பிளாஸ்மா தானம் மூலம் கொரோனா சிகிச்சை வெற்றி – அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்!

சென்னை (23 ஜூலை 2020): தமிழகத்தில் பிளாஸ்மா தானம் மூலம் கொரோனா சிகிச்சை வெற்றி அடைந்திருப்பதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிளாஸ்மா வங்கியை தொடங்கி வைத்து பேசிய விஜயபாஸ்கர், “பிளாஸ்மா நன்கொடையாளர்கள் 2 பேர் இன்று பிளாஸ்மா தானம் அளித்து தொடங்கியிருக்கிறார்கள். ஒரே நேரத்தில் இந்த பிளாஸ்மா வங்கியில் 7 பேர் தானம் அளிக்கக் கூடிய வகையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன….

மேலும்...
News 18

காவிமயமாக்கப்படுகின்றதா, தமிழக ஊடகங்கள்..?

சென்னை (22 ஜூலை 2020):கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மாரிதாஸ் ‘ஊடகத்துறையை’ பற்றி ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் நியூஸ் 18 சேனலில் திமுக கொள்கையுடையுவர்கள் இருக்கிறார்கள். அது திமுகவிற்கு சார்பாக செயல்படுகிறது. ஆகவே நியூஸ் 18 சேனல் நடுநிலை ஊடகம் கிடையாது என்று பேசினார். அதற்கு அவர் ஆதாரமாக முன்வைத்ததுதான் மிகவும் கேலிக்குறியது. நியூஸ் 18 சேனலின் சீனியர் எடிட்டராக உள்ள குணசேகரன் திமுக ஆதரவாளர். அதற்கு ஆதாரம் அவரது மாமனார் தி.க.-வைச் சேரந்தவர் என்று…

மேலும்...

தமிழக சுகாதாரத்துறை செயலர் மனைவி, மகன் உட்பட நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (21 ஜுலை2020): தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மனைவி, மகன் உட்பட குடும்பத்தினர் நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பதிவில், மனைவி கிருத்திகா, மகன் அரவிந்த், மாமனார் மாமியார் உட்பட நான்கு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள், கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு நெருங்கிய உறவினர்கள் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்...

மனித நேய மக்கள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ அஸ்லம் பாஷா காலமானார்!

சென்னை (21 ஜூலை 2020): மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும், ஆம்பூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா இன்று அதிகாலை 5 மணியளவில் மரணமடைந்தார். இதுகுறித்து மமக தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அஸ்லம் பாஷாவின் மரணம் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். தனிப்பட்ட முறையில் எனது உடன் பிறவா சகோதரனை எனது மாணவராக வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் எனது வகுப்பில் 30 ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்து இனிமையாகப்…

மேலும்...

கொரோனா: சென்னையில் படிப்படியாக குறைவு – மற்ற மாவட்டங்களில் தொடரும் அதிகரிப்பு

சென்னை (21 ஜூலை 2020): கொரோனா தொற்று சென்னையில் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதிகரித்தபடி உள்ளன. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 1,298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…

மேலும்...

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் இலவச ஹோமியோபதி மருந்து மேலக்காவேரியில் விநியோகம்!

கும்பகோணம் (20 ஜூலை 2020):மேலக்காவேரி முகையத்தீன் ஆண்டவர் ஜாமியா பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் மேலக்காவேரி மிஸ்வா தன்னார்வலர்கள் இணைந்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்து ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மாத்திரைகளை 2,500 குடும்பங்களுக்கு இலவசமாக விநியோகிக்கும் நிகழ்வு திங்கள் கிழமை காலை 11.00 மணி அளவில் தொடங்கியது. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலைத் தடுக்கும் வகையில் இன்று மேலக்காவேரி ஜாமியா பள்ளிவாசல் சமுதாய கூடத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்து மேலக்காவேரி ஜாமியா…

மேலும்...
INNERAM.com 2

கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போமா..?

சென்னை (20ஜூலை,2020): “என்னப்பா இது டெய்லி வீட்டுக்கு ஆவின் பால் தானே போடுவே, இதென்ன அதானி பால்? “மன்னிக்கவும் சார் ஆவினை அதானி வாங்கிட்டாங்க..!: ———– “என்னப்பா தி இந்து தமிழ் நாளிதழ் நாங்க வாங்கறதில்லையே இப்போ எதுக்கு அதைக் கொண்டு வந்து போடுற?” “விஷயம் தெரியாதா சார் ஹிந்துவை இப்போ ஹிந்துஸ்தான் லீவர் கம்பெனி வாங்கிடுச்சு இனி நாட்டில் இந்த ஒரே நியூஸ் பேப்பர் மட்டும் தான்.!” ————- “கேபிள்காரரே வெறும் சங்கரா டிவி.. காசி…

மேலும்...

நியூஸ் 18 சேனலை முற்றிலும் புறக்கணிப்பதாக தமுமுக அறிவிப்பு!

சென்னை (20 ஜூலை 2020): நியூஸ் 18 சேனலை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த மரிதாஸ், சங்க பரிவார் அமைப்புகளுக்கு ஆதரவாக தொடரந்து பதிவிட்டு மத பிரச்சனைகளைக் கிளப்பக் கூடிய கருத்துகளை பரப்புவதையும் தன் ஆயுதமாக கொண்டுள்ளார். கூடவே ஊடகங்களை கீழ்த்தரமாக பேசுவதும் சில சேனல்களையும் அதில் பணியாற்றுவோர் குறித்தும் தனிப்பட்ட முறையில் தாக்கி அவதூறு பரப்புவதும் என்ற புதிய யுத்தியை இப்போது கையில் எடுத்துள்ளார். உலகமே அதிர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும்…

மேலும்...
ARR 1

இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானு-க்கு நோட்டீஸ்!

சென்னை (19 ஜூலை,2020):கடல்புறா படத்தின் மூலம் நடிகர் மற்றும் இயக்குநராக அறிமுகமானவர் பாபு கணேஷ். தொடர்ந்து இரவு பாடகன், தீர்ப்புகள் மாற்றப்படும் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர், திரையரங்குகளில் முதல்முறையாக திரைப்பட காட்சியுடன் இணைந்த வாசனையை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது கான்செப்டை பயன்படுத்தி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார் பாபு கணேஷ். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் தமிழ் சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகளாகின்றன. கடந்த 2000-ம் ஆண்டில் நாகலிங்கம் என்ற திரைப்படத்தை சாம்பிராணி வாசனையுடன்…

மேலும்...

கோயில்கள் அருகே டயர்களை எரித்து பரபரப்பை கிளப்பிய கஜேந்திரன் என்பவர் கைது!

கோவை (20 ஜூலை 2020): கோவையில் கோயில்கள் அருகே டயர்களை எரித்து பரபரப்பை கிளப்பிய கஜேந்திரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை டவுன்ஹால் என்.எச்.சாலை ஐந்து முக்கு பகுதியில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. அங்கு கோவிலை சுத்தம் செய்ய வரும் பெண், அங்கு ஒருவர் கோவில் முன்பு டயர்களை போட்டு தீ வைத்து எரிக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதற்குள் அந்த நபர் அங்கிருந்து போய்விட்டார். உடன் கோவிலுக்கு…

மேலும்...