பழைய செய்தித்தாளில் கோழி இறைச்சியை மடித்து கொடுத்த முஸ்லீம் கைது!

லக்னோ (05 ஜூலை 2022): உத்திர பிரதேசத்தில் பழைய செய்தித்தாளில் கோழி இறைச்சியை மடித்து கொடுத்த முஸ்லீம் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசம் மாநிலம் சம்பாலில் தலிப் ஹூசைன் என்பவர் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இவர் இந்து கடவுள்களின் படங்கள் அடங்கிய காகிதத்தில் கோழி விற்பனை செய்து வந்ததாக சிலர் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், தலீப் ஹூசைன் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்து தெய்வங்களின் படங்கள் அடங்கிய காகிதத்தில்…

மேலும்...

கவுரி லங்கேஷ் படுகொலை வழக்கிலிருந்து இந்துத்துவா குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி!

பெங்களூர் (05 ஜூலை 2022):பெங்களூரில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளான நிலையில் அவரது கொலை வழக்கு விசாரணை திங்கள்கிழமை நகரின் கீழ் நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கியது. கடந்த செப்டம்பர் 5, 2017 அன்று, பத்திரிக்கையாளரும் ஆர்வலருமான கவுரி லங்கேஷ் தெற்கு பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தின் முன் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 18 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நவீன் குமாருக்கு எதிராக முதல்…

மேலும்...

குர்பானிக்காக பசுவை பலியிட வேண்டாம் – ஜாமியத் உலமா கோரிக்கை

கவுஹாத்தி (05 ஜூலை 2022): பக்ரீத் பண்டிகையின்போது முஸ்லிம்கள் பசுவை பலியிட வேண்டாம்” என, ‘ஜாமியத் உலமா’வின் அசாம் பிரிவு அறிவித்துள்ளது. இதுகுறித்து, அதன் தலைவர் பதுருதீன் அஜ்மல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஹிந்துக்கள் பசுவை புனிதமாக மதிக்கின்றனர் என்பதால் அவர்களின் உணர்சுகளுக்கு மதிப்பளித்து, பக்ரீத் பண்டிகையின் போது, பசுமாட்டை பலியிடுவதை முஸ்லிம்கள் கைவிட வேண்டும். அதற்கு பதிலாக ஆடு, எருமை, ஒட்டகம், காளை ஆகியவற்றை பலியிட்டு ‘குர்பானி’ கொடுக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும்...

பஜ்ரங்தள் போராட்டத்தில் முஸ்லீம் கடை சூறை!

ஷிவமொக்கா (04 ஜூலை 2022): கர்நாடகா ஷிவமொக்கா மாவட்டத்தில் நடந்த பஜ்ரங்தள் போராத்தின்போது முஸ்லீம் ஜவுளிக்கடை போராட்க்காரர்களால் சூறையாடப்பட்டுள்ளன. உதைப்பூர் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பஜ்ரங்தள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர் இந்நிலையில் கர்நாடகா பத்ரவ்தி தாலுகாவில் உள்ள ஒரு முஸ்லிம் ஜவுளிக் கடை,யில் புகுந்த போராட்டக்காரர்கள் கண்ணாடிகளை உடைத்து துணிகளை வெளியே எறிந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்...

காஷ்மீரில் பிடிபட்ட பாஜக பயங்கரவதியிடம் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

ஸ்ரீநகர் (04 ஜூலை 2022): காஷ்மீரில் பிடிப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் பாஜக வை சேர்ந்தவன் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் ரியாஸி பகுதியில் உள்ள கிராம மக்கள் இரு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை பிடித்து காவல்துறையிடடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கிகள், 7 கையெறி குண்டுகள், கைத் துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த இருவரில் ஒருவன் தாலிப் ஹூசைன் ஷா என்பவன் பாஜகவில் நிர்வாகியாக உள்ளான் என்கிற தகவல்…

மேலும்...

ஊடகவியலாளர் ஜுபைர் ஜாமீன் மனு நீதிமன்றம் நிராகரிப்பு!

புதுடெல்லி (02 ஜூலை 2022):ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைரின் ஜாமீன் மனுவை டெல்லியின் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் நிராகரித்தது, மேலும் ஜுபைருக்கு 14 நாள் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது ஜுபைர் கடந்த 2018 இல், இந்து தெய்வத்திற்கு எதிராக பதிவிட்டதாக்க கூறி டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஜுபைர் ஜாமின் கோரி மனு அளித்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜுபைரின் ஜாமீன் மனுவை நிராகரித்தது. மேலும் டெல்லி காவல்துறையின் மனுவை…

மேலும்...

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேக்கு எதிராக உத்தவ் தாக்கரே அதிரடி நடவடிக்கை!

மும்பை (02 ஜூலை): மகாராஷ்டிராவின் முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்ற நிலையில், கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அனைத்து கட்சி பதவிகளில் இருந்தும் ஷிண்டேவை நீக்கம் செய்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். பாஜக ஆதரவுடன் புதிய மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்ற ஏக்நாத் ஷிண்டேவை அனைத்து கட்சிப் பதவிகளில் இருந்தும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நீக்கினார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக ஷிண்டே நீக்கப்பட்டுள்ளதாக சிவசேனா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழன் அன்று, மகாராஷ்டிரத்தின் 20வது முதலமைச்சராக…

மேலும்...

உதய்பூர் படுகொலைக்கு நிபுர் சர்மாவே காரணம் – உச்ச நீதிமன்றம்.!

புதுடெல்லி (01 ஜூலை 2022): நாட்டில் தற்போது நிலவும் பதற்றத்திற்கும் உதய்புர் படுகொலைக்கும் காரணம் நிபுர் சர்மாவே என்று உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது. முகமது நபி குறித்த கருத்தால் பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை டெல்லிக்கு மாற்றக்கோரி நுபுர் சர்மா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது உச்ச நிதீமன்ற நீதிபதிகள் நுபுர் சர்மவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது:- நுபுர் சர்மா தனது பொறுப்பற்ற பேச்சால் நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டார்….

மேலும்...

மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பம் – உச்ச நீதிமன்றம் செல்லும் உத்தவ் தாக்கரே!

மும்பை (29 ஜூன் 2022): மகாராஷ்டிராவில் நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தடை கோரி சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கு விசாரணை, இன்று மாலை நடைபெற உள்ளது. மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 16 சிவசேனா எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், 16 எம்.எல்.ஏக்களை ஜூலை 11 வரை தகுதி நீக்கம்…

மேலும்...

முஹம்மது ஜுபைர் கைதுக்கு ஐ.நா செய்தித் தொடர்பாளர் கண்டனம்!

வாஷிங்டன் (29 ஜூன் 2022): இந்தியாவில் Alt News இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டதற்கு கைது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள ஐநா செய்தித் தொடர்பாளர், ஊடகவியலாளர்கள் எழுதுவதற்கும், ட்வீட் செய்வதற்கும், பேசுவதற்கும் இவ்வாறு சிறையில் அடைக்கப் படுவது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார். உண்மைச் சரிபார்ப்பு இணையதளமான Alt News இணை நிறுவனர் ஜுபைர், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியிட்ட ட்வீட் ஒன்றின் மூலம் மத உணர்வுகளை புண்படுத்தியதாக டெல்லி காவல்துறையால் திங்கள்கிழமை (27-06-2022)…

மேலும்...