டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு!

புதுடெல்லி (29 ஜன 2021):டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே இன்று மாலை 5.05 மணியளவில் குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்தது. இதுகுறித்து தீயணைப்பு அதிகாரி பிரேம் லால் கூறும் போது, “குண்டுவெடிப்பு தொடர்பாக மாலை 5:45 மணியளவில் எங்களுக்கு அழைப்பு வந்தது, நாங்கள் அந்த இடத்தை அடைந்தோம். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை” என கூறினார். குண்டு வெடிப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும்...

ஒரேயொரு வீடியோ கிளிப் – மத்திய அரசை மிரள வைத்த விவசாயிகள்!

புதுடெல்லி (29 ஜன 2021): உத்திர பிரதேச விவசாயிகள் திடீரென ஒன்று திரண்டு போராட்டத்தில் இணைந்துள்ளதால் மத்திய அரசு மேலும் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியுள்ளது. உத்திரபிரதேசத்தின் முசாபர்நகரில் பாரதிய கிசான் யூனியன் தலைவர் நரேஷ் டிக்கைட் கண்ணீர் விட்டு அழுதவாரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் “மத்திய அரசு விவசாயிகளை அழிக்க விரும்புகிறது, இது நடக்க நாம் அனுமதிக்கக் கூடாது. இது விவசாயிகளுக்கு எதிரான சதி சட்டம் திரும்பப் பெறவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதை விட வேறு…

மேலும்...

ஆடைக்கு மேல் பெண்ணின் மார்பை தொடுவது குற்றமல்ல – மும்பை நீதிமன்ற தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் நிறுத்திவைப்பு!

புதுடெல்லி (27 ஜன 2020): ஆடைக்கு மேல் பெண்ணின் மார்பை தொடுவது பாலியல் குற்றமல்ல என்ற மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை டெல்லி உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மகாராஷ்டிராவை சேர்ந்த 39 வயது   நபர். பக்கத்து வீட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமியை  மார்பகங்களை ஆடையோடு சேர்த்து அழுத்தி பாலியல் ரீதியாக அத்துமீறல் செய்துள்ளார். இது தொடர்பாக குற்றவாளிக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் வழக்கு நடைபெற்றது. குற்றவாளியை…

மேலும்...

டெல்லி போராட்டத்திலிருந்து விலகுவதாக இரண்டு விவசாய அமைப்புகள் அறிவிப்பு!

புதுடெல்லி (27 ஜன 2021): டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திலிருந்து விலகுவதாக இரண்டு விவசாயிகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன. அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யு) அறிவித்துள்ளன. இதுகுறித்து அகில இந்திய கிசான் சங்கர்ஷ் குழுவின் தலைவர் வி.எம்.சிங், கூறுகையில், போராட்டமுறைக்கு உடன்பட முடியாததால் போராட்டத்திலிருந்து விலகுவதாகக் கூறினார். “நாங்கள் இந்த போராட்டத்திலிருந்து விலகினாலும், விவசாயிகளின் உரிமைகளுக்கான எங்கள் போராட்டம் தொடரும்” என்று அவர் மேலும் கூறினார். குடியரசு…

மேலும்...

விவசாயிகள் போராட்டத்திற்குள் நுழைந்த சிந்துவுக்கு மோடி அமித்ஷாவுடன் தொடர்பு – அம்பலப்படுத்திய பிரசாந்த் பூஷன்!

புதுடெல்லி (27 ஜன 2021): விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது செங்கோட்டையில் சீக்கியர்களின் கொடி ஏற்றி வன்முறைக்கு காரணமான பஞ்சாபி நடிகர் தீப் சித்துவுடன் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய குடியரசு தினமான நேற்று விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பஞ்சாபி நடிகர் தீப் சித்து செங்கோட்டையில் சீக்கிய கொடியை ஏற்றியதாக சர்ச்சை ஏற்பட்டது. ஆனால் இதில் விவசாயிகளுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என…

மேலும்...

இந்தியாவிலிருந்து சவூதி அரேபியாவிற்கு ஏற்றுமதியாகும் கொரோனா தடுப்பூசி!

புதுடெல்லி (26 ஜன 2021): சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ), சவுதி அரேபியாவுக்கு 3 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா  (AstraZeneca) கோவிட் -19 தடுப்பூசி அளவுகளை பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பாளர் சார்பாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து கொரோனா தடுப்புசிகளை தயாரித்து வருகிறது. இந்நிலையில் “பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பாளர் சார்பாக கொரோனா தடுப்புசிகளை சவூதி அரேபியாவிற்கு ஒருவாரத்தில் ஏற்றுமதி செய்யப்படும்.” என தன் தலைமை நிர்வாகி திங்களன்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்….

மேலும்...

டெல்லியை அதிர வைக்கும் விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு!

புதுடெல்லி(26/01/2021): குடியரசு தினமான இன்று டெல்லியில் விவசாயிகள் டிராக்டர்கள் அணிவகுப்பு நடத்தி அதிர வைத்து கொண்டிருக்கின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் நடத்தும் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. குடியரசு தினமான இன்று ஒரு லட்சம் ட்ராக்டர்கள் அணிவகுப்பு நடத்துவோம் என விவசாயிகள் ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இதனைத் தடுக்க அரசு எல்லா வழிகளிலும் முனைந்தும் எதுவும் கைகூடவில்லை. தற்போது ஆயிரக்கணக்கான ட்ராக்டர்கள் டெல்லி வீதிகளைத் திணறடித்துக் கொண்டிருக்கின்றன. சாரை…

மேலும்...

ஆடைக்கு மேல் பெண்ணின் மார்பை தொடுவது பாலியல் குற்றமல்ல – நீதிமன்றம் பகீர் தீர்ப்பு!

மும்பை (25 ஜன 2021): ஆடைக்கு மேல் பெண்ணின் மார்பை தொடுவது பாலியல் குற்ற வழக்கில் சேராது என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மகாராஷ்டிராவை சேர்ந்த 39 வயது   நபர். பக்கத்து வீட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமியை  மார்பகங்களை ஆடையோடு சேர்த்து அழுத்தி பாலியல் ரீதியாக அத்துமீறல் செய்துள்ளார். இது தொடர்பாக குற்றவாளிக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் வழக்கு நடைபெற்றது. குற்றவாளியை போஸ்கோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை…

மேலும்...

ரிபப்ளிக் டிவிக்கு சாதகமான டிஆர்பி மதிப்பீட்டிற்காக அர்னாப் பணம் கொடுத்தார் – பார்த்தோ தாஸ்குப்தா பகீர் குற்றச்சாட்டு!

புதுடெல்லி (25 ஜன 2021): ரிபப்ளிக் டிவிக்கு சாதகமாக டிஆர்பி மதிப்பீடுகளை கையாள அர்னாப் கோஸ்வாமி ரூ .40 லட்சத்துக்கு மேல் கொடுத்ததாக முன்னாள் பார்க் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தா குற்றம் சாட்டியுள்ளார். டிஆர்பி ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட துணை குற்றப்பத்திரிகையில் இது கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், ” 2004 ஆம் ஆண்டு முதலே அர்னாப் கோஸ்வாமியை நான் அறிவேன். நான் அவருடன் டைம்ஸ் நவ் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளேன் . அர்னாப்…

மேலும்...

ஜெய் ஸ்ரீராம் என கூச்சலிட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அனுமதிக்க மாட்டார்: மஹுவா மொய்த்ரா!

கொல்கத்தா(24 ஜன 2021): “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இப்போது இருந்தால் ஜெய் ஸ்ரீராம் என கூச்சலிட அனுமதித்திருக்க மாட்டார்” என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்தாரா தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125 வது பிறந்த நாளான நேற்று கொல்கத்தாவில் மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த ‘பரக்ரம் திவாஸ்’ விழாவில் கூட்டத்தின் போது பாஜக ஆர்வலர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷங்களை எழுப்பியதை அடுத்து கோபத்தில் மம்தா பானர்ஜி அந்த இடத்தை விட்டு வெளியேறினார். இந்த விழாவில்…

மேலும்...