கொரோனா காலத்தில் மக்கள் வீட்டில் இருந்ததற்கு தண்டனையா? – ஸ்டாலின் சரமாரி கேள்வி!

சென்னை (19 ஜூலை 2020): “கொரோனா காலத்தில் மக்கள் வீட்டில் இருப்பதற்கு மின் கட்டணத்தைப் பார்த்தால் மக்கள் ஷாக் ஆகும் அளவுக்கு அதிகமாக உள்ளது” என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்டாலின் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஸ்டாலின் பேசியுள்ளதாவது: தமிழக அரசின் மின்கட்டணத்தை பார்த்தால் மின்சாரம் நமக்குள் பாய்ந்தது போல் இருக்கிறது. மக்கள் எல்லாரும் வீட்டில் இருந்ததால் மின்சாரம் அதிகமாக செலவாகி இருக்கும் என்று சொல்கிறார்கள். ஊரடங்கில்…

மேலும்...
Roorki/IIT Violence/Nigeria

மாணவர் மீது பயங்கர தாக்குதல்! ஐ.ஐ.டி.இயக்குநர் கைது!

உத்தர்கண்ட் (18 ஜூலை,2020): உத்தர்கண்ட் மாநிலம், ரூர்கீ ஐ.ஐ.டி.யில் பயின்று வந்த நைஜீரியா மற்றும் கானா நாட்டு இரட்டை குடியுரிமை பெற்ற மாணவர் மீதும் அவருடைய சக மாணவர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக ஐ.ஐ.டி. இயக்குநர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். கொரோனா நெருக்கடியால் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்த போதிலும் அந்த மாணவர் அதனையும் மீறி வெளிச் சென்றதால் தனியார் பாதுகாப்பு ஏஜென்சியினர் உதவியுடன் அவர்கள் மீது தாக்குதல்…

மேலும்...
Ajithkumar 1

நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை (18ஜூலை,2020):தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் அஜித்குமார். இவருக்கென்று தமிழகம் உட்பட உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு! அவருடைய வீடு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ளது. யாரோ ஒரு மர்ம நபர் இன்று காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு போன் செய்து இன்னும் சற்று நேரத்தில் அஜித்குமார் வீட்டில் வெடிகுண்டு வெடிக்க இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். அதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் அஜித்குமார் வீட்டுக்கு விரைந்து சென்று வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர்….

மேலும்...
HCl

HCL நிறுவன தலைவர் பதவியிலிருந்து ஷிவ் நாடார் திடீர் இராஜினாமா..! புதிய தலைவரானார் ரோஷ்னி நாடார்!

நாய்டா(18 ஜூலை,2020):ஐடி தொழில்நுட்பத்துறை நிறுவனங்களில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார், தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக திடீரென அறிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்தவரான ஷிவ் நாடாரால் தொடங்கப்பட்ட இந்தியாவின் 3-வது பெரிய ஐ.டி நிறுவனமாகவும் (HCL) இந்துஸ்தான் கம்யூட்டர்ஸ் லிமிடெட் நிறுவனம் நாய்டாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவருக்குப் பதிலாக அவருடைய மகள் மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா தலைவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது….

மேலும்...

சுரேந்தினுக்கு ஒரு நீதி.. எஸ்.வி.சேகருக்கு ஒரு நீதியா..? பாயும் பால் முகவர்கள்!

சென்னை (18 ஜூலை 2020): “பெரியாரிஸ்டுகள் மீது புலிப்பாய்ச்சல் பாயும் அரசு, இந்துத்துவா நபர்கள் மீது ஆமை நடை நடப்பது ஏன்?” என்று பால் முகவர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடவுள் மறுப்பு, பெரியாரிசம் எனும் இந்து மதத்தையும், இந்து மதக் கடவுளர்களையும், பக்தி மார்க்கங்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வருவது ஏற்புடையதல்ல. அதிலும் மூடநம்பிக்கை ஒழிப்பு என்கிற பெயரில் குறிப்பிட்ட மதத்தை மட்டும் இலக்கு வைத்து செயல்படுவது…

மேலும்...
TN Secretariat

கொரோனா தொற்று பரவலை கட்டப்படுத்த 5 மாவட்டங்களில் மேலும் சிகிச்சை மையங்கள்!

சென்னை(17 ஜூலை 2020):சென்னையை அடுத்து தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் பணியில் தமிழக அரசு மம்முரமாக ஈடபட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களில் புதிதாக கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைப்பதற்காக 4 கோடி ரூபாயை ஒதுக்கி அரசாணை வெளியிட்டது எடப்பாடி அரசு. சென்னையைப் பொறுத்த வரை கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து…

மேலும்...

பறிபோகும் தொழிலாளர் உயிர்கள் – நீதிமன்ற உத்தரவை மதிக்காத மாநில அரசுகள்!

சென்னை (17 ஜூலை 2020): நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் “மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலத்தில் உயிர் பறிபோகும் நிலையில் நீதிமன்ற உத்தரவை மாநில அரசு மதிக்கவில்லை என்று தமிழ் நாடு பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ‘சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தில் நேற்று முன்தினம் (15.07.2020) கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது இரண்டு துப்புரவு தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் இதே போன்று கடந்த ஜூலை…

மேலும்...

நேபாளிக்கு ஹிந்துத்வ அமைப்பால் இழைக்கப்பட்ட கொடுமை!

வாரணாசி (17 ஜூலை 2020): நேபாளத்தை சார்ந்த ஒருவருக்கு மொட்டையடித்து , ஜெய் ஶ்ரீராம் கோஷம் போடச் சொன்ன இந்துத்வ அமைப்பினரின் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நேபாள பிரதமர் ஷர்மா ஒலி , ராமர் நேபாள நாட்டினைச் சார்ந்தவர் என தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு அமைப்புகளிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்தன. இந்த நிலையில், விஷ்வ ஹிந்து சேனா என்ற இந்துத்வ அமைப்பினைச் சார்ந்த அருண் பதக் என்பவர் பேஸ்புக்கில் ஒரு காணொளியை பதிவிட்டுள்ளார். அதில் அந்த அமைப்பினை…

மேலும்...

சென்னையில் குறையும் ஆபத்து!

சென்னை (17 ஜூலை 2020): ‘சென்னையில் கொரோனா தொற்றின் வேகம் குறையும்’ என்று கணித அறிவியல் நிறுவனம் புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜூலை 10 மற்றும் 14ம் தேதி இடையே சென்னை மாநகரில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததை சுட்டிக் காட்டி கணித அறிவியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், ஒரு நபர் மூலம் எத்தனை நபர்களுக்கு தொற்று பரவுகிறது என்ற கணக்கெடுப்பை நடத்தி ஆர் வேல்யூ என்று மதிப்பீடு செய்துள்ளது. அதன்படி, தொற்று பரவல்…

மேலும்...

நரிகளின் ஊளையால் நலியும் இயக்கமல்ல – கி.வீரமணி

சென்னை (16 ஜூலை 2020): பெரியாரை சிலர் இழிவுபடுத்துவதால் இளைஞர்கள் ஆத்திரமடைந்து இலட்சியப் பயணத்திலிருந்து மாறி விடக் கூடாது என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் காவிகட்சிகள் என்னென்ன வெல்லாமோ ‘சித்து’ விளையாட்டுகள் ஆடிப் பார்த்தும் கால் ‘ஊன்ற’ முடியாத ஆற்றாமையால், திராவிடர் இயக்கத்தினரையும், அதன் மூலவேரான தந்தை பெரியார் அவர்களைப்பற்றியும் சிறுமதி கொண்ட சிலர் சமூக வலைதளங்களில் தங்களின் முகங்களை கழிவு நீரில்…

மேலும்...