சென்னைக்கு ஆபத்து – பகீர் கிளப்பும் ராமதாஸ்!

சென்னை (06 ஆக 2020): “சென்னையிலுள்ள கிடங்கு ஒன்றில் வைக்கப்பட்டுள்ள அமோனியம் நைட்ரேட்டால் வெடி விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது” என்று, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. லெபனான் நாட்டின் மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டதற்கு இந்த வெடிமருந்து தான் காரணமாகும்! சென்னை…

மேலும்...

திருமாவளனின் மூத்த சகோதரி கொரோனா பாதிப்பால் மரணம்!

சென்னை (05 ஆக 2020): கொரோனா நோய்த் தொற்று காரணமாகப் பாதிப்பிற்கு ஆளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்பியுமான திருமாவளவனின் மூத்த சகோதரி பானுமதி உயிரிழந்தார். பானுமதிக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பானுமதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பானுமதி, சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இந்த செய்தி விடுதலை சிறுத்தைகள்…

மேலும்...

எஸ்.வி.சேகர் மானம், ரோஷம் உள்ளவரா? – அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!

சென்னை (05 ஆக 2020): நடிகரும், பாஜக ஆதரவாளருமான எஸ்.வி.சேகர்  சமீபத்தில் அதிமுக-வை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் எஸ்.வி.சேகரின் கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் தெரிவித்ததாவது: ”மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் ஜெயலலிதா தான் இவரை அடையாளம் காட்டினார். அந்த தொகுதியில் இவர் எந்தக் கொடியை காட்டி ஓட்டு வாங்கினார்? அதிமுக கொடி, அண்ணா பெயரை சொல்லி அம்மாவால் எம்.எல்.ஏ. ஆனார். அவ்வளவு மான ரோஷம் சூடு இருந்தால் அந்த ஐந்து…

மேலும்...

திமுக எம்.எல்.ஏவுக்கு திமுக தலைமை நோட்டீஸ்!

சென்னை (05 ஆக 2020): பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வரும் திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வத்திற்கு திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ, கு.க.செல்வம், நேற்று டெல்லியில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனுடன் பா.ஜ.க தேசிய தலைவர் நட்டாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கு.க.செல்வம், “ராமர் கோயிலுக்குப் பூமி பூஜை நடத்தும் பிரதமர் மோடிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம்…

மேலும்...

அதிர்ச்சி அளிக்கும் தமிழக அரசின் முடிவு – திருமாவளவன் கருத்து!

சென்னை (03 ஆக 2020): மும்மொழிக் கொள்கையை ஏற்காதது குறித்து முடிவெடுத்த தமிழக அமைச்சரவையின் முடிவை வரவேற்றுள்ள விசிக தலைவர் தொல்.திருமாவளவன், தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள பிற தீங்குகள் குறித்து அமைச்சரவை முடிவெடுக்காதது அதிர்ச்சி அளிப்பதாக,தெரிவித்துள்ளார். இதுகுறித்து முகநூலில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மும்மொழிக்_கொள்கையை ஏற்கமாட்டோம் என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்திருப்பதை விசிக சார்பில் வரவேற்றுப் பாராட்டுகிறோம். அதே வேளையில், தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள பிற தீங்குகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில்…

மேலும்...

மும்மொழிக் கொள்கைக்கு இடமே இல்லை – தமிழக முதல்வர் திட்டவட்டம்!

சென்னை (03 ஆக 2020): “தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு இடமே இல்லை” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக, பல காலகட்டங்களில், தங்களது உணர்வை பல்வேறு போராட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர். 1963ஆம் ஆண்டைய அலுவல் மொழிகள் சட்டத்தின் 3வது பிரிவில், இந்தியை அலுவல் மொழியாக பின்பற்றாத மாநிலங்களை பொறுத்த வரையில், மத்திய மாநில…

மேலும்...

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹிதுக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை (02 ஆக 2020): தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹிதுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம், ராஜ் பவனில் தீயணைப்பு மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து ஒரு தடுப்பு நடவடிக்கையாக, ஆளுநர் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு பின், ஆளுநர் மாளிகைக்கு திரும்பிய நிலையில்…

மேலும்...

தேசியக்கொடியும், திராவிடக் கொடியும் – கவிஞர் வைரமுத்து திடீர் கருத்து!

சென்னை (01 ஆக 2020): ‘தேசியக் கொடியை மதிப்போம், அதேபோல திராவிடக் கொடியையும் தூக்கிப் பிடிப்போம்’ என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இந்தியக் கல்விக்கொள்கையை மத்திய அரசு மாற்றியமைத்து புதிய கல்விக் கொள்கை அறிவிப்புகளை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. தமிழகத்தில் பிரதான கட்சிகள் இந்த புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து வருகின்றன, சிலர் ஆதரிக்கவும் செய்கின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அண்ணா – கலைஞர் இறுதி…

மேலும்...
Gunasekaran News 18 Tamil

நியூஸ் 18 ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார் குணசேகரன்!

சென்னை (31ஜூலை 2020):கடந்த சில நாட்களாக நியூஸ் 18 ற்றும் சங்க பரிவார யூ ட்யூபர்களுக்கு இடையில் நடந்து வந்த பனிப்போரின் எதிரொலியாக அந்த சேனலில் நிலவி வந்த பல குழப்பங்களினால், அதற்கு எதிராக பல்வேறு சமூக வலைதளப் பதிவுகளும், அந்த சேனலை அன்சப்ஸ்க்ரைப் செய்வதாக பலரும் அறிவித்து வந்தனர்.ஒரு சில கட்சிகள் அதன் விவாதங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை எனவும் அறிவித்தன. அதன் முத்தாய்ப்பாக தமிழகத்தின் பிரபல ஊடகவியலாளரும், நியூஸ் 18 தமிழ் சேனல் ஆசிரியருமான, தற்போது…

மேலும்...

எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் அதிமுக துரோகம் இழைக்கிறது: ஸ்டாலின்!

சென்னை (31 ஜுலை 2020): “அதிமுக எம்.ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைக்கிறது.” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ” ஜனநாயக நெறிமுறைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளையும் கிஞ்சித்தும் மதிக்காமல் எதேச்சதிகாரத்தின் உச்சக்கட்டத்தில் செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசு, திட்டமிட்டு பல்வேறு உள்நோக்கங்களுடன் திணிக்கின்ற புதிய கல்விக் கொள்கை என்பது, மாநில உரிமைகளுக்கும் – சமூகநீதிக்கும் – இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் – எதிராக இருப்பதுடன், இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தையும் கடும்…

மேலும்...