தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை (29 ஜூன் 2020): தமிழகத்தில் நாளை (ஜூன் 30) ,முடிவடையும் ஊரடங்கு ஜூலை 31 ஆம் தேதி வரை நீடிப்பதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழகம் முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு தொடரும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, தேனி மாவட்டங்களில் தற்போது அமலிலுள்ள முழு ஊரடங்கு பலனளித்துள்ளதால், அதேபோன்ற முழு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு…

மேலும்...

ஊரடங்கு நீட்டிப்பா – மருத்துவக் குழு முதல்வரிடம் சொன்னது என்ன?

சென்னை (29 ஜூன் 2020): ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை மருத்துவக் குழு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து மருத்துவக்குழு அளித்துள்ள விளக்கத்தில், சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல; அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை. மற்ற மாவட்டங்களிலும் சென்னையை போல் சோதனையை அதிகரிக்க வேண்டும். தற்போது சென்னையில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் ஒரு நாளைக்கு 30…

மேலும்...

ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனிக்கு மக்கள் தூதர் விருது!

சென்னை (29 ஜூன் 2020): ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனிக்கு லண்டனில் உள்ள உலக மனிதநேய அமைப்பு சார்பில் கொரோனா பணிக்காக சிறந்த மக்கள் தூதர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது : இங்கிலாந்து நாட்டின் தலைநகரமாக உள்ள லண்டனில் தலைமையிடமாக கொண்ட உலக மனித நேய அமைப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே….

மேலும்...

சென்னை மாநகராட்சியின் அதிரடி உத்தரவு!

சென்னை (29 ஜுன் 2020): சென்னையில் ஒருவருக்கு கொரோனா உறுதியானால் குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவர் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ” பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இனி வரும் காலங்களில் பரிசோதனை மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் பொதுமக்கள், பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் அவரது வீட்டில் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இல்லை என்று…

மேலும்...

நான் சொன்ன ஒன்றையும் கேட்கவில்லை – எடப்பாடி மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு!

சென்னை (28 ஜூன் 2020): கொரோனா பரவலை தடுக்க நான் கூறிய எந்த ஆலோசனைகளையும் முதல்வர் எடப்பாடி கேட்கவேயில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து இன்று ஸ்டாலின் தெரிவித்ததாவது: கொரோனாவை தடுக்க தொடர்ந்து நிறைய ஆலோசனைகளை தந்துள்ளேன். ஏராளமான மருத்துவர்கள் சொன்ன ஆலோசனைகளையும் சொன்னேன். இவர் என்ன சொல்வது நாம் என்ன கேட்கிறது என முதல்வர் அலட்சியமாக இருக்கிறார். கொரோனாவை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. கொரோனா சமூக…

மேலும்...

தமிழகத்தில் ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று!

சென்னை (28 ஜூன் 2020): தமிழகத்தில் ஒரே நாளில் 3,713 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 68 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளன. மகாராஷ்டிரா, டெல்லியை அடுத்து தமிழகம்தான அதிகப்படியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 34,805 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 3,713 பேரில் 2,300 பேர் ஆண்கள், 1,412 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவார் மேலும் கடந்த 24…

மேலும்...

கொரோனா நோயாளிகளை மருந்தே இல்லாமல் குணப்படுத்தியுள்ளோம் : அமைச்சர் விஜயபாஸ்கர்!

சென்னை (27 ஜூன் 2020): 40 ஆயிரம் கொரோனா நோயாளிகளுக்கு மருந்தோ, ஊசியோ இல்லாமல் குணப்படுத்தியுள்ளோம் என்று சுகாதராத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மருத்துவக் கல்லூரி டீன் குந்தவி தேவி ஆகியோர் கலந்து கொண்ட நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் கூறும்போது,…

மேலும்...

சென்னை கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக தகவல்!

சென்னை (27 ஜூன் 2020): சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் அரசு சார்பில் வெளியிட்டுயிருக்கிறார்கள் : விபரங்கள் பின்வருமாறு, ராயபுரம் – 7211 தண்டையார்பேட்டை – 5989, தேனாம்பேட்டை – 5655 பேருக்கு தொற்று இருக்கிறது என்ற அறிவிப்போடு, அண்ணா நகர் – 5397, கோடம்பாக்கம் – 5316, திரு.வி.க. நகர் – 4132 பேருக்கும் மேலும் அடையாறு – 3057, மாதவரம் – 1524, ஆலந்தூர் – 1229, அம்பத்தூர் – 1982…

மேலும்...

சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த அதிர்ச்சி!

தூத்துக்குடி (27 ஜூன் 2020): தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் போலீசார் தாக்கியதால் தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சமப்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூலித்தொழிலாளி கணேச மூர்த்தி நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை. போலீசார் அவரை தாக்கியதே தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. உரிய விசரணை நடத்தக் கோரி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். போலீசார் மற்றும் கோவில்பட்டி கோட்டாட்சியர்விஜயா ஆகியோர் குடும்பத்தினருடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….

மேலும்...

தொலைக்காட்சி ஊழியர்கள் அதிர்ச்சி – கொரோனா பாதிப்பால் ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் மரணம்!

சென்னை (27 ஜூன் 20220): கொரொனா பாதிப்பால் ராஜ் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் வேல்முருகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது. இந்த நிலையில் சென்னையை சேர்ந்த ராஜ் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்துள்ளார். 40 வயதான அவர், கொரோனா தொற்றால் கடந்த வாரம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…

மேலும்...