Violence KG Halli

பெங்களூரு-வில் கலவரம்..! பதற்றமான சூழல்..!!

பெங்களூரு (12 ஆக 2020): காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஸ்ரீநிவாச மூர்த்தி-இன் உறவினர் ஒருவர் இஸ்லாத்தின் தூதர் குறித்து தரக்குறைவான Facebook இடுகை ஒன்றை பதிவிட்டிருக்கின்றார்.இதன் காரணமாக பெங்களூரு முஸ்லிம்கள் கொதித்தெழுந்தனர். ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கே.ஜி. ஹள்ளி பகுதியில் ஒன்று கூடினர். நவீன் என்ற அந்த நபரை உடனே கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் தனது முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக கூறியிருக்கின்றார் நவீன். போலீஸார் அவரைக் காவலில் எடுத்து இது குறித்து அவரிடம்…

மேலும்...

மகிழ்ச்சியில் சென்னை மக்கள் – காரணம் இதுதான்!

சென்னை (11 ஆக 2020): சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை திடீரென பெய்த மழையால் சென்னை மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். கொரோனா அச்சம் கொஞ்சம் கொஞ்சமாக சென்னையில் குறைந்து வரும் நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை முதல் கன மழை பெய்து வருகிறது. அண்ணாசாலை, சேப்பாக்கம், மெரினா, ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, பரங்கிமலை, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகனப் போக்குவரத்துக்குச்…

மேலும்...

திமுக எம்.எல்.ஏ அனிதா ராதா கிருஷ்ணன் பரபரப்பு அறிக்கை!

சென்னை (09 ஆக 2020): திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையப்போவதாக சமூக வலைத்தளத்தில் பரவி வந்தன. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். கு.க.செல்வத்தைத் தொடர்ந்து தி.மு.க.வில் இருந்து மேலும் பலர் பா.ஜ.க. தலைவர்களைச் சந்திக்க உள்ளனர் என்றும், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பெயர்களும் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தன. இதற்கு மறுப்பு தெரிவித்து .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் , “கடந்த சில…

மேலும்...

சென்னை மக்களுக்கு ஆறுதலான தகவல்!

சென்னை (09 ஆக 2020): சென்னை மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக கொரோனா பாதிப்பு குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக .பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளதாவது, கடந்த ஜூலை 5ம் தேதி நிலவரப்படி, சென்னையில் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் இருக்கும் தெருக்களின் எண்ணிக்கை 8,402 ஆக இருந்த நிலையில், ஆகஸ்ட் 7ம் தேதி, இது 513…

மேலும்...
VANITHA

இப்படியெல்லாம் பண்றீங்களேம்மா..?!

சென்னை (09 ஆகஸ்ட், 2020):இரு சக்கர வாகனத்தில் உணவு டெலிவரி செய்வது போல் கஞ்சா விற்பனை செய்து வந்த சென்னையைச் சேர்ந்த கால் டாக்ஸி பெண்ணை போலீசார் கைது செய்தனர். சென்னை,கிண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் கஞ்சா விற்பனை கனஜோராக நடப்பதாக சென்னை, கிண்டி போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் கிண்டி – வேளச்சேரி சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அந்த வழியே இருசக்கர…

மேலும்...

நடிகை ஜோதிகா செய்த மகத்தான உதவி – அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பாராட்டு!

தஞ்சாவூர் (08 ஆக 2020): நடிகை ஜோதிகா ஏழைத் தாய்மார்கள், குழந்தைகள் பயன்பெறும் வகையில் தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். நடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்தபோது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை பார்வையிட்டார். அங்கு பிரசவத்துக்காகச் சேர்க்கப்படும் தாய் சேய் பத்திரமாகக் கவனிக்கப்பட அவர்களுக்கு கூடுதல் உதவிகள் தேவை என்பதை ஜோதிகா கேட்டறிந்தார். இந்நிலையில் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு, நடிகை ஜோதிகா ரூ.25…

மேலும்...

அண்ணாவே சொல்லிவிட்டார் – ஸ்டாலினை வம்புக்கு இழுக்கும் திமுக எம்.எல்.ஏ!

சென்னை (08 ஆக 2020): திமுகவை சேர்ந்தவர்கள் மற்ற கட்சிக்காரங்களை சந்திக்கக் கூடாது என்றா எந்த விதியும் இல்லை என்று என அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரும் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவுமான கு.க.செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; “பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்தது தொடர்பான விவகாரத்தில் பதிலளிக்கும் முன்னரே கட்சியில் இருந்து நீக்கியிருப்பது இயற்கை நீதிக்கு விரோதமானது. ஆகவே தங்களின் தற்காலிக நீக்கத்தைத் திரும்ப பெற்றுக்கொள்ள…

மேலும்...
TN-Students

தேர்வெழுதாமலே, தேர்ச்சி,10-ஆம் தேதிக்கு மகிழ்ச்சி!

சென்னை (07 ஆகஸ்ட், 2020):ஆகஸ்ட் 10ஆம் தேதி, தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழக உயர்கல்வி தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி அறிவித்துள்ளார். உலகையே உலுக்கி வரும் அதிபயங்கர கொடிய நோயாக உருவெடுத்திருக்கின்ற கொரோனா, அனைவரின் இயல்பு வாழ்கையையும் புரட்டி போட்டு விட்டது. பல்கலைகழகம், கல்லூரி, பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களை தவிர்த்து அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக தாக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. கடந்த சில தினங்களுக்கு…

மேலும்...
Durai Murugan

“பல்லக்கு தூக்கி ஆதாயம் பெறும் தினமலர்”-துரைமுருகன் காட்டம்!

சென்னை (07 ஆகஸ்ட், 2020): திராவிட முன்னேற்றக் கழகத்தில் தனக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்கிற ஏக்கத்திலும் கோபத்திலும் தி.மு.க.-வில் கலகத்தை உருவாக்க நான் முனைவது போல் தினமலர் நாளிதழில் வெளியான செய்தி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது:- ‘ஏதோ எனக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைக்கவில்லை’ என்ற ஏக்கத்தில் கழகத்துக்குள் உருவாக்க நான் முனைவது போல், ஒரு செய்தியை – அதிலும், தலைப்புச் செய்தியாக தினமலர் (7.08.2020)…

மேலும்...

எஸ்.வி.சேகரை கிண்டலடித்த முதல்வர் எடப்பாடி!

திண்டுக்கல் (07 ஆக 2020): எஸ்.வி.சேகர் எந்த கட்சியை சேர்ந்தவர்? என்று முதல்வர் எடப்பாடி கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணி மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், எஸ்வி சேகரின் கருத்து குறித்து கேட்டபோது, “எஸ்.வி சேகர் ஏதாவது பேசுவார் வழக்கு என வந்தால் ஒளிந்து கொள்வார். எங்களுக்கு இந்தி தெரியும் என எப்படி அவருக்கு தெரியும்? அவரையெல்லாம்…

மேலும்...