Zionism and Hindutva

இந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும் : ஓர் ஒப்பீடு – பகுதி-5

இரண்டாம் ஒப்பீடு: யூதர்களின் சியோனிஸமும் பிராமணர்களின் இந்துத்துவாவும்! ‘இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பார்கள்’ என்று தமிழிலே மிகவும் பிரபலமான பழமொழி ஒன்றுண்டு. ஒதுங்க இடம் இல்லாமல் சுற்றித் திரிபவனுக்கு இருக்க இடம் கொடுத்தால் அதற்கு பரிகாரமாக நன்றியையும் மகிழ்ச்சியையும்தானே தருவான். அவன் எப்படி படுக்க பாய் கேட்பான்? என்று சிலருக்கு சந்தேகம் வரலாம். இந்த சந்தேகம் யாருக்கெல்லாம் வருகிறதோ அவர்கள் அனவரும் பாலஸ்தீனத்தின் வரலாற்றைச் சற்று திரும்பிப் பாருங்கள். பாலஸ்தீனத்தின் வரலாற்றைப் படிப்பவர்கள் இந்த…

மேலும்...

கொரோனாவால் தந்தையை இழந்த மகனுக்கு திமுகவில் முக்கிய பதவி!

சென்னை (26 ஜூலை 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் மகன் ராஜா அன்பழகன் சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த நே.சிற்றரசு அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக ராஜா அன்பழகன் சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளராக தலைமை…

மேலும்...

ரேஷன் கடைகளில் நாளை (திங்கள்) முதல் இலவச முகக்கவசம் -முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

சென்னை (26 ஜூலை 2020): தமிழகம் முழுவதும், ரேஷன் கடைகளில் நாளை முதல் இலவச முகக்கவசம் வழங்கப்படுகிறது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் கொரோனா தொற்று அதிக அளவு இருந்து வருகிறது. இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைவரும் முகக்ககவசம் அணிவது அவசியமாகப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து…

மேலும்...

பிரபல நடிகைக்கு அதிமுகவில் முக்கிய பதவி!

சென்னை (26 ஜூலை 2020): பிரபல நடிகை விந்தியாவுக்கு அதிமுகவில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்களாக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், திருநெல்வேலி மாநகர் மாவட்டத்தை சேர்ந்த பாப்புலர் வி.முத்தையா, தென்சென்னை வடக்கு மாவட்டம் தியாகராயர் நகரைச் சேர்ந்த நடிகை விந்தியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் அதிமுக இளைஞர்…

மேலும்...

மறைக்கப்படும் கொரோனா மரணங்கள் – ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு!

சென்னை (26 ஜூலை 2020): சென்னையில் கொரோனா மரணங்களை தமிழக அரசு மறைப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், சென்னையில் 63% கொரோனா மரணங்களை எடப்பாடி பழனிசாமி அரசு மறைத்திருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் “கட்டமைப்பு வசதி இல்லாத மற்ற மாவட்டங்களில் எத்தனை மரணங்களை அரசு மறைத்திருக்கிறதோ?” எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மரணக்கணக்கில் உள்ள தவறுகளை திருத்த ஏற்கனவே 39 கமிட்டி உள்ள…

மேலும்...

பிளாஸ்மா தானத்துக்கான தகுதி பரிசோதனை முகாம்-முதன் முறையாக சென்னையில் அறிமுகம்

சென்னை (24/07/2020):தமிழகத்தில் கொரோனா கோவிட்-19 நோய் தொற்றின் காராணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. நோய் தொற்றினை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த மக்களை கொண்டு பெறப்படும் பிளாஸ்மா தானத்தின் மூலம் சிகிச்சை அளிக்க தமிழக அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதற்காக சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா பிரித்தறியும் எந்திரம் தற்போது செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் …

மேலும்...
ECI

திருவொற்றியூர்-குடியாத்தம் தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் இல்லை. தேர்தல் ஆணையம் கைவிரிப்பு!

தில்லி (24ஜூலை,2020):கொரோனா தொற்று பேரிடர் நெருக்கடியின் காரணமாக தமிழகத்தில் காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் கைவிரித்து விட்டது. தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி மற்றும் பிப்ரவரி 28-ஆம் தேதி குடியாத்தம் தொகுதி உறுப்பினர் காத்தவராயன் ஆகிய இருவரும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்கள். இந்த தொகுதிகளுக்கு தேர்தல் ஆணைய விதிப்படி 6 மாத காலத்திற்குள் அதாவது, ஆகஸ்ட் 26 இடைத்தேர்தல்…

மேலும்...

கொரோனா பரவலால் தடுமாறும் தமிழகம் – ஒரே நாளில் 6472 பேருக்கு கொரோனா தொற்று!

சென்னை (23 ஜூலை 2020): தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,92,964 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 88 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதில் 63 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 25 பேர் தனியார் மருத்துவமனைகளிலும்…

மேலும்...

கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு!

சென்னை (23 ஜூலை 2020): கல்லூரி மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வுகளை தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் தமிழகத்தில் தீயாய் பரவி வரும் நிலையில், கலை அறிவியல் கல்லூரி முதுகலை படிப்புகள், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வுகளை தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்தது. அதேவேளை மாணவர்களின் அரியர்கள் ரத்து செய்யப்படவில்லை என்றும், மாணவர்கள் தங்களது அரியர் பேப்பர்களை, கல்லூரி…

மேலும்...

மோடியின் துரோகத்தை ஆதரிக்கிறீர்களா? – ரஜினிக்கு ஜோதிமணி சரமாரி கேள்வி!

சென்னை (23 ஜூலை 2020): “ஓபிசி இட ஒதுக்கீடு குறித்து வாய் திறக்காதது ஏன்?” என்று ரஜினிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் கடவுளான முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும் கொச்சையாக சித்தரித்து கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் காணொலி ஒன்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோ பதிவிற்கு இந்து அமைப்பினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் கறுப்பர் கூட்டம் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் கறுப்பர் கூட்டம் யூடியூப்…

மேலும்...