சர்ச்சை, ஓய்வு, இப்போது தேசிய நாயகன் -மொரோக்காவின் அதிசயம் ஹக்கீம்!

தோஹா (13 டிச 2022): மொராக்கோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி 2022 FIFA உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியை விளையாடத் தயாராக உள்ளது. இதுவரை எந்த ஆப்பிரிக்க நாடும் உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு கூட எட்டியதில்லை. மொராக்கோ அணி விளையாடும் ஆறாவது உலகக் கோப்பை இதுவாகும். 2018-ல் அந்த அணி 27-வது இடத்தில் இருந்தது.. அணியை அரையிறுதிக்கு அழைத்துச் செல்வதில் பல வீரர்கள் பங்களித்துள்ளனர். ஆனால் மிக முக்கியமான பங்களிப்பு 29 வயதான ஹக்கீம் ஜியேச். இவர்…

மேலும்...

சிறு வியாபாரி தந்தைக்கும் வீட்டுப் பணிப்பெண் தாய்க்கும் பிறந்த மொராக்கோ வீரர் ஹக்கீமி!

தோஹா (11 டிச 2022): கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கியுள்ளது. ஜாம்பாவான்களை வெளியே அனுப்பிவிட்டு மொராக்கோ அணி அரையிறுதிக்குள் நுழைந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்த அணியின் நட்சத்திர வீரராக கருதப்படும் 24 வயது அஷ்ரஃப் ஹக்கீமி குறித்து பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றைய காலிறுதி முந்தைய போட்டியில் ஸ்பெயின் அணிக்கு எதிராக பெனால்டி சூட்டில் கோல் அடித்து மொராக்கோ காலிறுதிக்குள் நுழைய மிக முக்கிய…

மேலும்...

மொராக்காவை தாண்டி யாரும் இல்லை – மொராக்கோ கால்பந்து அணிக்கு துபாய் ஆட்சியாளர் வாழ்த்து!

தோஹா (11 டிச 2022): கத்தார் உலகக் கோப்பையின் அரையிறுதியில் போர்ச்சுக்கலை வீழ்த்திய மொராக்கோ அணியின் வீரர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில். “உலகக் கோப்பையில் மொராக்கோவைத் தாண்டி யாரும் இல்லை. அனைத்து அரேபியர்களுக்கும் வாழ்த்துக்கள். மொராக்கோவின் சிங்கங்கள் அரபுக் கனவை நனவாக்குகின்றன” என்று ஷேக் முகமது ட்வீட் செய்துள்ளார்.  

மேலும்...

தனி ஒருத்தியாக கேரளா-கத்தார் ஜீப் பயணத்தில் அசத்திய நாஜிரா!

கத்தார் (07-12-2022): கால்பந்து விளையாட்டின் மீதும் பயணங்களின் மீதும் அளவுகடந்த காதல். இதை வைத்து தனியொரு பெண்ணால் என்ன செய்ய முடியும்? கேரளா-வின் கண்ணூர் நகரத்தில் இருந்து தோஹா-கத்தாருக்கு மஹிந்த்ரா ஜீப்பில் தனியாளாக பயணித்து கத்தார் வந்திருக்கிறார். இவர் நாஜிரா நவ்ஷாத் என்ற இளம்பெண். திருமணமாகி கணவர் குழந்தைகளோடு வசித்தாலும், தனிமைப் பயணத்தில் மிகவும் நாட்டமுடையவர். சிறுவயது முதல் அர்ஜென்டினாவின் தீவிர ரசிகையான இவர், கத்தாரில் நடைபெறும் FIFA World Cup 2022 சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியில்…

மேலும்...

நவீன தொழில்நுட்பத்தில் கலக்கும் கத்தார்!

கத்தார் (06 டிசம்பர் 2022): தோஹாவில் நடைபெற்றுவரும் உலகக் கால்பந்து போட்டியில், விளையாட்டு வீரர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க, கால்பந்துக்குள் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட தகவல் வெளியாகி இருக்கிறது. FIFA World Cup Qatar 2022 போட்டிக்காக, நாடு முழுக்க பல்வேறு புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி வருவதில், கத்தார் முன்னணி வகிக்கிறது. விளையாட்டு நடந்து கொண்டிருக்கும்போதே, ஆஃப் ஸைடு முடிவுகளை கத்தார் ஒளிபரப்பும் video assistant referee (VAR) system பலரின் புருவத்தை உயர்த்தி இருக்கிறது. இது எவ்வாறு…

மேலும்...

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியிலிருந்து சவூதி அணியின் கேப்டன் விலகல்!

தோஹா (28 நவ 2022): கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியிலிருந்து காயம் காரணமாக சவூதி அணியின் கேப்டன் சல்மான் அல்-ஃபராஜ் விலகியுள்ளார். கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை போட்டியில் அர்ஜெண்டினாவுக்கு எதிரான போட்டியில் சவூதி அணியின் கேப்டன் சல்மான் அல்-ஃபராஜ் பலத்த காயம் அடைந்தார். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சை காரணமாக போட்டியிலிருந்து விலக்கப் பட்டுள்ளார். சல்மான் அல்-ஃபராஜ் தொடர்ந்து விளையாட முடியாது என்கிற மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் அவர் உலகக் கோப்பை போட்டியிலிருந்து…

மேலும்...

பிரமாண்டமாகத் துவங்கியது கத்தார் உலகக் கால்பந்து போட்டி!

கத்தார் (தோஹா): உலகக் கோப்பை கால்பந்து போட்டி (FIFA World Cup 2022) கத்தாரில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் நேற்று இரவு (21-11-2022) தொடங்கியது. துவக்க நிகழ்ச்சியாக கே-பாப் இசைக்குழு BTS இன் ஜங் குக் மற்றும் பிரபல நடிகர் மோர்கன் ஃப்ரீமேன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். கத்தார் மற்றும் எக்வடோர் நாட்டிற்கு இடையிலான குரூப் ஏ-வின் முதல் போட்டிக்கு முன்பாக கத்தார் ரசிகர்கள், அல் கோரில் அமைந்திருக்கும் அல் பைத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்வுகளைக் கண்டு…

மேலும்...

காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் ஹிஜாபி கராத்தே சாம்பியன்!

ஐதராபாத் (04 செப் 2022): ஐதராபாத்தைச் சேர்ந்த சையதா ஃபலாக் என்ற கராத்தே சாம்பியன், எதிர் வரும் செப்டம்பர் 11 ல் இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் கராத்தே சாம்பியன்ஷிப் 2022 போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளார்.. ஃபலாக் தற்போது சுல்தான் உல் உலூம் கல்லூரியில் எல்எல்பி படித்து வருகிறார், அவர் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாத்-உல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் உறுப்பினராகவும் உள்ளார். அவர் இதுவரை 20 தேசிய மற்றும் 22 சர்வதேச சாம்பியன்ஷிப்களை வென்றுள்ளார். ஃபலாக்…

மேலும்...

காமென்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நிகாத் ஜரீனுக்கு தங்கம்!

பிர்மிங்காம்(08 ஜூலை 2022);: உலக சாம்பியனான நிகத் ஜரீன், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ பிரிவுக்கான குத்துசண்டை போட்டியின் இறுதிப் போட்டியில் வென்று தங்கப் பதக்கத்தை வென்றார். 26 வயதான இந்திய வீரர் நிகாத் ஜரீன், 33 வயது அயர்லாந்தின் கார்லி மெக்னாலை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றார். ஆரம்பத்தில் போட்டி கடுமையாக இருந்தது. எனினும் அடுத்தடுத்த சுற்றுகளில் திறமையாக செயல்பட்டு ஜரீன் தங்கம் வென்றார். ஜரீனுக்கு பாராட்டுகள்…

மேலும்...

ஐபிஎல் டிவிஸ்ட் – நேரலையில் கோபத்தில் வெளியேறிய இர்பான் பதான்!

மும்பை (03 ஏப் 2022): ஐபிஎல் 15ஆவது சீசன் புதுபுது ட்விஸ்ட்களை கொடுத்து வரும் நிலையில், நேரலையில் ரெய்னாவுடன் கோபித்துக்கொண்டு இர்பான் பதான் வெளியேறிய வீடியோ ஒன்றி வைரலாகி வருகிறது. ஐபிஎல் 15ஆவது சீசனில் சுரேஷ் ரெய்னா எந்த அணியிலும் விளையாடவில்லை. எனினும் போட்டிகளை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரெய்னாவை வர்ணனையாளராக ஒப்பந்தம் செய்துள்ளது. ஹிந்தியில் வர்ணனை செய்து வருகிறார். மேலும் போட்டி முடிந்தப் பிறகு போட்டியில் நடந்த விஷயங்கள் குறித்தும் அவ்வபோது பேசி வருகிறார்….

மேலும்...