறவில்லை. இதனை அடுத்து நேற்று பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஹரியானா எல்லையில் முற்றுகையிட்டனர். அப்போது விவசாயிகளுக்கு எதிராக போலீசார் கண்ணீர்ப்புகை மற்றும் தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாலத்தில் அமைக்கப்பட்ட போலீஸ் தடுப்புகளை ஆற்றில் வீசினர். இதற்கிடையே, எதிர்வரும்…

மேலும்...
Mamta-Banerjee

மேற்கு வங்கம் நாசருல் இஸ்லாம் பிறந்த நிலம், பாஜகவுக்கு இடமில்லை – மம்தா பானர்ஜி தாக்கு!

கொல்கத்தா (27 நவ 2020): மேற்கு வங்கம் நாசருல் இஸ்லாம் ரவீந்திர நாத் தாகூர் போன்றோர் பிறந்த நிலம், மதவாத சக்தியான பாஜகவுக்கு இங்கு இடமில்லை என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது நாசருல் இஸ்லாம் மற்றும் ரவீந்திரநாத் தாகூரின் நிலம். குஜராத் வகுப்புவாத கலவரங்கள் நடக்கும் நாடு அல்ல. மம்தா மேலும் கூறினார் பாஜக ஒரு வெளி கட்சி என்றும், வெளியாட்களுக்கு வங்காளத்திற்கு இடமில்லை மேற்கு…

மேலும்...

டிசம்பர் 31 ஆம் தேதி வரை சர்வதேச விமானங்களுக்கான தடை நீடிப்பு!

புதுடெல்லி (27 நவ 2020): கோவிட் சூழல் காரணமான சர்வதேச விமானங்களுக்கான தடை டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவிட் 19 தொற்று காரணமாக மார்ச் மாதம் முதல் சர்வதேச விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதேவேளை தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் சேவைகள் தொடரும் என்று டி.ஜி.சி.ஏ தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவுக்கு வெளியே சிக்கித் தவிக்கும்வர்களை திருப்பி அழைப்பதற்கான வந்தே பாரத் திட்டம் இதற்கு பொருந்தாது. குளிர்காலத்தை அடுத்து இரண்டாவது அலை…

மேலும்...

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் போலீஸ் கண்ணீர் புகை வீச்சு – தடுப்புகள் உடைப்பு!

புதுடெல்லி (26 நவ 2020): வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பஞ்சாபிலிருந்து டெல்லிக்கு ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் ஹரியானா எல்லையில் முற்றுகையிட்டனர். அப்போது விவசாயிகளுக்கு எதிராக போலீசார் கண்ணீர்ப்புகை மற்றும் தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாலத்தில் அமைக்கப்பட்ட போலீஸ் தடுப்புகளை ஆற்றில் வீசினர். #WATCH Farmers' protest continues at Shambhu border, near Ambala (Haryana) as police stop them from proceeding to…

மேலும்...

பிரதமர் மோடிக்கு உவைஸி சவால்!

ஐதராபாத் (26 நவ 2020): ஐதராபாத் தேர்தலில் உங்கள் பிரச்சாரம் எடுபடுமா? என்று பிரதமர் மோடிக்கு அஸாதுத்தின் உவைஸி சவால் விட்டுள்ளார். ஐதராபாத்தில் நகராட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரச்சாரத்திற்காக ஐதராபாத்திற்கு . பிரதமரை அழைத்து வராமல் ஏன் மற்றவர்களை அழைத்து வருகிறீர்கள்? என பாஜகவுக்கும் உவைஸி கேள்வி எழுப்பியுள்ளார். இதுவரை ஹைதராபாத்தில் பிரச்சாரம் செய்த பாஜக தலைவர்களில் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இரானி, பெங்களூர் தெற்கு எம்.பி. தேஜஸ்வி சூர்யா ஆகியோர் அடங்குவர்….

மேலும்...

மதம் மாறி திருமணம் செய்து கொண்டால் 10 ஆண்டுகள் சிறை!

போபால் (26 நவ 2020): மதம் மாறி திருமணம் செய்துகொண்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்கும் வகையில் மத்திய பிரதேச பாஜக அரசு சட்ட மசோதா கொண்டுவந்துள்ளது. லவ் ஜிஹாத்தை தடுக்கும் நடவடிக்கையாக இந்த மசோதாவை மத்திய பிரதேச அரசு அறிமுகப்படுத்துகிறது இந்த மசோதாவின் கீழ், மாவட்ட கலெக்டரின் அனுமதியின்றி மதம் மாறியவர்கள் திருமணம் செய்வது தண்டனைக்குரியது. இந்த மசோதா டிசம்பர் 28 ம் தேதி சட்டசபையில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய பிரதேச உள்துறை…

மேலும்...