புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்ல தடை!

சென்னை (14 டிச 2021): கொரோனா நோய் தடுப்பு தொடர்பான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில், பண்டிகைக் காலங்களில் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸை கருத்தில் கொண்டும், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்க…

மேலும்...

ஆணாக மாறிய பெண் – நண்பியை மணந்ததால் அதிர்ச்சி!

திருப்பூர் (13 டிச 2021): ஆணாக மாறிய பெண் ஒருவர் அவரது நண்பியை மணந்ததால் பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருப்பூரைச் சேர்ந்த, 21 வயது பெண், அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த ஒத்த வயதுடைய இன்னொரு பெண் அவருடன் வேலை செய்து வந்தார், இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக பழகி வந்தனர். இந்நிலையில், இரண்டு பெண்களில் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடலில்…

மேலும்...

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை (13 டிச 2021): தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக 13.12.2021, 14.12.2021 கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 15.12.2021, 16.12.2021: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான…

மேலும்...

ஆபாசமாக பேசிய பெண் ஆசிரியைகள் பணியிடை நீக்கம்!

சேலம் (13 டிச 2021): சேலத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக அரசுப்பள்ளி பெண் ஆசிரியர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட உமையாள்புரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் வரலாறு பட்டதாரி ஆசிரியராக அங்குலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த சில நாள்களாக பள்ளியின் தலைமை ஆசிரியரை அவதூறாக பேசி வந்துள்ளார். அதேபோல், மாணவர்களிடமும், அவர்களின் பெற்றோர் குறித்து ஆபாச வார்த்தைகளால் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர்…

மேலும்...

நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் கைது!

புதுக்கோட்டை (13 டிச 2021): குன்னூர் ஹெலிகாப்டர் குறித்து அவதூறாக பதிவிட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்த சம்பவத்தில், முக்கிய தலைவர்களை விமர்சனம் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். பா.ஜ.க.வைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், பிபின் ராவத்…

மேலும்...

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் உள்ளதா? – அமைச்சர் பதில்!

சென்னை (12 டிச 2021): தமிழ்நாட்டில் ஒமிக்ரான் கண்டறியப்படவில்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை டிஎம்எஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற 14-வது மெகா தடுப்பூசி முகாமில், 20 லட்சத்து 45 ஆயிரத்து 347 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தெரிவித்தார். 18 வயதுக்கு மேற்பட்டவர்களில், 83 புள்ளி 5 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியையும் 51 புள்ளி 3 சதவீதம் பேர் இரண்டாவது தவணை…

மேலும்...

அதிமுக மீது ராமதாஸ் பாய்ச்சல்!

தருமபுரி (12 டிச 2021): தருமபுரியில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாமக தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை தலைவரும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது இந்த நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசும் போது கூறியதாவது: பெரும்பாலான சமுதாயங்கள் இடஒதுக்கீடு வந்தது தவறு என கூறி உச்சநீதி மன்றத்தில் தடையாணை பெற முயற்சி மேற்கொள்கின்றன. ஆனால் தற்போதைய திமுக…

மேலும்...

ஒமிக்ரான் பரவலைத் தடுக்க மும்பையில் 144 தடை உத்தரவு!

மும்பை (11 டிச 2021): மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒமிக்ரான் அச்சத்தால் மும்பையில் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிராவில் ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்ததை அடுத்து மும்பை மாநகரில் டிசம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்று மேலும் பரவாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து ஊர்வலங்கள், பேரணிகள், சமுதாய நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து – மேலும் 6 ராணுவ வீரர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன!

ஊட்டி (11 டிச 2021): குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான மேலும் 6 ராணுவ வீரர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 8-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் பிரிகேடியர் லக்பிந்தர் சிங் லிட்டர் ஆகிய…

மேலும்...

யூடூபர் மாரிதாஸ் கைதுக்கு சீமான் கடும் கண்டனம்!

சென்னை (10 டிச 2021): யூடூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதை தமிழகம் மொத்தமும் ஆதரித்து வரும் நிலையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாரிதாஸ் கைதை கடுமையாக எதிர்த்துள்ளார். இதுகுறித்து சீமான் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: முப்படைகளின் தலைமை தளபதியின் ஹெலிகாப்டர் விபத்திற்கு தமிழகத்தை காஷ்மீருடன் இணைத்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக பாஜக ஆதரவு யூடியூபர் மாரிதாஸ் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது, கைது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை…

மேலும்...