ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க ஜவாஹிருல்லா கோரிக்கை!

சென்னை (08 ஜூலை 2020): “ஈரானில் சிக்கியுள்ள 44 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா எம் எச் ஜவாஹிருல்லா என்று மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஈரான் நாட்டிலிருந்து சமுத்திர சேது என்ற திட்டத்தின் மூலம் இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் ஜலஸ்வாA என்ற கப்பல் மூலம் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள்…

மேலும்...

ஏற்கனவே புதுக்கோட்டை இப்போது திருச்சி – பரபரப்பை ஏற்படுத்தும் சிறுமிகள் படுகொலை!

திருச்சி (07 ஜூலை 2020): திருச்சியில் 9 வகுப்பு மாணவி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் சோமரசன்பேட்டை, அதவத்தூர்பாளையம் பகுதியில், மதியம் ஒரு மணிவரை வீட்டில் இருந்த மாணவி கழிப்பிடம் செல்வதற்காக முள்ளிகரும்பூர் பழைய பாலம் பகுதிக்கு மாணவி சென்ற நிலையில், அவர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. மாணவியின் தந்தை பெரியசாமியும் மற்றும் மாணவியின் தாயாரும், உறவினர்களும் மாணவியை தேடிவந்தனர். இந்நிலையில் மாணவியின் சடலம் பாதி எரிக்கப்பட்ட நிலையில் முள்ளிகரும்பூர் பழைய பாலம் பகுதியில்…

மேலும்...

ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதிக்க சீமான் வலியுறுத்தல்!

சென்னை (06 ஜுலை 2020): ‘ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ’ எனும் பிரிவுக்கு தமிழக அரசு நிரந்தர தடைவிதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘சாத்தான்குளம் வணிகர்களது படுகொலைக்குப் பிறகு, தமிழகக் காவல்துறையினர் இதுநாள் வரை பயன்படுத்தி வந்த ‘ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ எனும் பிரிவுக்குத் தடைவிதிக்க வேண்டும் எனும் கோரிக்கை நாடெங்கிலும் பெருவாரியாக எழுந்துள்ள நிலையில் அதற்கு திருச்சி, தூத்துக்குடி…

மேலும்...

ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை இல்லை!

சென்னை (06 ஜூலை 2020): நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் கண்டனங்களையும் எழுப்பிய, சாத்தான்குளம், காவல்நிலைய இரட்டைக் கொலை தொடர்பாக, ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மீது விரல்கள் நீண்டதால், அதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் தடை வித்திக்கப்பட்ட நிலையில், சென்னையில் அந்த அமைப்புக்குத் தடை விதிக்கப்படவில்லை என செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், தெரிவித்திருக்கின்றார். வணிகர்கள் மற்றும் மக்களுடன் இணைந்து காவலர்களுக்கு உதவியாக இருக்கும் நோக்கில்தான்,…

மேலும்...

தமிழகத்தில் ஒரே நாளில் 4280 பேர் கொரோனாவால் பாதிப்பு!

சென்னை (06 ஜூலை 2020): தமிழகத்தில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 280 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்தபடியே உள்ளன. சென்னையில் ஆயிரத்து 842 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து ஒன்றாகவும், சென்னையில் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 538 ஆகவும் அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மாவட்டத்தில் 352 பேருக்கும், அதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் 251…

மேலும்...

காலாண்டு அரையாண்டு தேர்வு எழுதாதவர்களின் நிலை!

சென்னை (05 ஜூலை 2020): 10, 11ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுக்கு வருகை தரவில்லை என்றால் ஆப்சென்ட் அதாவது தேர்வுக்கு வருகை தரவில்லை என்று பதிவு செய்ய வேண்டும் என்று தேர்வுத்துறை கூறியுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், முகாம் அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். கொரோனாவின் தொற்று அதிகரித்து வந்த காரணத்தினால் 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்தது. மேலும் விடுபட்டுப்போன…

மேலும்...

விவசாயியை தரக்குறைவாக பேசிய போலீஸ் – அவமானத்தால் விஷம் குடித்த விவசாயி!

நாகை (05 ஜூலை 2020): பலர் முன்னிலையில் போலீஸ் தரக்குறைவாக பேசியதால் அவமானத்தில் விவசாயில் தற்கொலை முயரற்சியில் ஈடுபட்டுள்ளார். நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஏனங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (48). விவசாயி. பாண்டியன் குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. புகாரின் பேரில் சீர்காழி காவல்நிலைய எஸ்எஸ்ஐ கலியமூர்த்தி, இருதரப்பையும் நேற்றுமுன்தினம் காவல் நிலையம் அழைத்து விசாரித்துள்ளார். அப்போது பாண்டியனை எல்லோர் முன்னிலையில் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. மன உளைச்சலில் இருந்த பாண்டியன்…

மேலும்...

இன்னொரு பேரிடரை தாங்கிக் கொள்ள முடியாது – தமிழக அரசுக்கு கோரிக்கை!

சென்னை (05 ஜூலை 2020): சென்னைக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மீண்டும் ஒரு 2015வேண்டாம். வரும் முன் காத்திட நடவடிக்கை எடுங்கள்” என்று தொழிலாளர் அணி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசுக்கு தொழிலாளர்கள் அணி மாநில செயலாளர் விடுத்துள்ள கோரிக்கையில், “2015ம் ஆண்டு சென்னை மாநகரில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை விட நடப்பு ஆண்டில் 10மடங்கு பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு என கடந்த சில தினங்களுக்கு முன் ஐஐடி எச்சரிக்கை செய்துள்ளது. ஏற்கனவே சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில்…

மேலும்...

பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்குத் தடை!

விழுப்புரம் (05 ஜூலை 2020): விழுப்புரம் மாவட்டத்தில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தற்காலிகமாக தடை விதித்து மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகனுமான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி மதுரை உயர் நீதிமன்ற கிளை வழக்குப் பதிவு செய்து அதிரடி உத்தரவுகளை பிரப்பித்துள்ளது. மேலும் வழக்கு சிபிசிஐடி போலீசாரால் கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை…

மேலும்...

கொரோனா பாதிப்பால் சென்னைக்கு நிகரான மதுரை!

சென்னை (04 ஜூலை 2020): தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தபடியே உள்ளன. உலகையே புரட்டிப் போட்டுள்ள கொரோனாவால் இந்தியாவும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, சென்னை உள்ளிட்ட தலைநகரங்கள் அதிக அளவில் பாதிப்பை சந்தித்துள்ளன. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடீயாக மதுரை அதிக அளவில் பாதிப்பை சந்தித்துள்ளன. கொரோனா பாதிப்பு துவங்கி 100 நாளை கடந்துவிட்டது. ஆனால் மதுரையில் வைரஸின் பரவல் வேகம் ஜூன் பாதியில் தான்…

மேலும்...