பிரணாப் முகர்ஜி உடல் நிலை – ராணுவ மருத்துவமனை தகவல்!

புதுடெல்லி (27 ஆக 2020): முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நிலைய்யில் முன்னேற்றம் இல்லை என்றும் அவர் ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாகவும் டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. பிரணாப் முகர்ஜி, கடந்த 9-ந்தேதி உடல்நலக்குறைவால் டெல்லி ஆர்.ஆர்.ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பிரணாப் முகர்ஜி நினைவிழந்து ஆழ்ந்த கோமா நிலையில் இருப்பதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும், அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை…

மேலும்...

கல்லூரிகளில் அரியர்ஸ் தேர்வுகள் ரத்து – முதல்வர் அதிரடிஉத்தரவு!

சென்னை (26 ஆக 2020): கல்லூரிகளில் அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்கள் அனைவரும் பாஸானதாக அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் கல்லூரி இறுதியாண்டின் இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற தேர்வுகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக உயர்கல்வித்துறை…

மேலும்...

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் என்ன செய்ய வேண்டும்?

சென்னை (26 ஆக 2020): கொரோனாவிலிருந்து மீண்டாலும் அதன் பக்க விளவுகளிருந்து மீள்வதற்கு சிலமாதங்கள் ஆகின்றன என்கின்றனர் கொரோனா பாதித்து மீண்டவர்கள். கொரோனா கிருமியானது உடலில் புகுந்து ரத்த அணுக்களில் கெட்டி தன்மையை ஏற்படுத்துவதால் நுரையீரலிலும் கெட்டி தன்மையும் ஏற்படுகின்றது. இதனால், கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு வீடு திரும்பினாலும் அதன் பாதிப்பு சில மாதங்களுக்கு தொடரும் என்கின்றனர் மருத்துவர்கள். கொரோனாவில் இருந்து விடுபட்டாலும் அடுத்த மூன்று மாதங்கள் தங்களை தொடர்கண்காணிப்பில் வைத்து கொள்ள வேண்டும் என்று…

மேலும்...

இப்போதைக்கு வாய்ப்பில்லை – கடம்பூர் ராஜு திட்டவட்டம்!

சென்னை (25 ஆக 2020): திரையரங்குகளை இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சினிமா படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வழங்கியது. இந்த நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, “அதிகளவில் மக்கள் கூடுவர்…

மேலும்...

ஆதரவு ரஜினிக்கு..! சேர்ந்தது பா.ஜ.க-வில்!.!

சென்னை (25 ஆக 2020): ரஜினி ஆதரவாளரான முன்னாள் கர்நாடக ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை குப்புசாமி, பாஜகவில் இணைந்தார். தமிழ்நாட்டின் கரூரில் இருந்து வந்த முன்னாள் கர்நாடக ஐ.பி.எஸ் அதிகாரி, பெங்களூரு தெற்கில் துணை போலீஸ் கமிஷனராகவும், உடுப்பி மற்றும் சிக்மகளூர் மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றியுள்ளார். பல ஆண்டுகளாக காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய பின்னர், 2019 ல் நெருங்கிய நண்பர் இறந்ததைத் தொடர்ந்து குப்புசாமி தனது வேலையை விட்டு விலகினார். பின்னர் அவர் தனது சொந்த…

மேலும்...

திமுகவுக்கு ஆதரவான நீதிமன்ற தீர்ப்பு!எடப்பாடி அதிர்ச்சி..!!

சென்னை (25 ஆக 2020): திமுக மீது உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்வதாக சென்னை உயா்நீதிமன்றம் இன்று தீா்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்டப் பொருள்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்து, சட்டப்பேரவைக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக்கூறி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு சட்டமன்ற உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இதனை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி, திமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த…

மேலும்...

மேலக்காவேரியில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழா!

கும்பகோணம் (25 ஆக 2020): தஞ்சை மாவட்டம், கும்பகோணம், மேலக்காவேரி மிஸ்வா மற்றும் தஞ்சை சித்தர் அருட்குடில் இணைந்து 200 தென்னம்பிள்ளைகள் & பழமரக்கன்றுகள் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது. நேற்று 24-08-2020,திங்கள் கிழமை காலை 10 மணி அளவில் மேலக்காவேரி பள்ளிக்கேணி குளக்கரையில் மேலக்காவேரி மிஸ்வா மற்றும் தஞ்சை சித்தர் அருட்குடில் இணைந்து 200 தென்னம்பிள்ளைகள் & பழமரக்கன்றுகள் நடும் விழா மேலக்காவேரி பள்ளிக்கேணி குளக்கரையில் சமூக இடைவெளியை கடைபிடித்து நடந்தேறியது.. நிகழ்ச்சியை பிரபல தொழிலதிபர்…

மேலும்...

அப்படி நான் சொல்லவே இல்லை – எஸ்பிபி சரண் மறுப்பு!

சென்னை (24 ஆக 2020): எஸ்பி பாலசுப்ரமணியனுக்கு கொரோனா பாசிட்டிவ் என்று வெளியான செய்தியில் உண்மையில்லை என்று எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்பி.பாலசுப்ரமணியம் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நேற்று தகவல் வெளியிட்டதாக எஸ்பிபி சரண் தெரிவித்தார். இந்நிலையில் இன்று எஸ்.பி.சரண் தரப்பிலிருந்து வெளியானதாக பரவிய தகவலின்படி, எஸ்.பி.பிக்கு கரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டதில் நெகட்டிவ்…

மேலும்...

கொரோனாவிலிருந்து மீண்டார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்!

சென்னை (24 ஆக 2020): பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாக அவரது மகன் எஸ்.பிபி சரண் தெரிவித்துள்ளார். எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா பாதிப்பு காரணமாக, சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் “மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் எஸ்.பி.பி. கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார். தந்தை எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது” இவ்வாறு எஸ்.பி.பி.யின் மகன் சரண் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த வாரம் எஸ்பிபியின் உடல் நிலை மிகவும்…

மேலும்...

நீட் தேர்வு – சுப்பிரமணியன் சாமி கருத்து!

புதுடெல்லி (23 ஆக 2020): நீட் தேர்வை தீபாவளிக்குப் பிறகு நடத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று . ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். ஜே.இ.இ. முதன்மை தேர்வு அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறும் எனவும், நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதி அன்றும் நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது…

மேலும்...