பீகாரில் ஆட்சியை பிடிக்கும் லாலுவின் மகன் – கருத்துக் கணிப்புகள் தகவல்!

பாட்னா (08 நவ 2020): பீகாரில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில் 243 இடங்களை கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. நேற்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. பீகாரில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவைப்படுகின்றன. அந்த வகையில் கருத்துக்கணிப்பு முடிவுகள், அங்கு லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என கூறுகின்றன….

மேலும்...

சாதாரண மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலகுவாக கிடைக்காது – எய்ம்ஸ் இயக்குனர் கருத்து!

புதுடெல்லி (08 நவ 2020): இந்திய மக்கள் தொகையை கருத்தில் கொண்டால், 2022ஆம் ஆண்டுதான் கொரோனா தடுப்பூசி இயல்பாக கிடைக்கும் என்று தேசிய கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர் குழுவில் உறுப்பினரும், எய்ம்ஸ் இயக்குனருமான டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா வைரஸ் தடுப்பூசி இயல்பாகக் கிடைக்க மேலும் ஓராண்டு காத்திருக்க நேரலாம் என்றும், தடுப்பூசி போடுவதால் மட்டுமே கொரோனா தொற்று முற்றிலுமாக ஒழிந்துவிடாது என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் கொரோனா வைரஸ்…

மேலும்...

கேரள ஆளுநருக்கு கொரோனா தொற்று!

திருவனந்தபுரம் (07 நவ 2020): கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கேரளாவில் கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாக உச்சத்தில் உள்ளது. கேரளாவில் நேற்று ஒருநாளில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மராட்டியம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கேரளாவில் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த…

மேலும்...

லவ் ஜிஹாதிற்கு எந்த ஆதாரங்களும் இல்லை – முடிவடையும் வழக்குகள்!

லக்னோ (07 நவ 2020): உத்திர பிரதேசத்தில் லவ் ஜிஹாத் என்ற குற்றச்சாட்டில் பதிவான 14 வழக்குகள் எந்த ஆதாரங்களும் இல்லாததால் முடிவுக்கு வருகின்றன. ஆகஸ்ட் 20 அன்று, யோகி ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகர் நாட்டில் லவ் ஜிஹாத் என்ற வகையில் ஷாலினி என்ற பெண் குறித்த வீடியோவை ட்வீட் செய்தார். ஷாலினியின் தாயாரும், ஷாலினி லவ் ஜிஹாதில் சிக்கியிருப்பதாக புகார் அளித்தார். இதனை அடுத்து உ.பி. போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து வழக்கை விசாரிக்கத் தொடங்கினர்….

மேலும்...

யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக நிதிஷ்குமார் காட்டம்!

பாட்னா (05 நவ 2020): பிகாரில் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக நிதிஷ் பேசிய பேச்சு , நிதிஷ் குமார் பாஜக கூட்டணி இடையே பிளவை ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் குடியுரிமைச் சட்டத் திருத்தம் குறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறிய கருத்துக்களுக்கு எதிராக பீகார் முதல்வர் நிதீஷ்குமார் கடுமையாக சாடி பேசினார். பிகாரில் ஊடுருவியவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று யோகி பேசிய பேச்சு, நிதிஷ்குமாரை ஆவேசப்பட்ட வைத்துள்ளது. கதிஹாரில் நடந்த பேரணியில் பேசிய யோகி ஆதித்யநாத்,…

மேலும்...

அர்னாபும் தற்கொலை வழக்கும் – பரபரப்பு பின்னணி!

மும்பை (04 நவ 2020): அர்னாப் கோஸ்வாமி கைது செய்ய வழிவகுத்த தற்கொலை வழக்குக்கும் மும்பை காவல்துறையின் கீழ் பதிவாகியுள்ள டிஆர்பி வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. ரிபப்ளிக் டிவி உரிமையாளரும் தலைமை செய்தியாளருமான அர்னாப் கோஸ்வாமி புதன் கிழமை காலை மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதன் பின்னணியில் 2018 ல் தற்கொலை வழக்குதான் காரணம் என கூறப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு அன்வாய் நாயக் மற்றும் அவரது தாயார்…

மேலும்...

அர்னாப் கோஸ்வாமி கைது!

ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2018ஆம் ஆண்டு தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே மும்பை காவல்துறை தனது மாமனார் மற்றும் மாமியார், மகன் மற்றும் மனைவியை உடல் ரீதியாக தாக்கியதாக அர்னாப் கோஸ்வாமி தெரிவித்துள்ளார். அர்னாப் கோஸ்வாமி கைது சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும்...

முதல்வர் மீது வெங்காய வீச்சு!

பாட்னா (03 நவ 2020): பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீது வெங்காயம் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகாரில் 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் அக்டோபர் 28 நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் இன்று (நவம்பர் 3) நடைபெற்று வருகிறது. மேலும், இறுதிகட்ட தேர்தல் நவம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜகவுடன்…

மேலும்...

மதவாத இந்துத்வா பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை – மாயாவதி திட்டவட்டம்!

லக்னோ (02 நவ 2020): பகுஜன் சமாஜ் கட்சி பாஜகவுடன் இணைவதற்கு பதிலாக அரசியலை விட்டு விலகிவிடலாம் என்று மாயாவதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்துத்துவத்தையம் பயங்கரவாதத்தையும் ஆதரித்து வரும் பாஜகவுடன் பகுஜன் சமாஜ்வாடி கட்சி ஒருபோதும் இணைந்து செயல்படாது என்று மாயாவதி தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ்வாதி கட்சி வரும் தேர்தல்களில் இணைந்து செயல்படும் என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் மாயாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜகவும் பகுஜன் சமாஜ் கட்சியும்இணைய வாய்ப்பே இல்லை. பகுஜன்…

மேலும்...
Supreme court of India

தேர்தல் ஆணையத்திற்கு எந்த உரிமையும் இல்லை – உச்ச நீதிமன்றம் காட்டம்!

புதுடெல்லி (02 நவ 2020): கமல் நாத்தின் நட்சத்திர பிரசாரகர் உரிமையை பறிக்க தேர்தல் ஆணையத்திற்கு எந்த உரிமையும் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தப்ரா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கடந்த வாரம் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்….

மேலும்...